பேச்சு:ரீமன் இசீட்டா சார்பியம்
சார்பு, சார்பியம் இரண்டும் ஓன்றே. எனவே பொதுப் பயன்பாட்டில் இருக்கும் சார்பை முதன்மைப்படுத்தினால் நன்று.
மேலும், relativism, Unilateralism, DERIVATIVE என பல பொருள்கள் சார்பியத்துக்கு கூகிளில் கிடைக்கிறது...எனவே இங்கு சார்பு என்ற பொருளில் பயன்படுத்துது மேலும் குளப்பும்.
--Natkeeran 16:47, 4 ஏப்ரல் 2009 (UTC)
function என்பதற்கு சார்பு என்னும் சொல் பயன்பாட்டில் உள்ளதை அறிவேன். ஆனால் அது வழுவான சொல்லாட்சி என்று நினைக்கிறேன். முன்னர் செயற்கூறு என்னும் சொல்லை ஆண்டுவந்தோம். சார்பு + அம் சார்பம் என்றாவது இருத்தல் வேண்டும். அல்லது சார்பகம், சார்புறு, சார்புக்கூறு என்று ஏதேனும் சரியான ஒரு வடிவம் கொண்ட சொல்லாக இருக்க வேண்டும். ஒரு பொருளுக்கு பல்வேறு சூழல்களில் பல்வேறு பொருள்கள் இருப்பது தவறல்ல. சார்பியம் என்னும் சொல்தான் சரியென்று என்று நான் சொல்லவில்லை. சார்பு என்ற சொல் பொருத்தமான வடிவம் கொண்டிருக்கவில்லை. சார்பு என்னும் சொல்லும் பிற சூழல்களில் பிற பொருட்கள் கொண்டிருப்பதையும் நீங்கள் பார்க்கலாம். சார், சார்ந்திருத்தல் என்னும் கருத்து சரியானதே, ஆனால் சொல் வடிவம் சரியானதாக இல்லை என்று நினைக்கிறேன். தேர், தேர்வு என்பது போல் சார், சார்வு, சார்பு என்பதும் பெயர்ச்சொல்லாகக் கொள்ளலாம் என்று தோன்றினாலும், function என்னும் கருத்துக்கு ஏற்ற வடிவாக இல்லை.சார்வம் என்று கூடச்ச்சொல்லலாம். சார்கை, சார்வை என்று இன்னும் பல வடிவங்களை எண்ணிப்பார்க்க்கலாம். சார்பு என்னும் சொல் proprortional, relative, dependent, supportive என்பது போல் பொருள் தருகின்றது. சைவத்திருமுறையில் ஆறாம் திருமுறையில் வரும் பாடலில் சார்வு என்னும் சொல்லை "பற்றுக்கோடு", support, root,source என்னும் பொருளில் ஆண்டுள்ளார்கள் (பார்க்கவும்:):
தீயாகி நீராகித் திண்மை யாகித்
திசையாகி அத்திசைக் கோர்தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே
எனவே நேர், நேர்வு, நேர்பு, நேர்ச்சி, நேர்கை, நேர்மை, நேர்த்தி, போன்ற பலவடிவங்களையும் பெயர்ச்சொல்லாக ஆளலாம், ஆனால் ஒவ்வொன்றுக்கும் நுட்பமாய் உட்பொருள் பொருந்தி வரும் வடிவம் இருக்கும். இதே போல சார், சார்வு, சார்பு, சார்கை, சார்மை, சார்வை, சார்தி, சார்த்தி என்று பல வடிவங்கள் கொள்ளலாம். சார்ந்து இருப்பது என்னும் பொருளில் சார்பம், சார்வை, சார்புறு என்பன போன்ற சொற்கள் பொருத்தமானவை என்று நினைக்கிறேன். சார்பியம் என்றுதான் இருக்கவேண்டுமென்று கூறவில்லை. எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.--செல்வா 15:59, 5 ஏப்ரல் 2009 (UTC)
- செல்வா, சொற்கள் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு பொருள் கொள்ளும் என்பது சரியே. பரவலாக பயன்பாட்டில் இருக்கும் எல்லா சொற்களும் நல்ல சொல்லாக்கம் இல்லை என்பது சரியே. சார்பு என்று ஏன் function இணையாக பயன்பாட்டுக்கு வந்தது என்று நான் அறியேன். பரவலாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு தமிழ் கலைச்சொல்லை மாற்றி எழுதும் பொழுது அதற்கு மிகவும் தகுந்த காரணங்கள் வேண்டும். அத்தோடு கலைச்சொல்லாக்க பயன்பாட்டில் ஒத்திசைவும் வேண்டும். செல் வடிவம் பொருந்த வில்லை என்கிற உங்கள் கூற்று ஏற்கக்கூடியது. பிறர் பயனர் கருத்துக்களையும் கேட்டறிவோம். --Natkeeran 16:48, 5 ஏப்ரல் 2009 (UTC)
- function என்பதற்கு ஏன் சார்பு என்று பெயரிட்டிருக்கிறார்கள் என்றால், f(x) என்பது x என்பதைச் சார்ந்து உள்ள ஒன்று என்று குறிக்க. இச்சொல் எக்காலத்தில் இருந்து வழக்கில் உள்ளது என்று
அறியேன். முன்னர் செயற்கூறு என்னும் சொல் வழக்கில் இருந்தது. f(x)இன் எண் மதிப்பு x என்னும் எண்மதிப்பைச் சார்ந்து உள்ளது என்பது எளிய முதல்நிலை அறிவு. Function என்பது மேலும் பொதுவான ஒரு கருதுகோள், நுண்புல நீட்சி கொண்டது. மற்றவர்கள் கருத்தையும் அறியலாம். சார்பு என்பதற்கு மாறாக சார்புறு என்று ஒரு று சேர்த்து பயன்பட்த்தினால் பொருள் சரியாக இருக்கும். --செல்வா 17:48, 5 ஏப்ரல் 2009 (UTC)
Start a discussion about ரீமன் இசீட்டா சார்பியம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ரீமன் இசீட்டா சார்பியம்.