பேச்சு:ம. ச. சுப்புலட்சுமி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ம. ச . சுப்புலட்சுமி என்ற தலைப்புக்கு நகர்த்தலாமா? அனைத்து நபர்களைப் பற்றிய கட்டுரைகளிலும் அவர்கள் தலையெழுத்துக்களுக்கான விரிவு தெரிந்திருக்கும் பட்சத்தில் தமிழ்த் தலை எழுத்துக்கள் கொண்ட பெயர்களையே முதன்மை கட்டுரையாக வைப்பத்தை தமிழ் விக்கிப்பீடியா கொள்கையாகப் பரிந்துரைத்துச் செயற்படுத்த வேண்டுகிறேன். ஆங்கில தலை எழுத்துப் பக்கங்களில் இருந்து வழிமாற்றுத் தரலாம்--ரவி 11:31, 8 ஏப்ரல் 2008 (UTC)

ரவியின் கருத்து எனக்கும் ஏற்புடையதே.--சிவகுமார் \பேச்சு 14:12, 8 ஏப்ரல் 2008 (UTC)
ரவியில் கருத்து தமிழ் நோக்கில் ஏற்புடையது எனினும் பொதுநோக்கில் எம். எஸ். சுப்புலட்சுமி என்றே சிறுவயதில் இருந்து அறிந்துள்ளேன். என்றாலும் ரவியின் கருத்தை ஏற்பதுதான் நீண்ட நோக்கில் பலன் தரவல்லது. --உமாபதி \பேச்சு 14:21, 8 ஏப்ரல் 2008 (UTC)

அனைவரின் தமிழ்த் தலை எழுத்துக்களையும் விக்கியைப் பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருக்கும் பட்சத்தில், மேற்கூறியது சரியானதே (உதாரணமாக ஜ.ரா.சுந்தரேசனை அல்லது தி.ஜானகிராமனை அனைவரும் அவரவர் தமிழ்த் தலை எழுத்துக்கள் கொண்டே அறிவர்). ஆனால், எம்.எஸ். சுப்புலட்சுமி ம.சு.சுப்புலட்சுமி என்றோ அல்லது எம்.ஜி.ஆர், ம.கோ. ராமச்சந்திரன் என்றோ அறியப்படுவதில்லை. சொல்லப்போனால், எஸ்.எம். சுப்பையா நாயுடு, அல்லது எம். எஸ். விஸ்வநாதன் அல்லது ஜி.ராமநாதன் போன்ற பல திரையுலக பிரபலங்களும் ஆங்கில முதல் எழுத்துக்களாலேயே அறியப்படுகின்றனர். இசை மேதை ஜி.என்.பாலசுப்பிரமணியம் பற்றிய கட்டுரை இதே விக்கி பக்கங்களில் தனது ஆங்கில முதலெழுத்துகளைக் கொண்டே இருக்கிறது. ஏ.எம் ராஜா போன்றோர் பட்டிய கட்டுரைகளும் உள்ளன. பெயர்கள் எவ்வாறு பெருமளவில் அறியப்பட்டுள்ளனவோ அவ்வாறே அவற்றை விடுப்பது சிறந்தது என்பதே எனது கருத்து. நன்றி. --Tamil sarva 07:21, 4 ஜூலை 2010 (UTC)