பேச்சு:யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
இக்கட்டுரை, விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்படக் கோரி நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இதன் நியமனத் துணைப்பக்கத்தில் பதியுங்கள். ஒரு சிறப்புக் கட்டுரை விக்கிபீடியாவின் சிறப்பிற்கு சான்றாய் அமைந்திருக்க வேண்டும். சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பார்க்கவும். |
பாராட்டுக்கள்
[தொகு]மயூரநாதன், நல்ல கட்டுரை. நம் வாழ்வில் நெருங்கிய தொடர்புடைய விடயங்களைப் பற்றி கட்டுக்கோப்புடன் கலைக்களஞ்சிய நடையில் எழுதுவது எளிதல்ல. ஆனால் நீங்கள் அணுகிய விதம் நன்றாக உள்ளது. முடிந்தால் வட்டார வழக்குகளைப் பற்றி வெளி மேற்கோள்களைச் சேருங்கள். வடக்கனிடம் இது தொடர்புடைய நூல்கள் கண்டிப்பாக இருக்கும். முடிந்தால் அவருக்கு மின்னஞ்சல் செய்து பாருங்கள். -- Sundar \பேச்சு 08:54, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
நன்றி சுந்தர், வடக்கனுடன் தொடர்பு கொண்டு பார்க்கிறேன். Mayooranathan 09:05, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
இக்கட்டுரை ஒரு மூலக்கட்டுரை எனலாம். இப்படிப்பட்ட கட்டுரைகள் சீரிய ஆராச்சி கட்டுரைகளுக்கு சமம். இங்கு தமிழ் விக்கிபீடியாவின் தனித்துவத்தை காணக்கூடியதாக உள்ளது. ஆழ அலசி இக்கட்டுரையை எழுதுகின்றீர்கள் என்பது தெளிவு. பாராட்டுக்கள். --Natkeeran 14:43, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
மயூரநாதன், வெளி மேற்கோள் ஒன்றை இணைத்ததற்கு நன்றி. மற்றபடி நீங்கள் தமிழ்நாட்டு வழக்கு என்று குறிப்பிட்டுள்ள பல சொற்கள் இன்றைய நிலையில் வழக்கில் இல்லை. தூய சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. சிபாரிசு, சுமார், இலாகா போன்றவை ஓரளவு வழக்கில் உள்ளன. "ருஜு" என்ற சொல்லை நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது! "சாட்சி" என்று பொதுவாகவும், நான் கேட்டவரை மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அத்தாட்சி என்று பயன்படுத்துவர். "மாமூல்" சென்னையில் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது, பிற பகுதிகளில் இல்லை. "ரஸ்தா" என்பது இந்தி அறிந்ததால் எனக்குத் தெரிகிறது, பிறருக்குத் தெரியாது. "பந்தோபஸ்து" என்பது ஓரளவு பயன்படுத்தப்பட்டாலும், பல செய்தி ஊடகங்களில் (சென்னைத் தொலைக்காட்சி போன்றவை) தூய தமிழைப் பயன்படுத்தத் துவங்கியதுமுதலாக "பாதுகாப்பு ஏற்பாடுகள்" என்பதே பயன்படுத்தப்படுகிறது. பின்னர் வேறு எடுத்துக்காட்டுகள் தர முயல்வோம். -- Sundar \பேச்சு 12:56, 2 செப்டெம்பர் 2006 (UTC)
வேறு மொழிச்சொற்கள் பகுதியில் இரு சொற்களை ஒரே வரிசையில் தராமல் ஒன்றன் கீழ் ஒன்றாக தரலாம். - வழக்கில் இல்லை - என்பதை சாய்வெழுத்துக்களில் தரலாம் அல்லது வெறும் --- போன்று கோடுகள் இட்டு குறிக்கலாம். சுந்தர் சொன்னது போல் சில சொல் வழக்குகள் தமிழ் நாட்டில் இல்லை. அதை கவனத்தில் கொண்டு கட்டுரையை திருத்தலாம். மிகவும் originalityயுடன் ஆங்கில விக்கி சாராமல் எழுதப்பட்ட கட்டுரை. இது போன்ற கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் மட்டுமே எதிர்ப்பார்க்க இயலும். இது தான் சரியான இடமும் கூட. அடிக்கடி யாழ்ப்பாண வழக்கு குறித்து இத்தளத்தில் எழுந்த உரையாடல்கள் மயூரனாதனை இக்கட்டுரையை எழுதத் தூண்டி இருக்கலாம். யாழ்ப்பாணத் தமிழரின் இயல்பான உரையாடல் ஒன்றையும் , தமிழ்நாட்டு - யாழ்ப்பாண உச்சரிப்பு வேறுபாடுகள் சிலவற்றையும் ஒலிக்கோப்பாக பதிவு செய்து ஏற்றினால் புரிந்து கொள்ள எளிமையாகவும் கட்டுரையில் படம் இல்லாத குறையை போக்கி, சிறப்புக்கட்டுரையாக அமையவும் வழி செய்யும். கட்டுரையை உருவாக்கியதற்கு பாராட்டுக்கள், மயூரனாதன்--ரவி 13:05, 2 செப்டெம்பர் 2006 (UTC)
- இன்று, நான் சேர்த்த வேறுமொழிச் சொற்கள் பகுதிக்கான தகவல்களை திமுக வின் இணையத் தளத்தில், இலக்கணப் பகுதியில் இருந்து எடுத்தேன். அதிலிருந்தும் நான் கேள்விப்பட்டிராத சில சொற்களைத் தவிர்த்துத்தான் எழுதினேன். ருஜு (அல்லது ருசு), ரஸ்தா என்னும் சொற்கள் பழைய தமிழ்ப் படங்களில் நிறையவே புழங்கின. ரஸ்தா என்னும் சொல் பழைய தமிழ்ப் பாடல்களிலும் வந்திருப்பதாக ஞாபகம். என்றாலும், இன்று அவை வழக்கொழிந்து போயிருக்கக்கூடும், நீங்கள் இருவரும் தமிழ்நாட்டின் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். உங்கள் கருத்துக்களைத் தற்போதைய நிலைக்குச் சான்றாக ஏற்றுக்கொள்ளலாம். நீங்கள் சொன்னபடி தற்போது வழக்கில் இல்லாத சொற்கள் இருப்பின் அவற்றை நீக்கிவிட்டு, புதிய சொற்கள் இருந்தால் சேர்த்துவிடுங்கள்.
- இக்கட்டுரையை மேலும் விரிவுபடுத்துவதற்காகத் தகவல்களைச் சேகரித்து வருகிறேன். சில ஒப்பீடுகளைச் செய்வதற்காக தமிழ்நாட்டுச் சொற்பயன்பாடுகள் பற்றிய தகவல்கள் சில தேவைப்படுகின்றன. என்னிடம் இருக்கும் தகவல்களை ஒழுங்குபடுத்திய பின்னர் உங்களுடைய உதவியைக் கோர இருக்கிறேன்.
- அட்டவணை தொடர்பாக, சொற்களை ஒன்றன்கீழ் ஒன்றாகத் தருவது தான் எனது விருப்பமும். ஆனால், பட்டியல் அளவுக்கு அதிகமாக நீண்டு விட்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என்பதால் தான் ஒரு வரிசையில் இரண்டு, மூன்று சொற்கள் கொடுக்கவேண்டியேற்பட்டது. அட்டவணைகளைப் புரிந்துகொள்வதில் இடர்ப்பாடுகள் இருந்தால் மாற்றிவிடலாம். Mayooranathan 17:07, 2 செப்டெம்பர் 2006 (UTC)
நல்ல கட்டுரை மயூரநாதன். இலக்கணத் துணையோடு விளக்கமாக எழுதப்பட்ட கட்டுரை. விடுபட்ட சிலவற்றைக் குறிக்க இக்கருத்தைப் பதிகிறேன்.
யாழ்ப்பாணத்தாரின் பேச்சுவழக்கில் வினாவெழுத்து வித்தியாசம் முக்கியமென்று கருதுகிறேன். இக்கட்டுரையில் அது தவறவிடப்பட்டுள்ளது. 'ஏ'காரம், 'ஓ'காரம் என்பன இறுதியில் வரும்படி யாழ்ப்பாணத்தார் கதைப்பார்கள். தமிழகத்தில் அதிகமாக 'ஆ'காரம் இறுதியாக வரும். 'வருவியா?' என்பதைவிட 'வருவியே?', 'வருவியோ?' என்பதே யாழ்ப்பாணத்தாரிடையே அதிகம் புழக்கதிலுள்ள கேள்விமுறை (செய்வியே? செய்வியோ? வந்தனியே? வந்தனியோ?... என்று பெருவாரியான எடுத்துக்காட்டுக்களுள்ளன). தொல்காப்பியப்படி 'ஓ' இறுதியிலும் 'ஏ' இருவழியிலும் (தொடக்கமும் முடிவும்) வினாவெழுத்தாக வரும். அவ்விலக்கணவிதி இன்றளவும் பேச்சுவழக்கி்ல் கடைப்பிடிக்கப்படுவது ஈழத்தில்தான் என்று நினைக்கிறேன். இது தொடர்பான குறிப்பையும் இக்கட்டுரையில் சேர்த்தால் நன்று.
அதேபோல் உறவுமுறைகளைச் சொல்லும்போது 'கொ' சேர்த்துச் சொல்வது. கொப்பா, கொம்மா, கொக்கா, கொண்ணா என்று 'அ'கரத்தில் தொடங்கும் உறவுமுறைகளை மாற்றிச் சொல்வது. இதுவும் யாழ்ப்பாணத்தாரின் பேச்சுவழக்கின் முக்கிய சொற்கள். ஆத்தைஇவையில்லாவிட்டால் யாழ்ப்பாண வழக்கு முழுமை பெறாது;-)
இவை தொடர்பாக சிலவாண்டுகளின் முன்னால் எனது வலைப்பதிவில் மேலோட்டமாக எழுதிய இடுகைகள்:
http://vasanthanin.blogspot.com/2005/05/blog-post_06.html http://vasanthanin.blogspot.com/2005/05/1_05.html --வசந்தன் 01:44, 5 அக்டோபர் 2010 (UTC)
- வசந்தன், இவ்வழக்குகள் உங்க அண்ணன், உங்க அக்கா முதலானவற்றின் திரிபாக (ஒங்க அக்கா -> ஒங்கக்கா, இது யாழ்பாண ஒகர வழக்கத்தால் (ஆம்-ஓம்) ஒங்கொக்கா ஆகி கொக்கா ஆகியதென்று நினைக்கின்றேன். தங்கச்சி முதலானவை இப்படி ஆகாததற்குக் காரணம் உயிரெழுத்திம் தொடங்காதது. எனவே ஒங்க அண்ணா ஒங்கொண்ணா --> கொண்ணா (ஒங் என்பது சுருங்கியோ மறைந்தோ விட்டிருக்கக்கூடும்). இவை என் முதற்கணிப்புகள்தாம். பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.--செல்வா 01:57, 5 அக்டோபர் 2010 (UTC)
- வசந்தன், யாழ்ப்பாணத் தமிழில் உள்ள சில கூடுதலான விடயங்களைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. அவற்றையும் கட்டுரையில் சேர்த்துவிடுகிறேன். அண்மையில் இது தொடர்பான சில ஆராய்ச்சிக் கட்டுரைகளும் கிடைத்துள்ளன. இவற்றையும் சான்றுகளாகக் காட்டி மேலும் சில விவரங்களை எழுத முடியும். வீட்டில் தற்போது என்னுடைய இணைய இணைப்பில் பிரச்சினை உள்ளதால் சில நாட்களுக்குப் பின்னரே இதைச் செய்யலாம். மயூரநாதன் 10:17, 5 அக்டோபர் 2010 (UTC)
- மிகவும் அருமையான கட்டுரை..பலர்பாலில் இவர்களை இவங்க என்றும் அவர்களை அவங்க என்றும் சொல்வது உண்டல்லவா?--சி. செந்தி 18:35, 31 மார்ச் 2011 (UTC)
தொடர்புடைய கட்டுரை
[தொகு]-- Sundar \பேச்சு 06:48, 17 செப்டெம்பர் 2007 (UTC)
- பயனுள்ள கட்டுரை. நன்றி சுந்தர். பொதுப் பேச்சு வழக்கு என்ற கருத்துரு இயல்புக்கு மாறான ஒன்றாகத் தெரிகிறது. Mayooranathan 19:49, 17 செப்டெம்பர் 2007 (UTC)
- மேற்கண்ட கட்டுரையில் பல அடிப்படை தவறுகள் உள்ளன. பின்னர் எடுத்துரைக்கிறேன் (தேவை எனில்). எ.கா: இசுத்தல் என்பது அருமையான தனியொரு சொல் அது இழு என்பதன் திரிபு அல்ல! என் + அண்டை என்பது என்னண்டை என்பது பேச்சு வழக்கில் என்னாண்டே என்று வழங்குகின்றது. என் + அண்டை என்பது என் கிட்ட, என்னிடம், என்பால், என் கையிலே (என் கைலே) எல்லாம் ஒரே முறைப்படி ஆக்கிய சொற்கள்தாம். அண்டை என்றால் அருகில் என்று பொருள். அண்டை வீட்டில் என்றால் பக்கத்து வீட்டில் என்று பொருள். ஆண்டே என்று ஏதும் "ஏழாம்" வேற்றுமை இல்லை!! இக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் பலவும் மிகப் பிழையானவை (சில ஆசிரியருடையதல்ல என்று அறிவேன்)!--செல்வா 23:22, 17 செப்டெம்பர் 2007 (UTC)
- நம்மில் சிலரேனும் இத்தகைய தளங்களில் கட்டுரைகள் வெளியிடத் துவங்க வேண்டும். (மற்றபடி நான் மேலே சுட்டிய கட்டுரையை ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கான தேடலின்போது மட்டுமே கண்டேன், படிக்கவில்லை.) -- Sundar \பேச்சு 05:45, 18 செப்டெம்பர் 2007 (UTC)
- மேற்கண்ட கட்டுரையில் பல அடிப்படை தவறுகள் உள்ளன. பின்னர் எடுத்துரைக்கிறேன் (தேவை எனில்). எ.கா: இசுத்தல் என்பது அருமையான தனியொரு சொல் அது இழு என்பதன் திரிபு அல்ல! என் + அண்டை என்பது என்னண்டை என்பது பேச்சு வழக்கில் என்னாண்டே என்று வழங்குகின்றது. என் + அண்டை என்பது என் கிட்ட, என்னிடம், என்பால், என் கையிலே (என் கைலே) எல்லாம் ஒரே முறைப்படி ஆக்கிய சொற்கள்தாம். அண்டை என்றால் அருகில் என்று பொருள். அண்டை வீட்டில் என்றால் பக்கத்து வீட்டில் என்று பொருள். ஆண்டே என்று ஏதும் "ஏழாம்" வேற்றுமை இல்லை!! இக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் பலவும் மிகப் பிழையானவை (சில ஆசிரியருடையதல்ல என்று அறிவேன்)!--செல்வா 23:22, 17 செப்டெம்பர் 2007 (UTC)
உறவுமுறைச் சொற்கள்
[தொகு]இந்த 'உறவுமுறைச் சொற்கள்' பகுதியில் மனைவி கணவனையும், கணவன் மனைவியையும் அழைக்கும் முறைகள் இருக்கவில்லை. நான் எனக்குத் தெரிந்ததை எழுதியுள்ளேன். ஆனால் இன்னும் பழமையான காலத்தில் எப்படி ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் எழுதுங்கள்.--கலை 23:04, 1 ஏப்ரல் 2011 (UTC)
சொல்லின் மூலம்
[தொகு]ஆசுப்பத்திரி என்ற சொல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்தது. அதன் மூலம் இலத்தீன் மொழியின் hospitale என்ற சொல்லாகும்.--பாஹிம் 07:59, 25 திசம்பர் 2011 (UTC)
- ஆங்கிலத்திலிருந்து வந்ததா, போர்த்துகேயத்திலிருந்து வந்ததா என உறுதிபடச் சொல்ல இயலவில்லை. இரண்டிற்கும் மூலம் லத்தீன் -> பழைய ஃபிரெஞ்சு எனினும் யாரிடமிருந்து தமிழுக்கு வந்தது என்று சொல்ல முடியவில்லை. ஒரு வேளை யாழ்ப்பாணத்தில் போர்த்துகீசியர் மூல்மாகவும் ஆங்கிலேயர் ஆதிக்கம் கொண்ட வேறு இடங்களில் அவர்கள் மூலமாகவும் வந்திருக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 09:53, 25 திசம்பர் 2011 (UTC)
- ஜி யூ போப் வெளிநாட்டு சொல் என்று மட்டும் சொல்கிறார். இந்த ஆசிய மொழிகளில் போர்த்துகீசிய சொற்களஞ்சியம் இந்த மலையாள மொழிப் புத்தகம் ஆகியவை போர்த்துகீசியம் தான் மூலம் என்கின்றன. இது போர்த்துக்கீசிய மூலம் ஆனால் “influenced by english" என்கிறது--சோடாபாட்டில்உரையாடுக 10:22, 25 திசம்பர் 2011 (UTC)