பேச்சு:ரவிசுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வணக்கம். ரவிசுப்பிரமணியன் கட்டுரைக்கு அவருடைய முகநூலிலிருந்தோ, அவரிடமிருந்தோ புகைப்படம் பெற்று இணைக்க விரும்புகிறேன். அவரது புகைப்படத்தைப் பெற்று இணைக்க அவரிடம் பெறவேண்டிய அனுமதி குறித்துத் தெரிவிக்கவேண்டுகிறேன். இவரைப் போல இன்னும் சிலருக்கு அனுமதி பெறாமல் நான் இட்ட புகைப்படங்கள் முன்னர் நீக்கப்பட்டுவிட்டன. நெறிமுறை அறிந்து, உரியவர்களுடைய அனுமதி பெற்றுப் பதிய தற்போது முயற்சிக்கிறேன். கருத்தறிந்து தொடர்வேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:44, 2 மே 2015 (UTC)

வணக்கம். தற்போது ரவிசுப்பிரமணியன் புகைப்படத்தை எடுத்தவரிடம் அனுமதி கேட்டு பெறப்பட்டு காமன்ஸ்க்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி பெறப்பட்டபின் புகைப்படம் சேர்க்கப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:40, 18 பெப்ரவரி 2017 (UTC)

திருலோக சீதாராம்[தொகு]

கவிஞர் ரவி சுப்பிரமணியன் தன் சமுபத்திய படைப்பாக கவிஞர், இலக்கியவாதி, மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர் திருலோக சீதாராமைப்பற்றி 70 நிமிடக் குறும்படம் என்ற ஆம்பல் அமைப்பு வாயிலாக வழங்கியிருக்கிறார் என்ற தினமணி கதிர் (17 ஜனவரி 2016) இணைப்பில் பக்கம் 3இல் வெளிவந்த செய்தி இணைக்கப்பட்டது. ஆவணப்படம் தொடர்பாக மேற்கொண்டு விவரம் பெறும்போது சேர்க்கப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:22, 17 சனவரி 2016 (UTC)