பேச்சு:வதையா இறப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

euthanasia என்பதற்கு கருணைக் கொலை என்பது பொருத்தமான சொல்லாகப் படவில்லை. ஆங்கிலச் சொல்லின் மூலம் நல்ல இறப்பு என்ற பொருளைத் தருகிறது. பார்க்க: "Euthanasia (from the Greek: εὐθανασία meaning "good death": εὖ, eu (well or good) + θάνατος, thanatos (death)) refers to the practice of intentionally ending a life in order to relieve pain and suffering." mercy killing என்பதற்கு ஆங்கிலக் கட்டுரையில் en:Non-voluntary euthanasia என்ற கட்டுரைக்கே இட்டுச் செல்கிறது. --Natkeeran (பேச்சு) 16:23, 16 மார்ச் 2013 (UTC)

வதையா இறப்பு, வலியற்ற இறப்பு, தெரிவுச் சாவு[தொகு]

வதையா இறப்பு, வலியற்ற இறப்பு, தெரிவுச் சாவு போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். --Natkeeran (பேச்சு) 16:27, 16 மார்ச் 2013 (UTC)

கருணைக்கொலை[தொகு]

கருணைக்கொலை என்பது ஆங்கில மூலத்தில் இருந்து உருவான சொல்லல்ல அது தமிழில் பன்னொடும் காலமாக பயன்படும் சொல், எதற்காக ஆங்கிலத்தில் காணப்படும் அர்த்தத்தை ஒத்த புதிய சொல் உருவாக்க வேண்டும்?--−முன்நிற்கும் கருத்து 112.135.197.25 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஆமோதிக்கிறேன். ஆங்கில விக்கியில் euthanasia வை voluntary, non-voluntary, involuntary என மூன்று வகைப் படுத்தியுள்ளார்கள். இங்கு அவ்வாறு நாம் நான்கு தனித்தனிக் கட்டுரைகள் எழுத வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. கருணைக்கொலை என்ற ஒரு கட்டுரையிலேயே அனைத்தைப் பற்றியும் கூறி விடலாம். வேறு சில மொழி விக்கிகளிலும் (உ+ம்: உருசியம்) இவ்வாறே எழுதப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 11:30, 17 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வதையா_இறப்பு&oldid=1382375" இலிருந்து மீள்விக்கப்பட்டது