பேச்சு:லைடன்
ரவி லைடன் (நெதர்லாந்து) என்று பெயரை மார்த்தவும். இலங்கையிலும் ஒரு லைடன் உண்டு. பார்க்க: லைடன் தீவு. --Natkeeran 17:28, 24 பெப்ரவரி 2007 (UTC)
- லைடன் தீவு என்ற பெயர் வேலணைத்தீவுகு ஒல்லாந்துக்காரரால் வைக்கப்பட்ட பெயர். தம்மூரை நினைவுபடுத்தி வைத்த பெயர். தமிழ்ப் பெயரான வேலணைத்தீவினை விடுத்து லைடன் தீவு என்பது ஏன் முதன்மைப்படுத்தப்பட்டதென்று தெரியவில்லை. வேலணைத் தீவு என்பதே முதன்மைப் படுத்தப்படுவது நல்லது. --கோபி 17:56, 24 பெப்ரவரி 2007 (UTC)
- கோபி, லைடன் தீவு என்பதே பொதுப் பயன்பாட்டில் இருக்கும் செல். இங்கு நூல்களில் எல்லாம் அதுவே பயன்படுகின்றது. அத்தோடு, வேலணை அங்குள்ள வேலணை கிராமத்தோடு குழப்பத்தை தரலாம். எனவே லைடன் தீவே பொருத்தம். அத்தோடு பெயர் நன்றாகவும் இருக்கின்றது. உச்சரிப்பும் தமிழ் படுத்தப்பட்டுள்ளது. --Natkeeran 18:06, 24 பெப்ரவரி 2007 (UTC)
நற்கீரன், நான் புங்குடுதீவான். லைடன் தீவென்பதைத் தாண்டியே யாழ்ப்பாணம் வருவோம். லைடன் தீவென்ற பெயர் நாளாந்தப் பயன்பாட்டில் இல்லை என்பது நான் அறிந்தது. இப்பொழுது உறுதிப்படுத்தியும் கொண்டேன். ஊர்காவற்றுறை, வேலணை, அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதே அத்தீவு. அதற்குப் பொதுத் தமிழ்ப் பெயரொன்று இன்மையே லைடன் தீவென்ற பெயர் புழக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் எமக்குத் தெரிந்து அங்கு செல்வதை வேலணை செல்வதாகவே குறிப்பிடுவதால் வேலணைத்தீவு என்பது பொருத்தம் என்கிறேன். --கோபி 18:36, 24 பெப்ரவரி 2007 (UTC)
- வேலணை என்பதும் வழக்கத்தில் இருக்கின்றது. மறுக்கவில்லை. ஆனால், நூல்களில் எல்லாம் லைடன் தீவு என்றுதான் இருக்கின்றது. எ.கா சப்த தீவுகள், இடப்பெயர் ஆய்வு. நீங்கள் கூறியது மிகச் சரி. பொதுப் பெயராகவே பயன்பட்டு வருகின்றது. --Natkeeran 18:41, 24 பெப்ரவரி 2007 (UTC)
இல்லை, நற்கீரன். உலக அளவில் இது தான் முதன்மையான லைடன் :) அதனால் இது முதன்மையான பக்கமாக இதே தலைப்பில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். லைடன் தீவு என்று தெளிவாகத் தானே உள்ளது. தவிர, அந்த லைடன் தீவுக்கு இதில் இருந்து தான் பெயர் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். கோபி சொல்வது போல் வேலணைத் தீவு என்ற பெயரை முதன்மைப்படுத்தலாம். நெதர்லாந்தின் இன்னும் சில நகரங்கள் பெயரும் இலங்கையில் இருக்கிறது என்று நினைக்கிறேன் --Ravidreams 17:58, 24 பெப்ரவரி 2007 (UTC)
- ரவி, உலக அளவில் ?? அது என்ன உலக அளவு. லைடன் என்று வேறு நாடுகளில் ஊர்கள் இருக்கின்றன. எனவே லைடன் (நெதர்லாந்து) பொருத்தம் என்றே தோன்றுகின்றது. லெய்டன் என்றும் எழுத்துக்கூட்டலாம். --Natkeeran 18:06, 24 பெப்ரவரி 2007 (UTC)
நற்கீரன், ஆங்கில விக்கியில் நெதர்லாந்து லைடனே முதன்மைப் பக்கமாக உள்ளது. வழிப்படுத்தல் லெய்டன் என்ற பெயரில் உள்ள ஊர்களுக்கே தரப்பட்டுள்ளது. இங்கு, லைடனுக்கு லெய்டனுக்கும் இடைப்பட்ட ஒலியில் ஊர்ப்பெயரை உச்சரிக்கிறார்கள். ஆனால், அது லைடன் என்ற உச்சரிப்புக்கே நெருங்கி உள்ளது. --Ravidreams 21:03, 24 பெப்ரவரி 2007 (UTC)
Start a discussion about லைடன்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve லைடன்.