பேச்சு:வறுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏழ்மையா வறுமையா மிகப் பொருந்திய சொல்லாடல்? --Natkeeran 13:51, 25 மார்ச் 2007 (UTC)

வறுமையில் இருப்பவர் ஏழை. ஏழ்மையில் இருப்பவர் வறுமையாக முடியாது :) வறுமை தான் பொருத்தமான சொல்--ரவி 13:57, 25 மார்ச் 2007 (UTC)

ஏழ்மையில் இருப்பவர் ஏழை, வறுமையில் இருப்பவர் வறியவர்!! --Natkeeran 13:59, 25 மார்ச் 2007 (UTC)

ஏழ்மை degree என்ற கருத்துருவை கொண்டிருக்கின்றது. வறுமையில் நிலை இல்லை. வறுமை வறுமைதான். --Natkeeran 14:12, 25 மார்ச் 2007 (UTC)

வறுமை சிற்றூர்களிலும் படிக்காதவர்களும் கூட சொல்லும் சொல். ஏழை என்ற சொல் தான் அவர்கள் புழங்கக்கேட்டிருப்பதால் ஏழ்மையைக் காட்டிலும் வறுமை இயல்பான சொல்லாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏழை->ஏழ்மை ஊடகங்கள் உருவாக்கிய சொல்லோ என்றும் தோன்றுகிறது. வறுமைக்கோடு போன்று சொற்கள் இருப்பதையும் கவனிக்கலாம். ஏழ்மை என்ற சொல்லில் தனியாக degree இருப்பதாகத் தோன்றவில்லை. --ரவி 15:09, 25 மார்ச் 2007 (UTC)

வறுமை என்ற கட்டுரைத் தலைப்பே போதுமானதே. வறுமை நிலை என்று சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன்--ரவி 15:16, 25 மார்ச் 2007 (UTC)

ரவி, ஒரு சமூகத்தில் எத்தனை வீதம் மக்கள் வறுமைக் கோட்டுக்குள் கீழ் வாழ்கின்றார்கள் என்ற ஒரு முக்கிய அளவீடு உண்டு. அதை எப்படி குறிப்பிடலாம்? --Natkeeran 15:28, 25 மார்ச் 2007 (UTC)


இக் கட்டுரையின் தலைப்பு வறுமை நிலை என்றும், உள்ளே கட்டுரையில் எல்லா இடங்களிலும் ஏழ்மை என்றும் காணப்படுகின்றது. தலைப்பிலும் வறுமை என்று இருந்தால் போதுமானது. வறிய நிலை தான் வறுமை. அதனால் இன்னொரு நிலை தேவையில்லை என்பது எனது கருத்து.

நான் இன்று எழுதிய வறுமை கட்டுரையும் இதே விடயத்திலேயே அமைந்துள்ளது. இரண்டையும் இணைத்து விடலாம். மயூரநாதன் 20:32, 12 ஜூலை 2008 (UTC)


வறுமை என்பது ஒரு relative கருத்துரு, அதை எப்படி Measure செய்வது என்பதை en:Poverty threshold அல்லது poverty line என்று துல்லியமாக காட்ட வேண்டும். அதற்கேற்றபடி இந்தக் கட்டுரையை மாற்றி எழுத வேண்டும். --Natkeeran 20:40, 12 ஜூலை 2008 (UTC)

poverty line என்பது பொதுவாக வறுமைக் கோடு எனப்படுகின்றது. வறுமை நிலை என்பதும் வறுமை என்பதைப்போல ஒரு relative கருத்துருவாகவே எனக்குப் படுகின்றது. மயூரநாதன் 02:39, 13 ஜூலை 2008 (UTC)
நன்றி விரைவில் மாற்றி விடுகிறேன். --Natkeeran 14:04, 13 ஜூலை 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வறுமை&oldid=1930340" இருந்து மீள்விக்கப்பட்டது