பேச்சு:வசீலி சுகோம்லின்சுக்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசீலி சுகோம்லின்சுக்கி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

பரிதிமதி, நல்ல கட்டுரை. நன்றி. --செல்வா 18:52, 7 ஜூலை 2009 (UTC)

மாந்த அன்பாளர்! அருமையான சொல்! நன்றி செல்வா. --பரிதிமதி 19:00, 7 ஜூலை 2009 (UTC)
ஓ, நீங்கள் கண்டு மகிழ்ந்தது அறிந்து மகிழ்ச்சி. இவர் பெயரை சுக்கோம்லின்சுக்கி என்று எழுதினால் ஏறாத்தாழ சரியாக இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் கருத்தை வேண்டுகிறேன். Noam Chomsky அவர்களின் பெயரை நோம் சோம்சுக்கி குறித்திருக்கின்றோம். --செல்வா 20:17, 7 ஜூலை 2009 (UTC)
Васи́лий Алекса́ндрович Сухомли́нский வசீலி சுகோம்லின்ஸ்கி அல்லது வசீலி சுகோம்லின்சுக்கி என்றிருக்க வேண்டும்.--Kanags \பேச்சு 21:24, 7 ஜூலை 2009 (UTC)
நன்றி கனகு; வசீலி சுகோம்லின்சுக்கி என்று தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிறேன். பரிதிமதி, நீங்கள்தான் தமிழில் இவரைப்பற்றி முதன்முதலாக விரிவாக கட்டுரையை எழுதியவராக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அருள்கூர்ந்து, நன்றாக வளர்த்தெடுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முத்தான கட்டுரைகளில் ஒன்றாக இது விளங்கட்டும். ஓரளவுக்கு நன்றாக வளர்ந்தபின் இதனை முதற்பக்கக் கட்டுரையாக தேர்ந்தெடுக்கப் பரிந்துரைக்கின்றேன். நல்லவர்களைப் பற்றியும் அருஞ்செயல் ஆற்றியவர்களைப்பற்றியும் நாம் எல்லோரும் அறிந்துகொள்ள ஒரு நற்களமாக விக்கிப்பீடியா திகழவேண்டும். --செல்வா 13:48, 8 ஜூலை 2009 (UTC)
கண்டிப்பாக. ஆனால் என் வேகம் சற்று [நிறையவே!] குறைவு. நிற்க. செல்வா, பெயரிடலில் [குறிப்பாக, மனிதப்பெயர்கள்] தாய்மொழி [தாய்நாட்டவர்] உச்சரிப்பு [இக்கட்டுரையின் தலைப்பே ஒரு எடுத்துக்காட்டு], தமிழ்ப்படுத்திய உச்சரிப்பு [எ-டு. யூசைன் போல்ட்- இற்குப் பதிலாக உசேன் (Hussain?!) போல்ட்டு -- உகாரத்தை கவனிக்கவும்], ஆங்கிலச்சொல்லையொட்டிய உச்சரிப்பு [எ-டு.கிர்க்காஃப்- இற்குப் பதிலாக கிர்ச்சாஃப்] போன்ற சில முறைகள் விக்கியிலேயே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது குறித்து ஒரு அலசல் தேவை. இல்லையா?--பரிதிமதி 17:25, 8 ஜூலை 2009 (UTC)
ஆம் அலசலாம். ஆனால் இதுவரை கையாண்ட முறை தாய்நாட்டவர் ஒலிப்புக்கு நெருக்கமாக, தமிழ் மொழியின் இயல்புக்கு இசைந்தவாறு பெயர்த்தல். கனகு அவர்கள் உருசிய மொழியை நன்கு படிக்கத்தெரிந்தவர். நானும் படிப்பேன் ஆனால் பயிற்சி குன்றிவிட்டது (என் மேற்படிப்பின் அடிப்படைத் தேவையாக ஐ.ஐ.டி மும்பாயில் உருசிய மொழியைத் தொழில்நுட்ப நோக்கில் இலக்கணத்துடன் படித்தேன்; தூசு தட்டி புதுப்பிக்கவேண்டும் என் சிற்றறிவை). ஒலிப்பில் ஆங்கில மொழியை எல்லா இடத்திலும் பின்பற்றுவது தேவை இல்லை. தாய்மொழியாளர் ஒலிப்புக்கு நெருக்கமாக இருப்பதை நாம் பின்பற்றுவது சரியான முறையாக இருக்கும். ஆங்கில ஒலிப்புக்கானவற்றை மாற்றுவழிகளாகத் தரலாம். --செல்வா 17:40, 8 ஜூலை 2009 (UTC)

"தாய்நாட்டவர் ஒலிப்புக்கு நெருக்கமாக, தமிழ் மொழியின் இயல்புக்கு இசைந்தவாறு பெயர்த்தல்" - நல்ல வழிகாட்டல். நடைக்கையேட்டில் சேர்க்கலாம்--ரவி 18:05, 8 ஜூலை 2009 (UTC)