பேச்சு:வகுப்பு (கணினியியல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுப்பு என்பது சற்று கூடிய கருத்து புலம்பக்கூடிய சொல்லாக இருக்குமா?--Natkeeran 23:44, 23 பெப்ரவரி 2006 (UTC)

எனக்கென்னவோ வகுப்பு என்ற சொல்லே சரியாகத் தோன்றுகிறது. பகுப்பு என்பது ஏற்கெனவே இருக்கக் கூடிய பாகுபாடுகளில் ஒன்றைச் சார்ந்திருப்பதைப் போன்ற ஒரு பொருளைத் தருவதாகத் தோன்றுகிறது. இது முழுக்க முழுக்க எனக்கு தோன்றியதை வைத்து கூறிய கருத்து. இது தவறாக இருக்கக் கூடும். மற்றபடி நற்கீரனின் அண்மைய முயற்சி பாராட்டத்தக்கது. -- Sundar \பேச்சு 03:56, 24 பெப்ரவரி 2006 (UTC)
I agree, Thanks for the comments. --Natkeeran 12:46, 24 பெப்ரவரி 2006 (UTC)

functions, methods என்பதற்கு செயலிகள் என்பது சரியில்லை. செயற்பாடுகள் என்றால் இன்னும் நன்றாக இருக்கலாம். "attributes and functions" என்பது பொருள் நோக்கு நிரலாக்கத்தில் பிரபலமான சொல். இந்த சொற்றொடர் தரும் அனுபவத்தை மொழி பெயர்த்தல் நன்றாக இருக்கும். இயல்புகளும் இயக்கங்களும் - இயல்புகளும் ..... --மு.மயூரன் 22:40, 26 ஜூலை 2006 (UTC)