பேச்சு:யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பட்டியலில் பல ஊர்கள் விடுபட்டுள்ளன. பயனர்கள் இப்பட்டியலை ஒரு முழுமையான பட்டியலாக ஆக்கி உதவுமாறு கேட்டுக் கோள்கிறேன். யாழ்ப்பாணத்தில் உள்ள சிற்றூர்களையும் இங்கு பட்டியலிடலாம்.--Kanags \பேச்சு 19:59, 31 ஜனவரி 2008 (UTC) வணக்கம் Kanags, வலிகாமப் பகுதியில் பண்ணாகம் என்ற ஊரின் பெயரினையும் சேர்த்து விடுவீர்களா. மேலும் சில ஊர்கள் தொல்புரம், சித்தன்கேணி, ஆனைக்கோட்டை, பொன்னாலை, பணிப்புலம்

மாகிர், இப்பட்டியலில் உள்ள பெரும்பாலான ஊர்களுக்கு கட்டுரைகள் உள்ளன. அதை விட வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும். கட்டுரை இல்லாத ஊர்களுக்கு அவ்வூர்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் வேண்டுமா? அவ்வாதாரங்கள் கிடைத்தால் அவற்றைக் கொண்டே தனித் தனிக் கட்டுரைகள் எழுதமுடியும்.--Kanags \உரையாடுக 21:20, 17 செப்டம்பர் 2015 (UTC)
பட்டியல்களுக்கும் சான்று தேவையே. இல்லாவிட்டால், இவை யாழ்ப்பாணத்தில் தான் உள்ளன என்று உறுதிப்படுத்த முடியாது. இங்கு ஒவ்வொன்றாகச் சான்றுகளைக் கொடுக்க வேண்டியதில்லை. இவ்வாறான பட்டியல்களையோ பொருத்தமான அரசுக் கணக்கெடுப்புகளையோ சான்றுகளாகக் கொடுக்கலாம். --மதனாகரன் (பேச்சு) 23:48, 17 செப்டம்பர் 2015 (UTC)
கனகு, இந்த பட்டியல்களை வார்ப்புருவாக மாற்றிவிடலாமே, வார்ப்புரு:தஞ்சாவூர் மாவட்டம் போன்று. --Mdmahir (பேச்சு) 01:48, 18 செப்டம்பர் 2015 (UTC)
இல்லை, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு குறிச்சிகளின் பெயர்களையும் உள்ளடக்குவதே எனது முதன்மையான நோக்கம். அவை நூற்றுக் கணக்கிலும் இருக்கலாம். அவற்றின் பெரும்பாலானவற்றுக்கு தனிக் கட்டுரைகளும் தேவைப்படாது. எனவே தனிப் பட்டியலாக இருப்பதே நல்லது. விரைவில் மேற்கோளை சேர்க்கிறேன்.--Kanags \உரையாடுக 02:34, 18 செப்டம்பர் 2015 (UTC)