பேச்சு:வட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாழ் முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம் என்று தலைப்பிடுவது பொருத்தமாக இருக்கும். --ரவி 13:45, 9 ஜூன் 2007 (UTC)

ஆட்சேபனை இல்லை.--Kanags 14:03, 9 ஜூன் 2007 (UTC)
யாழ் என்பதைவிட யாழ்ப்பாணம் என்று முழுமையாக வைப்பதே சிறந்தது --மாஹிர் 14:18, 9 ஜூன் 2007 (UTC)

யாழ்ப்பாணம் முஸ்லீம்கள் என்று எழுதுவது சரியாக இருக்குமா?--ரவி 16:19, 9 ஜூன் 2007 (UTC)

யாழ்ப்பாணம் மாத்திரம் அல்ல மன்னாரில் இருந்தும் முஸ்லீம்கள் வெளியேறினார்கள் இது தாமாக யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதால் வெளியேறினார்களாக அல்லது விடுதலைப் புலிகளால் வெளியேறுமாறு கோரப்பட்டதா?. யாராவது தெரிந்தால் சேர்த்துவிடவும். யாழ்ப்பாணத்தில் சொற்ப அளவினரே மீளக்குடியமர்ந்தனர். இது முஸ்லீம்கள் மாத்திரம் அல்ல இடம்பெயர்ந்த தமிழர்களும் பெரும்பாலும் மீளக் குடியமரவில்லை. இதற்கு யாழ்ப்பாணப் போர்ச்சூழல் காரணமாக இருக்கும் என்றே நினைக்கின்றேன். கட்டுரை கலைக்களஞ்சியத்தரத்திற்கேற்ப நடுநிலையுடன் எழுதப்படவேண்டும்.--Umapathy 13:17, 10 ஜூன் 2007 (UTC)

யாழ்ப்பாண / வட மாகாண வெளியேற்றம்[தொகு]

முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டும் வெளியேற்ற படவில்லை, முழு வட மாகாணத்திலிருந்தும் வெளியேற்ற பட்டனர். மொத்தமாக 58,500 முஸ்லிம்கள் வட மாகாணத்திலிருந்து வெளியேற்ற பட்டனர்.

மேலுள்ள தகவலைத் தந்த அநாமதேயப் பயனருக்கு நன்றிகள்.--Kanags 06:25, 11 ஜூன் 2007 (UTC)
முழு வடமாகாணத்திலும் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டால் என்பது சரியாகத் தெரியவில்லை ஏனெனில் வவுனியா பட்டாணிச்சூர் மற்றும் செட்டிக்குளம் பகுதியில் உள்ளவர்கள் வெளியேறியமாதிரித்தெரியவில்லையே ஆயினும் வவுனியா மன்னார் வீதியில் இருந்த முஸ்லீம்கள் வெளியேறி அனுராதபுரம் மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளியேறியவர்கள் பெரும்பாலும் புத்தளத்திற்கும் வவுனியாவில் இருந்து வெளியேறியவர்கள் அனுராதபுரத்திலும் அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர் என்பதுதான் சரியானது. தலைப்பை மாற்றவேண்டும். --Umapathy 15:37, 11 ஜூன் 2007 (UTC)

//யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் "முசுலிம்கள் துரோகிகள் என்றும், காட்டிக்கொடுப்பவர்கள் என்றும் தமிழ் மக்களிடையே ஒரு தேய்வழக்கு வழங்கி வந்தது" என எழுதியுள்ளது.// இந்த வசனம் இந்தக் கட்டுரைக்கு தேவையற்றது. இது முஸ்லிம்கள் தொடர்பாக தவறான எண்ணத்தை தோற்றுவிக்க கூடியது. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு என்பது முழுமையாக விடுதலைப் புலிகள் சார்பானதாகவே இயங்கியது. இங்கு முஸ்லிம்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்ற வசனத்துக்குப் பதிலாக // முஸ்லிம்கள், பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபடும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களாக இருந்ததனால் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை துரோகிகளாக பார்த்தார்கள்// என்பதுதான் உண்மை. அதேநேரம் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளை, போராளிகள் என்று வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆகவே ஒரு இனத்தை குற்றமின்றி தாக்கும் இவ்வாறான சொற்பிரயோகங்கள் தவிர்க்கப்பட வேண்டும். கட்டுரையகள் நடுநிலை பேணப்பட வேண்டும். --Fasly (பேச்சு) 10:35, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

பசுலி, நீங்கள் முதலில் ஈழப்போராட்ட வரலாற்றை முழுமையாகப் படித்து விட்டு எழுதுங்கள். தென்னிலங்கையில் இருந்து வரும் அரசசார்பு, லங்காபுவத் செய்திகளை மட்டும் படித்து விட்டு எழுத வேண்டாம். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு பற்றி உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான். பெயரில் யாழ்ப்பாணம் என்று இருந்தவுடன் அதற்கு புலிகள் முத்திரை குத்துவது தென்னிலங்கையில் வழக்கம். போர் முடிந்து ஏழு ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இன்னும் புலிப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 10:58, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் பற்றி அதிகமாக படித்திருக்கின்றேன்.நிங்கள் கூறுவது போன்று தென்னிலங்கைச் செய்திகள் அரச சார்பாக இருந்தால் யாழில் இருந்து வரும் செய்திகள் புலிகள் சார்பானதாக இருக்கும் என்பதில் தவருண்டா? அதேபோன்றுதான் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பும். அதன் முழுமையான வரலாற்றைப் பாருங்கள். மற்றது யுத்தம் முடிந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தக் கொள்கை இன்னும் விட்டுப் போகவில்லை. சரியான நடுநிலைத் தன்மையுடன் கட்டுரைகளில் சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் விண் வாதம் தேவையில்லை.--Fasly (பேச்சு) 11:27, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

உங்கள் விருப்பம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என விக்கிக் கட்டுரைகளில் எழுத வேண்டும். அவர்கள் போராளிகள் என எழுதக் கூடாது. அப்படித்தானே? இதுதானே நீங்கள் விரும்பும் நடுநிலை?--Kanags \உரையாடுக 11:34, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

பயங்கரவாதிகளை பயங்கரவாதிகள் என்று கூறுவதில் என்ன தவறு?--Fasly (பேச்சு) 11:39, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

இனிமேல் உங்களுடன் உரையாடுவதில் பயனில்லை. நன்றி.--Kanags \உரையாடுக 11:58, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

பயங்கரவாதத்தில் ஈடுபடக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் பயங்கரவாதிகள் தான். விடுதலைப் புலிகளை போராளிகள் என்று கூறினால் ஐஎஸ் அமைப்பினரையும் போராளிகள் என்று கூறலாமா? இசுலாமிய அரசு என்ற கட்டுரையை பாருங்கள். ஆரம்பமே ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு குழுக்களுக்கும் என்ன பாரிய வித்தியாசங்கள்? இங்கு தீவிரவாதிகள் என்பதுவும் என்னைப் பொருத்த மட்டில் தவறு. தீவிரம் என்பது ஒவ்வொரு மனிதனும் சில விடயங்களில் தீவிரம் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆகவே ஒவ்வொரு மனிதனும் தீவிரவாதி தான். திவிரவாதி என்பது பயங்கரமான சொல் அல்ல. ஆனால் தீவிரவாதி என்ற சொல் இப்போது நோக்கப்படுவது பயங்கரவாதிக்கு நிகராகவே.பயங்கரவாதம் என்பது வேறு. ஆகவே, போராளி, தீவிரவாதி, பயங்கரவாதி மூன்று சொற்களும் வெவ்வேறு அர்த்தங்கள் உடையவை. இந்த இரண்டு குழுக்களுமே பயங்கரவாதிகள் தான். வளரும் இளம் சமூகத்திற்கு விக்கியில் சந்தேகம் இருக்காதவாறு கட்டுரைகள் அமைய வேண்டும். --Fasly (பேச்சு) 16:31, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

Fasly உண்மை நீங்கள் சொல்வது 100% உண்மை தமிழ் விக்கிபீடியாவில் விடுதலைப் புலிகள் சார்பான அதிக நடுநிலையற்ற வகையில் எழுதப்பட்ட கட்டுரைகள் அதிகம் இருக்கின்றன.இவ்வாறான கட்டுரைகளின் நோக்கம் நிச்சயமாக இலங்கையின் எதிர்கால இளைய சமுதத்தில் விடுதலைப் புலியினரை நல்லவர்களாகவும் மாவீரர்களாகவும் அடையாளப்படுத்தவே. யாரவது விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களை கூறி விட்டால் அவரைத் தடை செய்ய வழி அமைக்கிறார்கள் இதே நிலைமை தொடர்ந்தால் தமிழ் விக்கிபீடியா தமிழ் - - விக்கிபீடியாவாக மாறிவிடும். வளரும் இளம் சமூகத்தின் உள்ளத்தில் இலங்கை தொடர்பாக நஞ்சை விதைக்கும் விதமாக கட்டுரைகளை உருவாக்க முயல்கிறார்கள்

இது போன்ற தீய நடவடிக்கைகளின் மூலம் இலங்கையின் இளம் சமூகத்தின் மனதில் நஞ்சை விதைக்க விதைக்க முயல்கிறார்கள்.இது போன்ற நடவடிக்கைகளால் நிச்சயமாக எதிர்காலத்தில் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பது எனது கணிப்பு .ஏற்கனவே சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர் புலி அமைப்புகளும் எமது நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.இலங்கை அரசாங்கம் ஏற்கனவே குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வரும் வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்துள்ளது . நான் இதுவரை தமிழ் விக்கிபீடியாவில் இருந்து சுமார் 250 மேட்பட்ட கட்டுரை மற்றும் உரையாடல் விடுதலைப் புலிகளை ஆதரித்து செயட்படுத்தல், பயங்கரவாதிகளை புகலுதல் ,விடுதலைப் புலிகள் மேட்கொண்ட தாக்குதல்களை ஆதரிக்கும் விதமாக கட்டுரைகளில் சொற்பிரயோகங்கள் பயன்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை பதிவு செய்து வைத்துள்ளேன் இதே நிலைமை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வரும் தமிழ் வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்துள்ளது . நான் இதுவரை தமிழ் விக்கிபீடியாவில் இருந்து சுமார் 250 மேட்பட்ட கட்டுரை மற்றும் உரையாடல் விடுதலைப் புலிகளை ஆதரித்து செயட்படுத்தல், பயங்கரவாதிகளை புகலுதல் ,விடுதலைப் புலிகள் மேட்கொண்ட தாக்குதல்களை ஆதரிக்கும் விதமாக கட்டுரைகளில் சொற்பிரயோகங்கள் பயன்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை பதிவு செய்து வைத்துள்ளேன் இதே நிலைமை தமிழ் விக்கிபீடியாவில் இனியும் நீடிக்குமேயானால் இலங்கையின் தேசிய பாதுகாப்பு கருதி தமிழ் விக்கிபீடியாவை இலங்கையில் தடை செய்யக்கோரி கொழும்பு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் வழக்கு தொடர்வேன்.--Mohamed ijazz (பேச்சு) 20:31, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

திரு மயூரநாதன்,அ. ரவிசங்கர்,கனகரத்தினம் சிறீதரன்,சண்முகம்,சுந்தர்,செல்வ சிவகுருநாதன்,பாஹிம் கவனத்துக்கு --Mohamed ijazz (பேச்சு) 21:02, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

அன்புடன் இஜாாஸ், விடுதலைப் புலிகளைப் பற்றிய கட்டுரைகளில் காணப்படும் நெகிழ் தன்மையும் அவர்களை நல்லவர்களாகவும் அரசாங்கத்தை எப்போதும் கெட்டவர்களாகவும் சித்தரிக்கும் போக்கு இங்கு காணப்படுவது உண்மையே. நானும் அத்தகைய நடுநிலைமையற்ற செயற்பாட்டை வன்மையாக எதிர்க்கிறேன். அண்மையில் என்னைத் தடை செய்ததும் இதே காரணத்துக்காகவே என்பது திண்ணம். தமிழ் விக்கிப்பீடியா என்பது விடுதலைப் புலிகளினின் பிரச்சாரக் களமல்ல. இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே.--பாஹிம் (பேச்சு) 03:04, 10 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

இந்தப் பேச்சு பக்கத்தில் இதை எழுதுவதால் இங்கு குறிப்பிடும் கருத்துக்கள் குறித்த கட்டுரைக்கு மாத்திரமானதல்ல. விடுதலைப் புலிகள் சம்பந்தமான அனைத்துக் கட்டுரைகளுக்கும் பொதுவாகவே எழுதுகின்றேன். அது சம்பந்தமான அனைத்துக் கட்டுரைகளிலும் மாற்றப்பட வேண்டிய சொற்கள், வசனங்கள் நிறையவே இருக்கின்றன. உதாரணமாக, போராளிகள், தமிழீழ விடுதலை, போராடினார்கள், ஈழப்போராட்டம், வீரச்சாவு, தமிழர் தாயகம், இவ்வாறான பிரழாயன சொற்களை தங்களது சொந்த வலைத்தளங்களில் தாராளமாக பயன்படுத்தலாம். விக்கிப்பீடியாவில் குறித்த கட்டுரைகளில் புலிகளை நியாயப்படுத்தும் விதமாக எழுத முடியாது. இங்கு உண்மை மட்டுமே இருக்க வேண்டும். ஏன் பிரபாகரனை பயங்கரவாதி என்று கூற முடியாது? மகாத்மா காந்தி, அவர்கள் ஒரு தியாகி, போராட்ட வீரர், போராளி. விடுதலைப் புலிகளை, போராளிகள் என்று கூறினால் பிரபாகரனையும் காந்தியையும் ஒன்றாக ஒப்பிட முடியுமா?

அதேபோல், இந்தக் கட்டுரையில் வரும் //யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் "முசுலிம்கள் துரோகிகள் என்றும், காட்டிக்கொடுப்பவர்கள் என்றும் தமிழ் மக்களிடையே ஒரு தேய்வழக்கு வழங்கி வந்தது" என எழுதியுள்ளது.// இந்த வசனம் தேவையற்றது. மாறாக அந்த வசனம் தேவை எனக் கருதினால் வசனத்தை முழுமையாக குறிப்பிடுங்கள். "முஸ்லிம்கள், பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபடும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களாக இருந்ததனால் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை துரோகிகளாக பார்த்தார்கள்" என்று அந்த வசனத்தை முழுமைப்படுத்துங்கள்.

முஸ்லிம்கள் காட்டிக் கொடுப்பாளர்கள் என்பது புலிகளின் கருத்து. இதனை வாசிக் கூடியவர்களும் இதனை தவறாக புரிந்து கொள்வார்கள். ஆகவே ஒரு கட்டுரை எழுதும் போது தவறான பக்கத்தில் (அதாவது பயங்கரவாதிகளின்) பக்கத்தில் இருந்து கொண்டு எழுதக் கூடாது. அது சமூகத்தை தவறாக வழிநடத்தும். நடுநிலையாக (அதாவது சரியான பக்கத்தில்) இருந்து கொண்டு எழுதி அந்த வசனம் முழுமைப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் விக்கிப்பீடியா என்பது பொதுச் சொத்து. இதில் பங்களிக்கக்கூடியவர்கள் பயனர்களின் தேவைக்காக இந்த விக்கிப்பீடியா இல்லை. வாசிப்பவர்களின் தேவைக்காகவே, வருங்கால சமூகத்திற்காகவே அனைத்துப் பயனர்களும் பங்களிக்கிறார்கள். ஆகவே தனிப்பட்ட ஒரு சிலரின் தேவைப்படி இந்த விக்கிப்பீடியாவை இயக்கிச் செல்ல முடியாது.

பாஹிம் இஜாஸ் இதேபோன்று நான் இதற்கு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விக்கியில் தொடர்ந்து பங்களித்து வந்தேன். எனது கட்டுரைகளை மாத்திரம் நீக்குவதிலும் எச்சரிக்கை விடுவதிலும் சிலர் தீவிரம் காட்டுவதை அறிந்தேன். விக்கிப்பீடியாவில் தொடர்ந்து தேடிப்பார்த்தால், எச்சரிக்கை விடுக்க வேண்டிய, நீக்க வேண்டிய கட்டுரைகள் நிறைய இருப்பதை அறிந்தேன். ஆனால் என்னில் மாத்திரம் சிலரின் குறி இருந்தது. (நடுநிலையாக நீதியாக செயற்பட்டு ஆறுதல் கூறியவர்களும் இருக்கிறார்கள்) நியாயம் கேட்டால் தனி நபர் தாக்குதல், விக்கி கொள்கை மீறல் குற்றச்சாட்டுக்கள். ஒரு சிலரின் தேவைக்காக தமிழ் விக்கி இயங்குவதாக உணர்ந்து ஒதுங்கி இருந்தேன் சிலகாலம். நான் ஏன் ஒதுங்க வேண்டும். விக்கிப்பீடியா ஒரு திறந்த களம். நான் தவறாக பயன்படுத்தவில்லையே. ஆகவே நான் ஏன் ஒதுங்க வேண்டும்?

என்னுடைய கட்டுரைகளை நீக்கியவர்களும் எச்சரிக்கை விட்டவர்களும் இது போன்ற கட்டுரைகளில் உள்ள இவ்வாறான பாரிய பிழைகளை (முறைகேடுகளை) இதுவரை கண்டுகொள்ளாதது ஏன்?--Fasly (பேச்சு) 04:48, 10 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]