பேச்சு:வணிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வணிகம் என்ற கட்டுரை business என்ற ஆங்கில கட்டுரையுடன் இணைக்க பட்டிருக்கிறது . வணிகம் என்ற கட்டுரையுடன் இணைக்கலாம் . அப்படி இணைக்கும் பொருட்டு business என்ற ஆங்கில கட்டுரைக்கு இணையாக தொழில் என்று அல்லது வேறு கட்டுரை எழுதவேண்டும் அல்லது இணைக்க வேண்டும். தொழில் , பொருளியல் , வியாபாரம் , வணிகம் , வர்த்தகம் என்று அனைத்து தலைப்பிலும் கட்டுரை தொகுத்து ,பின்னர் அனைத்தையும் பகுக்க வேண்டும் . வர்த்தகக் குறி என்பது அவ்வளவு நன்றாக இல்லை . வணிகக்குறி என்று மாற்ற வேண்டும். அதற்கு அனுபவம் வாய்ந்தவர்கள் உதவி செய்வது நல்லது. மேலும் வணிகவியல் என்ற பகுப்பில் வர்த்தகம் , தொழில் , வியாபாரம் போன்ற தலைப்புகளை வைக்கலாம்.--இராஜ்குமார்

ஆங்கில விக்கியில் உள்ள Business என்ற கட்டுரை வணிக நிறுவனம் என்பதைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. தமிழில் வர்த்தகம், வணிகம் இரண்டும் ஒன்றுதான். அதனை ஆங்கிலத்தின் trade என்ற கட்டுரையுடன் இணைக்கலாம்.--Kanags \பேச்சு 10:20, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
வணிகம் என்பதன் பொருள் business என்று இருப்பது சரிதானா ? - --இராஜ்குமார்

மேலும் விளக்கம் தேவைப்படுகிறது. business என்பதற்கே வணிகம் என்ற சொல் பொதுப் பயன்பாட்டில் இருக்கிறது!!--Natkeeran 16:02, 18 திசம்பர் 2010 (UTC)


குறிப்புகள்[தொகு]

இடப்படும் முதலுக்கு (பணம், நேரம், முயற்சி) எங்கே அதிக பண இலாபம் கிடைகின்றதோ அங்கே பணத்தை முதலீடு செய்வதைப் பிரதானமாக மேற்கொள்ளும் வியாபரங்களை முதலாளித்துவ வியாபாரம் எனலாம். வியாபரத்தின் தன்மையையோ, விளைவுகளையோ நோக்காமல் முதலுக்கு அதி உச்ச இலாபத்தைத் தேடுவதே முதலாளித்துவ வியாபாரத்தின் குறிக்கோள். உலகின் பெரிய விற்பனை நிறுவனமான வோல் மார்ட் முதலாளித்துவ வியாபரத்துக்கு ஒரு சிறந்த உதாரணம்.


பொதுவாகத் தரமான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலமாகவோ, அல்லது சேவையை வழங்குவதன் மூலமாகவோ முதலாளித்துவ வியாபரம் இலாபம் ஈட்டுகின்றது.


பண இலாபத்தையே ஒரே குறியாகக் கொண்டு இயங்குவதால் வியாபாத்தினுடன் தொடர்புகொண்டிருக்கும் மனிதர்களை, வியாபாரத்தினால் விளையும் கணக்கில் எடுக்க நிர்பந்திக்கப்படாத சூழலியல் விளைவுகளை, வியாபாரம் இயங்கும் சமூகத்தை முதலாளித்துவம் புறக்கணிக்க, கவனத்தில் எடுக்காமல் விட ஏதுவாக இருக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வணிகம்&oldid=650029" இருந்து மீள்விக்கப்பட்டது