பேச்சு:யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


குறிப்புக்கள்[தொகு]

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் என்பது தமிழர்களின் அரசியல் மொழி பண்பாட்டு உரிமைகளையும், காந்தியக் கொள்கைகளையும், சாதிய தீண்டாமை உட்பட்ட பல்வேறு சமூகக் கேடுகளுக்கு எதிராகவும் செயற்படவென 1920 களில் தொடங்கப்பட்ட ஒர் அமைப்பு ஆகும். எஸ். எச். ஹன்டி பேரின்பநாயகம், ஸி. சுப்பிரமணியம், யோவேல் போல் உட்பட்டோர் இந்த அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்களாக விழங்கினர். இவர்களின் மாநாடுகளிலும் செயற்பாடுகளிலும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். [1]

1927 இல் காந்தி இலங்கைக்கு வந்த போது, இந்த அமைப்பு அவரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரவேற்றது.

  1. சி. கா செந்திவேல், ந. இரவீந்திரன். 1989). இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். சென்னை: தெற்குப் பதிப்பகம்.