பேச்சு:ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967 எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

மேலும் சேர்க்கப்பட வேண்டியவை[தொகு]

இந்தக் கட்டுரையில் பின்வரும் முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டும். -- Sundar \பேச்சு 15:46, 31 ஜூலை 2006 (UTC)

  • உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு இணைப்பு - இங்கே கேட்டுள்ளேன்
  • en:K. M. Nanavati vs. State of Maharashtra கட்டுரையில் உள்ளது போன்று நல்ல தகவல்பெட்டி ஒன்று சேர்க்கப்பட வேண்டும்.
  • முதன்மை சாட்சிகளான வாசு போன்றோரைப் பற்றியும், வழக்கறிஞர்கள், வழக்கில் தொடர்புடைய மருத்துவர்கள்,குற்றவியல் அறிஞர்கள் போன்றோரைப் பற்றி இந்து நாளிதலிலும் பிற தரவுகளிலும் தரப்பட்டுள்ளன
  • சுட்டாச்சு சுட்டாச்சு தவிர இதுபற்றி வேறு நூல் உள்ளதா?
  • சட்டவியல் சொற்களுக்கான வடமொழியற்ற தூய தமிழ் சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும்
  • இணையத்தில் உள்ள பல்வேறு இணைப்புகளில் உள்ள தகவல்களைக் கொண்டு எம்.ஆர். இராதா, சுட்டாச்சு சுட்டாச்சு, சுதாங்கன், போன்ற பல கட்டுரைகளை உருவாக்க முடியும். இராதாவைப் பற்றியும் அவரது நடிப்பு, பகுத்தறிவுக் கொள்கை, விந்தையான மனநிலை பற்றியும் குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதுவது மிகப் பொருத்தம். சுட்டாச்சு சுட்டாச்சு நூலில் இவற்றைப் பற்றி ஓரளவு அறிய முடிகிறது.
  • [1], [2], [3], [4]
வித்தியாசமான கட்டுரைகளாக தொடங்குவது என்று விரதமா சுந்தர் ;)? பாராட்டுக்கள்--ரவி 17:15, 31 ஜூலை 2006 (UTC)
பாராட்டுக்களுக்கு நன்றி, ரவி. நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி த.வியின் கட்டுரைப் பொருட் களத்தை விரிவுபடுத்தும் ஆர்வம் உள்ளது. மேலும், என்னுடைய இயல்பே எந்த ஒரு துறையிலும் ஆழமாக இறங்காமல் பல துறைகளில் மூக்கை நுழைப்பது தான். ஒருபுறம் இது தனிப்பட்ட முறையில் கவலை அளிப்பதே. த.வியைப் பொருத்த வரை பிற பயனர்கள் ஒழுங்குடன் கட்டுரைகள் எழுதி வருவதால் நான் கவலைப்படாமல் இது போன்ற கட்டுரைகளை இட்டுச் செல்ல முடிகிறது.
மற்றபடி, ஒவ்வொரு துறையிலும் விந்தையான, சுவையான, அரிய தகவல்களைத் தந்தால் மேலும் பயனர்களை ஈர்க்க முடியும், களமும் விரிவடையும். தவிர, இந்தத் தலைப்பு முதலியவை கண்டிப்பாக ஆவணப் படுத்தப்பட வேண்டியவை.

எம்.ஆர். ராதா தமிழ் திரையுலகிலும் நாடக உலகிலும் ஈடு இணையற்ற பங்களிப்புச் செய்தவர். அதேபோல் தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரின் தாக்கம் இன்றளவும் உள்ளது. கண்டிப்பாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஆளுமைகளின் வாழ்க்கைகள். -- Sundar \பேச்சு 07:24, 1 ஆகஸ்ட் 2006 (UTC)

தற்போதுள்ள வடிவில் கட்டுரை ராதாவிற்கு ஆதரவாக உள்ளதுபோல் தோன்றுகிறது.(நான் எழுதியதுதான்!) இருப்பினும் மீதமுள்ள பத்திகளை இணைத்தபின் இதை ஓரளவு சரிக்கட்டலாம். முடிந்தால் வேறு வெளி மேற்கோள் பெற முயல வேண்டும். மேலும், இதிலுள்ள பல தகவல்கள் இராதாவின் வாழ்வைப் பற்றியதென்பதால் அவற்றை எம். ஆர். இராதா என்ற கட்டுரைக்கு நகர்த்த வேண்டும். -- Sundar \பேச்சு 14:18, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

குறிப்புகள்[தொகு]

இனி ...[தொகு]

என்னால் இயன்ற அளவு தகவல்களைச் சேர்த்துள்ளேன். ஒரே புத்தகத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதைத் தவிர்க்கும் வகையில் வேறு சில மேற்கோள்களைச் சேர்த்தால் நன்றாக இருக்கும். மேலும் நடையில் சில ஏற்றங்கள் செய்யலாம். தவிர நீதித்துறைச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச்சொற்களை சேருங்கள். இது இப்போதே உங்களுக்குத் தெரியுமா பகுதியில் காட்சிப்படுத்தத் தக்கது. இருப்பினும் மேலே நான் குறிப்பிட்டுள்ள நானாவதி வழக்குக் கட்டுரையைப் போன்று தீர்ப்பு நகல்களுக்கு இணைப்பு மற்றும் தகவல்பெட்டி முதலியவற்றை இணைத்துவிட்டால் இதைச் சிறப்புக் கட்டுரையாகக்கூட ஆக்க முடியும். இயன்றவர்கள் உதவ வேண்டும். -- Sundar \பேச்சு 15:01, 13 அக்டோபர் 2006 (UTC)

கோரிக்கை[தொகு]

இறுதியாக உள்ள எம்.சி.ஆரை சுட்டதை இராதா விளையாட்டாகக் குறிப்பிடும் மேடைப் பேச்சு இணைப்பில் சுட்டி நேரடியாக தளத்திற்கு மட்டுமே செல்கிறது. இணைப்பினை கொஞ்சம் கவணிக்கவும்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

உங்கள் மாற்றங்களை நான் விடுத்து முன்னிலைப்படுத்தியுள்ளேன். ம.கோ.இராவைப் பற்றிய தகவல்களை அவரது பெயரிலான கட்டுரையில் தர வேண்டுகிறேன். இது வழக்கைப் பற்றியும் அதனுடன் நேரடித் தொடர்புடைய நிகழ்வுகளைப் பற்றியதும் மட்டுமே. அத்தோடு, இராதாவைப் பற்றிய குறிப்புகள் சான்றுப்பின்புலம் கொண்டவை. வழக்கு என வரும்போது இராதா குற்றவாளி என்ற முடிவுடன் இதை அணுக வேண்டியதில்லை. இரு நிலைப்பாடுகளையும் தெரிவிப்பதே நல்லது. உங்கள் மாற்றங்களில் சில நல்ல மாற்றங்களும் இருந்தன. அவற்றை மட்டும் நாம் இணைந்து கட்டுரையில் செயற்படுத்தலாம். நன்றி. -- சுந்தர் \பேச்சு 09:33, 10 ஜூலை 2010 (UTC)


நான் இணைத்தமையில் உள்ள உண்மைக்கான சான்றுதல் தேவைப்பட்டால் இணைக்கிறேன்.

எம்.ஜி.ஆரை சுட்டதை ஞாயம் என்ற நோக்கிலும், எம்.ஆர்.ராதை போற்றும் விதமுமாகவே கட்டுரை இருந்தது. அதைதான் மாற்றினேன். பெரியாரின் திருமணம் முதற்கொண்டு எழுதப்பட்டிருக்கும் விசயங்களை மறுத்துவிட்டீர்கள். எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்தும், அதன் பிறகான வாழ்க்கையைப் பற்றியும் பாராட்டி எழுதியிருக்கின்றீர்கள். எம்.ஜி.ஆர் அந்த சம்பவத்திற்குப் பிறகும் நடித்தார். குரலில் இருந்தமாற்றத்தையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு வெற்றியைக் கொடுத்தார்கள். தலைப்பில் மட்டும் எம்.ஜி.ஆரை வைத்துக்கொண்டு எம்.ஆர்.ராதாவை துதி பாடுவது போலவே கட்டுரை இப்போதும் இருக்கிறது.

இதில் நடுநிலை எனவும், குற்றவாளிக்கு சாதகமாகவும் பரிந்துறை செய்யப்படுவதையும் தனியொரு ஆளாக எதிர்க்கிறேன். அதற்காக மீண்டும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எம்.ஜி.ஆரின் செல்வாக்கை மறைக்க இந்த ஒரு முயற்சி தங்களுக்கு சந்தோசமாக இருக்கும் என்றால், நல்லதே@. வரும்காலத்தில் உண்மையை உணர்ந்தவர்கள் இந்தக் கட்டுரையை திருத்தட்டும். வாழ்க வளமுடன். - சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

இந்தக் கட்டுரையில் நான் எழுதியுள்ளவற்றில் சார்பு இருக்கக் கூடும் என்று அஞ்சி நானே மேலே குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள். நீங்கள் ஏற்றியவற்றில் பல தகவல்கள் சரியானவையே. அவற்றை மீண்டும் சேர்ப்பதில் எனக்குத் தயக்கம் எதுவும் இல்லை. ஆனால், முதல் பத்தியில் கட்டுரைப் பொருளை விளக்க வேண்டும் என்ற நெறிமுறையின் விளைவாகவே ம.கோ.இராவைப் பற்றிய தகவல்களை நீக்கினேன். அதே போல சான்றுடன் குறிப்பிட்டிருந்த 'அனைவரும் மதிக்கும் நாடக நடிகர்' என்று இராதாவை நான் குறிப்பிட்டிருந்ததையும் நீங்கள் நீக்கியிருந்தீர்கள். அந்தக் குறிப்பு கூட வழக்கு வாதத்தில் வந்த விசயம் என்பதால் தான் குறிப்பிட்டேன். எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து எழுதியிருக்கும் நீங்கள் அவற்றில் உண்மைகள் சில உண்டு என்றாலும், முதலில் சான்றளியுங்கள், அத்தோடு வழக்குக்குத் தொடர்பு உள்ளதா எனப் பாருங்கள். இராதாவின் வழக்குக்குப் பிந்திய வாழ்க்கை விவரங்களில் சில இங்கு பொருத்தமில்லை என்று தோன்றினால் அவற்றை நீக்கிவிடலாம். இந்தக் கட்டுரையை எழுதியபோது இயன்றவரை தகவல்களை இடும் தேவை இருந்தது. இப்போது தொடர்புடைய மற்ற கட்டுரைகள் வந்து விட்டதால், அவற்றுக்கு நகர்த்தி விடலாம்.
பெரியாரின் திருமணத்துக்கு இந்த வழக்குக்கும் தொடர்பு உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால் அந்தத் தொடர்புகளைக் குறிப்பிட்டு அத்துடன் தகவல்களைச் சேர்ப்போம்.
ஒரு விளக்கம்: ஒரு நடிகராக எம்.ஆர்.இராதா மீது எனக்கு மதிப்பு உண்டேயொழிய அரசியலில் எனக்கு இவர்கள் இருவரிடையே எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. சொல்லப்போனால் ஈழச்சிக்கலில் ம.கோ.இராவின் நிலைப்பாட்டினால் அவர்மீது எனக்கு நன்மதிப்பு உண்டு.
இப்போது உங்கள் பல மாற்றங்களில் சிலவற்றை மீண்டும் ஏற்றிவிடுகிறேன். இதன்பின் பேச்சுப் பக்கத்தில் உரையாடித் தகுந்த மாற்றங்களை இருவரும் இணைந்தே செய்யலாம். ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:57, 12 ஜூலை 2010 (UTC)
உங்கள் மாற்றங்களில் பொருத்தமான தகவல்களை மீட்டெடுத்து, கலைக்களஞ்சிய நடைக்குத் திருத்தியுள்ளேன், பார்க்கவும். தகவல்களுக்குப் பொருத்தமான சான்றுகளைச் சேர்த்து உதவுங்கள். முந்தைய நிலையில் கட்டுரை ஒரு நூலை மட்டுமே சான்றாகக் கொண்டிருந்தது. உங்களிடம் வேறு தரமான நூல் ஆதாரங்கள் இருந்தால் சேர்க்கவும். சோடாபாட்டிலும் உதவக்கூடும். -- சுந்தர் \பேச்சு 06:28, 12 ஜூலை 2010 (UTC)

இத்தகைய சர்ச்சைக்குரிய கட்டுரைகளைத் தொகுக்கையில் நினைவில் கொள்ள வேண்டியவை - இது வழக்கைப் பற்றியான கட்டுரை என்பதால் சம்பவம்+வழக்கு பற்றிய தகவல்களே அதிகம் இடம் பெற வேண்டும். பின்புலமும், வழக்கிற்குப் பின் எம்ஜியார், ராதா வின் வாழ்க்கை எப்படி இருந்தன என்பதை சுருங்கிச் சொல்ல வேண்டும் - அதுவும் இந்நிகழ்வினால் இருந்த பாதிப்பு மட்டுமே சொல்லப் பட வேண்டும். மற்ற தகவல்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் கட்டுரைகளில் இருந்தால் போதும். ராதா சுட்டதற்கான உள்நோக்கம் (motive) பற்றிச் சொல்கையில் சான்றுகள் மிக மிக முக்கியம். புத்தகங்கள், ஊடகச் செய்திகளின் துணையில்லாமல் எதுவும் எழுதக் கூடாது. ஊடகங்கள் எதையும் ஊகித்துச் சொன்னாலும் அவர்கள் சொன்னதாகவே குறிப்பிடவேண்டும் எ.கா. ”ராதா எம். ஜி. ஆரை X காரணத்துக்காகச் சுட்டார்” என்பதற்கு பதில் “ராதா எம். ஜி. ஆரை X காரணத்துக்காகச் சுட்டார் என Y ஊடகம்/நபர் கூறுகின்றார்” என்று எழுத வேண்டும். வலைப்பதிவுகளை சான்றுகளாக பயன்படுத்த வேண்டாம். வரும் நாட்களில் என்னால் இயன்ற சான்றுகளைத் திரட்டி இங்கே தருகிறேன்.--Sodabottle 07:23, 12 ஜூலை 2010 (UTC)

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சோடாபாட்டில். விரைவில் சான்றுகளுடன் இந்தக் கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுவீர்கள் என நம்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:04, 12 ஜூலை 2010 (UTC)

ஆதாரங்களும், சில உதவி இணைப்புகளும்[தொகு]

விளக்கத்திற்கு நன்றி நண்பர்களே!,

முதலில் மாலைமலர் நாளிதலின் சில இணைப்புகளைக் கொடுக்கிறேன். எம்.ஜி.ஆரின் இளம் ரசிகன் என்பதால் நான் கை வைக்கும் போது கட்டுரை பழையபடி உங்களால் ஏற்றுக்கொள்ளப் படாத மாற்றங்களுக்கு ஆளகலாம், எனவே அதனை தவிர்த்துவிட்டேன். கீழே பல்வேறு இதழ்களிலும், வலைப்பூக்களிலும் நான் இட்ட செய்திக்கான ஆதாரங்களை திரட்டி தந்திருக்கிறேன்.

வெளி இணைப்புகள் இந்தக் கட்டுரைக்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது. கீழே உள்ளவற்றில் எவற்றையெல்லாம் இதில் சேர்க்கலாம் என சொல்லுங்கள்.

தாத்தா கட்ட இருந்த தாலி[தொகு]

பெரியாருக்குச் சம்மந்தம் - நீதிதேவனை சுட்ட வழக்கு – எம்.ஜி.ஆர். மீது கொலை முயற்சி http://lordmgr.wordpress.com/2010/07/02/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/

“தாத்தா கட்ட இருந்த தாலி!” - அறிஞர் அண்ணா http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_139.html

தமிழ் ஹிந்து பெரியாரின் மறுப்பக்கம்

http://www.tamilhindu.com/2009/08/periyar_marubakkam_part14/

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

"பணக்காரக் குடும்பம்". படத்தை குறிப்படக் காரணம்[தொகு]

ஜூலை 1949-ல் நடந்தது என்ன?

http://dondu.blogspot.com/2005/03/1949.html

72 வயது பெரியார் 26 வயது மணியம்மை திருமணம் http://devapriyaji.wordpress.com/2010/05/23/72-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-26-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

தண்டனை மற்றும் குண்டடிப்பட்ட பின்னான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை[தொகு]

சுட்டவர் என்ன ஆனார் என்பதை மிக விளக்கமாக சொல்லிவிட்டு, மரணம் வரை சென்று மீண்டுவந்தவரை மறந்து விட்டீர்கள். ஆதாரங்களும், மூலங்களும் இதோ,... கட்டுரையை மேன்படுத்துங்கள்.

தண்டனை விவரத்தை வெளியிடும் செய்திக் கட்டுரை,.. [ http://www.maalaimalar.com/2009/12/03114709/mgr.html எம்.ஜி.ஆர். மறு பிறப்பு: துப்பாக்கியால் சுட்ட எம்.ஆர்.ராதாவுக்கு 5 ஆண்டு ஜெயில்]

சுடப்பட்டபின் எம்.ஜி.ஆரின் குரலில் ஏற்பட்ட மாற்றத்தையும் அப்போதும் பாதிக்கப்படாத வெற்றியையும், ரசிகர்களின் ஆதரவையும் விளக்கும் கட்டுரை.

[ http://www.maalaimalar.com/2009/12/07105132/mgr.html சுடப்பட்ட பிறகு நடித்த "காவல்காரன்" பெரிய வெற்றி- நூறு நாட்களுக்கு மேல் ஓடியது ]

தமிழ் தேசம் இதழ் வெளியிட்ட இடுகையில் குண்டடிப் பட்டாலும் குன்றாதவர் பகுதியை படிக்க,.. http://www.tamildesam.org/special-pages/indian-leaders/mgr/mgr-achievement/

எம்.ஜி.ஆர் முத்து எழுதிய நூலின் ஒரு பகுதி "முப்பிறவி கண்டவர்" http://lordmgr.wordpress.com/2010/06/11/66-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/

கட்டுரையை திருத்தி அமைப்பவர்களுக்கு வாழ்த்துகள்!,. ஆதாரங்கள் போதுமா!,. இல்லை வேறெதுவும் வேண்டுமா!

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

எம்.ஆர்.ராதாவின் தேவையா[தொகு]

எம். ஆர். ராதாவுக்கென தனியான பக்கம் அமைத்து அதில் வழக்கு முடிவுக்குப் பிறகு நடித்த சம்பவங்களும், எம்.ஜி.ஆருக்கு சொன்ன அறிவுறையும் பதியப்பட்டுள்ளது. இங்கும் அதே புராணம் தேவையா என யோசிக்கவும்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு