பேச்சு:வண்ண வான்வெடி முழக்கம் (ஹொங்கொங்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரண்டும் முற்றிலும் வேறான வெவ்வேறு கட்டுரைகள்.

  • Hong Kong Fireworks பற்றிய கட்டுரை (இது சிறப்பு நாட்களில் மட்டும் நடைப்பெறும் நிகழ்வு)
  • Hong Kong Symphony of Lights பற்றிய கட்டுரை (அது ஒவ்வொரு நாளும் இரவு 8:00 மணிக்கு இடம்பெறும் "கதிரியக்க மின்னொளி வீச்சு" நிகழ்வு.

இவை இணைக்கப்பட வேண்டியவை அல்ல. --HK Arun 03:14, 2 அக்டோபர் 2011 (UTC)

அப்படியே இருந்தாலும், தனிக் கட்டுரைக்கான தகவல்கள் போதுமானவையாக இல்லை. படங்களை விட மேலும் தகவல்கள் சேர்க்கவிருக்கிறீர்களா? en:Lunar New Year Fireworks Display in Hong Kong என்ற கட்டுரையையும் பாருங்கள்..--Kanags \உரையாடுக 03:21, 2 அக்டோபர் 2011 (UTC)

ஆங்கில விக்கியில் லூனார் (சீன) புத்தாண்டு நிகழ்வு குறித்த கட்டுரையே அது. அவ்வாறு பல சிறப்பு நாட்கள் உள்ளன. நான் ஹொங்கொங் நடக்கும் அனைத்து சிறப்பு நாட்கள் "வண்ண வான்வெடி முழக்கம்" குறித்த நிகழ்வு தொடர்பாக எழுதப்பட்டுள்ளது. எல்லாவற்றிக்கும் ஆங்கில கட்டுரை எழுதப்பட்டிருக்கும் முறையையே ஒப்பிட்டு அல்லது தழுவுதல் முறையல்ல. (அங்கே திருத்தபட வேண்டிய, மாற்றியமைக்க வேண்டியவை பல உள்ளன.)--HK Arun 03:31, 2 அக்டோபர் 2011 (UTC)

//அப்படியே இருந்தாலும், (அதென்ன 'அப்படி இருந்தாலும்?) தனிக் கட்டுரைக்கான தகவல்கள் போதுமானவையாக இல்லை.// நான் ஆரம்பித்த கட்டுரைகள் குறையில் நிற்பதன் காரணம் எழுதமுடியாமை அல்ல; நேரம் கிடைக்கும் போது மட்டுமே பங்களிக்க முடியும் என்பதால். விக்கிப்பீடியா ஒரு கூட்டுமுயற்சி தானே, "அப்படி இருந்தாலும்" என எழுதும் நேரத்தில் நான்கு வரியை எழுதிவிட்டு போகலாமே! அதுவல்லோ விக்கிக்கு வளர்ச்சி தரக்கூடிய செயல்பாடு. --HK Arun 03:46, 2 அக்டோபர் 2011 (UTC)

கட்டுரைகளை நீக்குவதற்கு “உள்ளடக்கம் போதாது” என்றொரு தனி வரையறை உள்ளது. உங்கள் கட்டுரையல்ல யாருடைய கட்டுரையென்றாலும் ஒரு வரியாகப் பல நாட்கள் நீடித்தால் நீக்கல்/ இணைப்பு குறித்து பரிசீலிப்பது இயல்பு. கனக்ஸ் நீக்குவதற்கு பதில் இணைக்கலாம் என்று பரிந்துரைக்கிறார். இங்கு கட்டுரைகள் இடம்பெற குறைந்தபட்சத் தகுதிகள் என சிலவற்றைக் கொண்டுள்ளோம். ஒரு வரிக்கட்டுரைகள் வேண்டாமென்பது அதிலும் ஒன்று. அதனைப் பின்பற்றுவோரிடம், “எனக்கு நேரமில்லை நீங்கள் செய்தால் என்ன” என்று சொல்லாமல், அதைச் சொல்லும் நேரத்தில் கூடுதல் உள்ளடக்கங்களை சேர்ப்பது தான் வ்க்கிக்கு வளர்ச்சி தரக்கூடிய செயல்பாடு. --சோடாபாட்டில்உரையாடுக 04:34, 2 அக்டோபர் 2011 (UTC)

இந்தக் கட்டுரைக்கான தகவல்களை இணையத்தில் தேடி மேம்படுத்தித் தருகிறேன்.--Kanags \உரையாடுக 04:20, 2 அக்டோபர் 2011 (UTC)

கட்டுரையை மேம்படுத்தி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி! ஆனாலும் ஒரு திருத்தம் //தகவல்களை இணையத்தில் தேடி மேம்படுத்தித் தருகிறேன்// என்பது, என்னவோ நீங்கள் எனக்கு "மேம்படுத்தித் தருகிறேன்" என்பது போல் உள்ளது. அவ்வாக்கியத்தை மேம்படுத்துவோம் என்று எழுதியிருந்தால் வாசிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும். விக்கிப்பீடியாவின் கூட்டுமுயற்சிக்கான பொது சொல்லாடலாகவும் இருந்திருக்கும். பரவாயில்லை! --HK Arun 18:03, 2 அக்டோபர் 2011 (UTC)

கருத்துக்கு எதிர்கருத்திடும் நோக்கை மட்டுமே கொண்ட விவாதப் பேச்சு[தொகு]

சோடாபாட்டிலுக்கு, //கட்டுரைகளை நீக்குவதற்கு “உள்ளடக்கம் போதாது” என்றொரு தனி வரையறை உள்ளது. உங்கள் கட்டுரையல்ல யாருடைய கட்டுரையென்றாலும் ஒரு வரியாகப் பல நாட்கள் நீடித்தால் நீக்கல்/ இணைப்பு குறித்து பரிசீலிப்பது இயல்பு.//

இங்கே //கனக்ஸ் நீக்குவதற்கு பதில் இணைக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்.// என்பது நீங்களே கற்பிதம் செய்துக்கொண்டு, கருத்துக்கு எதிர்கருத்து இடுவதை மட்டுமே நோக்கமாக கொண்ட விவாதப் பேச்சு; அர்த்தமற்ற கூற்றும் கூட. ஒரே தகவல் கொண்ட இரண்டு கட்டுரைகளை இணைக்கப் பரிந்துரைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத இரண்டு கட்டுரைகளை (உள்ளடக்கம் போதாது என்பதால்) இணைக்கப் பரிந்துரைக்கலாம் என எந்த விக்கிப்பீடியாவில் எந்த இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?

நான் விளங்கிக்கொண்ட வகையில், சிறிதரன் இரண்டும் ஒரே தகவல் கொண்ட கட்டுரைப் போல் இருப்பதால் (ஒரே தகவல் கொண்ட இரண்டு கட்டுரைகள் என எண்ணி) இணைப்புப் பரிந்துரைப்பு வார்ப்புரு இட்டதாகவே கருதுகிறேன். அதற்கான விளக்கம் (இரண்டும் முற்றிலும் வேறான இரண்டு கட்டுரைகள் என) என்னால் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளடக்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது 2,081 பைட்டுகள் உள்ளன. அதன் பின்னரே இந்த உரையாடல் இங்கு நிகழ்கிறது. அந்தவகையில் இந்த உரையாடல் தேவையற்ற வகையில் நீடிக்கப்படுகிறது.

அத்துடன் நான் எழுதிய கட்டுரை குறையில் நிற்பதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளேன். விக்கி போன்ற திட்டங்களில் பங்களிக்கும் எந்த பயனரும், தமது தொழில்நிலைக்கு அமைவாகவும், கிடைக்கும் நேரத்தைப் பொறுத்துமே பங்களிக்க முடியும். அதனைத்தான் நேரம் கிடைக்கும் போது மட்டுமே பங்களிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளேன். கூடவே "விக்கிப்பீடியா ஒரு கூட்டுமுயற்சி தானே, "அப்படி இருந்தாலும்" என எழுதும் நேரத்தில் நான்கு வரியை எழுதிவிட்டு போகலாமே!" என்பதையும் கூறியுள்ளேன்.

தவிர, இங்கு கட்டுரைகள் இடம்பெற குறைந்தபட்சத் தகுதிகள் என சிலவற்றைக் கொண்டுள்ளோம். அவ்வாறு நீங்கள் கொண்டுள்ள தகுதிகள் ஏற்புடையதல்ல. எம்மிடம் மாற்றுக்கருத்துக்கள் உண்டு. விக்கிப்பீடியா என்பது ஒரு கூட்டு முயற்சி. இங்கே எல்லோரும் உரையாடியே ஒன்றை கொள்கையாகக் கொள்ளமுடியும். இதற்கான உரையாடல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. அங்கே மயூரநாதன், நீக்குவதில் ஆர்வம் காட்டாது அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடிய தரத்துக்கு உயர்த்துவதே நல்லது. என தெளிவாகவே கூறியுள்ளார். அதே கொள்கையையே நானும் கொண்டுள்ளேன். அவ்வாறான கருத்தும் செயல்பாடுமே ஒரு கூட்டுமுயற்சி திட்டத்தை வலுப்படுத்தக்கூடியன. --HK Arun 18:03, 2 அக்டோபர் 2011 (UTC)

>>நீங்கள் கொண்டுள்ள தகுதிகள் ஏற்புடையதல்ல. எம்மிடம் மாற்றுக்கருத்துக்கள் உண்டு. நீங்கள் சுட்டிய உரையாடல் நடந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. பல ஆண்டுகளாக உள்ள நடைமுறை - ஒரு வரிக்கட்டுரைகளை {{speed-delete-on}} வார்ப்புரு இட்டு நீக்கி வருகிறோம். ஒரு மாதகால அவகாசம் கொடுக்கப்பட்டு அப்போதும் விரிவுபடுத்தப்படவில்லையென்றால் நீக்குவதே இப்போதுள்ள வழக்கம். தற்போது பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து நிருவாகிகளும் கடைபிடித்து வரும் வழக்கம் தான். இது பற்றி அதன் பின் நடந்துள்ள உரையாடல்களை ஆலமரத்தடி தொகுப்புகளிலும் பிற திட்டப் பக்கங்களிலும் காணலாம். நீக்குவதற்கு முன்னால் நிருவாகிகள் அவற்றை முடிந்த வரை மேம்படுத்தப் பார்த்தே நீக்கி வருகிறோம். --சோடாபாட்டில்உரையாடுக 04:21, 3 அக்டோபர் 2011 (UTC)

மேலும் ஒரு விளக்கம்[தொகு]

நான் ஆங்கில விக்கியில் பங்களிப்பதில்லை. ஆனால் தமிழில் நான் தொடங்கிய சில கட்டுரைகள் ஆங்கிலத்தில் இல்லாததால், அங்கெ ஓரிரு வரிகளில் தொடங்கி மட்டும் வைத்ததுண்டு. அவை 1000 பைட்டுகளாக கூட இருக்கவில்லை. அவை எதுவும் அங்கு அளிக்கப்படவும் இல்லை. மாறாக வேறு பயனர்களால் மேம்படுத்தப்பட்டுள்ளது. எவர் தொடங்கிய கட்டுரையாயினும் (விக்கிக்கு ஏற்ற கட்டுரையாயின்) அவை மேம்படுத்தப்பட வேண்டியவைகளே. அதுவே விக்கிப்பீடியா என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதற்கான அடையாளமாக முடியும்.--HK Arun 18:28, 2 அக்டோபர் 2011 (UTC)

ஆங்கில விக்கியின் new page patroller கள் கையில் அவை சிக்கவில்லை அவ்வளவே. இப்போதும் யாரேனும் அங்கு ஒரு PROD nomination செய்தால் ஒரு வாரத்தில் யாரும் விரிவுபடுத்தவில்லையெனில் நீக்கப்பட்டுவிடும். இப்போது அவை நீக்கப்பட்டதிருக்கக் காரணம் ஆங்கில விக்கியில் தினம் உருவாகும் 1200 கட்டுரைகளை ஒவ்வொன்றாக ஆராய ஆள்பலம் இல்லாமையே. அங்கும் கடுமையான notability விதிகள் உண்டு. ஒவ்வொரு விக்கியும் அதற்கேற்ற விதிகளைக் கொண்டுள்ளது - ஒரே மாதிரியான விதிகளைக் கொண்டு அனைத்து விக்கிகளும் இயங்குவதில்லை - எ.கா போர்த்துகேய விக்கியில், மிகக் கடுமையான விதிகள் உள்ளன. ஒரு வரிக்கட்டுரை எழுதினால் தடை கூட செய்யப்படலாம். அவற்றையெல்லாம் இங்கு பின்பற்ற முடியாது. நமது சூழலுக்கு/தேவைக்கு ஏற்ற வழக்கங்களையே இங்கு கொண்டுள்ளோம்.--சோடாபாட்டில்உரையாடுக 04:21, 3 அக்டோபர் 2011 (UTC)

ஓர் அன்பு வேண்டுகோள்[தொகு]

எனது பார்வையில் இது விடயமான இந்த விவாதம் கூடிய தூரத்திற்குப் போவதைப் போலவே தோன்றுகின்றது. HK Arun, Kanags, சோடாபாட்டில் மூவருக்கும் ஓர் அன்பு வேண்டுகோள் கூட்டுமுயற்சியில் எல்லாவற்றையும் விட மேலாக புரிந்துணர்வு அவசியம். பல கருத்துகள் விவாதிக்கப்பட்டு விட்டன. எனவே பிளீஸ்... வேண்டாம். விட்டுவிடுவோம். --P.M.Puniyameen 05:01, 3 அக்டோபர் 2011 (UTC)