பேச்சு:ராம் நாத் கோவிந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழில் இராம் நாத்து கோவிந்து என்று இடுவதுதான் முறையான தலைப்பு. தமிழில் கோவிந்த் என -ந்த் என இரண்டு மெய்யெழுத்துகள் வந்து முடியுமாறு எழுதுதல் பிழை. --செல்வா (பேச்சு) 23:44, 21 சூன் 2017 (UTC)

தமிழ் விக்கியில் ர வரிசை எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள் பல இருக்கின்றன. பொதுவாக, பெயர்ச்சொற்களுக்கு இலக்கணம் இல்லை. அதிலும் வேற்று மொழிப் பெயர்ச் சொற்களுக்கு தமிழ் இலக்கணம் பார்க்கவேண்டிய அவசியமில்லை. விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். தகவல்களை மக்களுக்குத் தருவதே அதன் தேவை. அதிக இலக்கண வழு இல்லாது பார்த்துக்கொண்டாலே போதும். இலக்கணம் என்று சொல்லிப் பெயர்களைச் சிதைப்பது கலைக் களஞ்சியம் என்ற மூல நோக்கத்தை வழி தவறச் செய்வதாகவே அமையும். --UKSharma3 உரையாடல் 02:37, 15 சூலை 2017 (UTC)
இந்தக் கட்டுரையில் சில தகவல்களைச் சேர்க்கலாமென நினைத்தே பக்கத்துக்கு வந்தேன். முதலில் பெயர் பற்றிய முடிவு வரட்டும். அதுவரை மாற்றம் செய்வதைத் தள்ளிப்போட்டுள்ளேன. ஏனெனில் நான் செய்ய நினைத்துள்ள மாற்றங்களில் பெயர் இடையிடையே வரும். --UKSharma3 உரையாடல் 02:41, 15 சூலை 2017 (UTC)

திரு ஜெயராமன் அனைத்திந்திய வானொலியின் புதுதில்லி, சென்னை வானொலி நிலையங்களில் பணியாற்றியவர். இயல், நாடக நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், செய்தி வாசிப்பவராகவும், தமிழில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போது சென்னை வானொலியின் ஆலோசகராகவும், புதியவர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். பல நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறார். நேற்று (16/07/2017) அவரிடம் இந்த பெயர் பற்றிய விளக்கத்தைக் கேட்டேன். இடத்தின் அல்லது மனிதர்களின் பெயர்களுக்கு இலக்கணம் பார்க்க வேண்டியதில்லை, பார்க்கவும் கூடாது என அவர் சொன்னார். இது விடயமாக அனைத்திந்திய வானொலியில் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிஞர்களின் விவாதம் நடைபெற்றதாகவும் இலக்கண விதிகள் வினைச்சொற்களுக்கேயன்றி பெயர்ச்சொற்களுக்கு அல்ல எனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் ஆகவே பெயர்களை உள்ளது உள்ளபடியே எழுதவேண்டும் எனத் முடிவு செய்யப்பட்டதாகவும் சொன்னார். நாத் என்பதை நாத்து என்றும் கோவிந்த் என்பதை கோவிந்து என்றும் எழுதினால் அந்தச் சொற்களின் கருத்து மாறிவிடும் என்றும் சொன்னார். .... தகவலுக்காக இதை இங்கே பதிந்துள்ளேன். --UKSharma3 உரையாடல் 01:15, 17 சூலை 2017 (UTC)

பயனர்:Uksharma3 நீங்கள் கட்டுரையைத் தொடர வேண்டுமானால் ராம் நாத் கோவிந்த் என்றே எழுதுங்கள். இலக்கண முறைப் பெயரை முதல் வரியில் தந்துள்ளேன்.--Kanags \உரையாடுக 02:14, 17 சூலை 2017 (UTC)
நன்றி. ஒரு பணியில் ஈடுபட்டுள்ளேன். ஒரு வார்த்துக்குள் செய்கிறேன். --UKSharma3 உரையாடல் 05:09, 17 சூலை 2017 (UTC)