பேச்சு:ம‌ஞ்ச‌ள் காமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தக் கட்டுரைப் பக்கம் நீக்க வேண்டுகிறேன், இங்கிருக்கும் தகவல்கள் முற்றிலும் சரியானவை அல்ல என்பதோடு, ஏற்கனவே இதே பெயரில் இன்னுமொரு கட்டுரை உள்ளது. மஞ்சள் காமாலை --சி. செந்தி 07:26, 15 அக்டோபர் 2010 (UTC)

அது எப்படி ஒரே தலைப்பில் இரண்டு கட்டுரைகள் உள்ளன? மற்றது: மஞ்சள் காமாலை. தலை சுற்றுகிறது. ஒருங்குறியில் ஏதேனும் பிரச்சினையா? வெவ்வேறு விசைப்பலகைகள் காரணமா? அறிந்தவர்கள் அறியத்தாருங்கள்.--Kanags \உரையாடுக 07:39, 15 அக்டோபர் 2010 (UTC)
கண்டுபிடித்துவிட்டேன்,:) கீழே உள்ள தொடுப்புக்களைப் பாருங்கள் விளங்கும்:
  1. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E2%80%8C%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88
  2. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88. --சி. செந்தி 17:51, 15 அக்டோபர் 2010 (UTC)
செந்தி, நீங்கள் தந்த தொடுப்புக்களைப் பார்த்தேன். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை:). எப்படி ஒரே தலைப்பில் இரண்டு கட்டுரைகள் இருக்கலாம். ஔ என்ற எழுத்தை அஞ்சல் விசைப்பலகையில் இரண்டு முறைகளில் எழுதலாம். ஒன்று ஔ (a+u) மற்றது ஒ+ள (o+La), உ+ம்: ஔவையார், ஒளவையார். இரண்டும் வேறு வேறு தலைப்புகளில் வருகின்றன. ஆனால் மஞ்சள் காமாலையை எவ்வாறு இரண்டு முறைகளில் எழுதலாம் எனத் தெரியவில்லை. நீங்கள் தந்துள்ள இணைப்புகள்: மஞ்சள் காமாலை, ம‌ஞ்ச‌ள் காமாலை.--Kanags \உரையாடுக 21:35, 15 அக்டோபர் 2010 (UTC)
    • தமிழ் எழுத்துக்கள் யுனிக்கோட் முறையில் மாற்றப்படும்போது ஒவ்வொரு தம்மிழ் எழுத்துக்கும் மிக நீண்ட குறியீடு உண்டல்லவா. இவை % எனும் குறியுடன் எண்களும் ஆங்கில எழுத்துக்களும் கொண்டது. எ.கா: %E0%AE%9A%E0%AE%BF (%E0 %AE %9A %E0 %AE %BF) எனும் குறி "சி" எனும் எழுத்தைக் குறிக்கிறது, அந்த ரீதியில் இங்கு மஞ்சள் என்பதற்கு வெவ்வேறான குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, இது உலாவியில் (browser) தங்கி இருக்கலாம், அல்லது யுனிகோட்டில் மாற்றம் செய்யும் மென்பொருளில் தங்கி இருக்கலாம் என்பது எனது ஊகம். இந்தத் தொடுப்பில் இரண்டையும் ஒப்பிட்டு ஒரு படிமம் உள்ளது, பாருங்கள்: http://www.medgameplanet.com/files/manjal_kamaalai_b.jpg
--சி. செந்தி 07:19, 16 அக்டோபர் 2010 (UTC)
பெரிய சிக்கலொன்றை அடையாளம் காட்டியுள்ளீர்கள், செந்தி. ஒருங்குறியில் பார்க்க ஒரே உரை போல இருந்தாலும் வெவ்வேறு பைட்டுத்தொடர்களாக இருக்கும் non-canonicalisation சிக்கல் போலத் தோன்றுகிறது. இதன் விளைவாக நாம் தட்டப் பயன்படுத்தும் மென்பொருளைப் பொருத்து வேறுபடக்கூடும். தேடுபொறிகளில் சில சொற்கள் கிட்டும் சில கிட்டா. விக்கித் தேடலுக்கும் இது பொருந்தும். இது பெரும் இடர் விளைவிக்கக்கூடியது. இது குறித்து மைக்குரோசாட்டின் மைக்கேல் கப்புலானிடமும் மணி.மணிவண்ணனிடமும் கீச்சில் கேட்டிருக்கிறேன். அவர்கள் இருவரும் ஒருங்குறி பற்றி நன்கு அறிந்தவர்கள். -- சுந்தர் \பேச்சு 08:01, 16 அக்டோபர் 2010 (UTC)
இதே போன்ற சிக்கல் வங்காள விக்கியிலும் உள்ளது. வழு அறிக்கை: https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=5948 -- சுந்தர் \பேச்சு 06:08, 29 திசம்பர் 2010 (UTC)

ஃபயர்பக் கொண்டு தேடியதில் எனக்கு கிடைத்தது இதுதான். அதாவது ‌ html entity zero-width non-joiner பார்க்க. இதனை விக்கிப்பீடியா தலைப்புகளில் இந்த என்டிட்டி இருந்தால் நீக்க கோரி வழுவாக கோரலாம்? இது யுனிகோடு பிரச்சினை இல்லை. மாறாக இந்த ‌ குறி எழுத்துக்களுக்கு இடையில் உள்ளது.

மஞ்சள் காமாலை - யுனிகோடு,

ம‌ஞ்ச‌ள் காமாலை யுனிகோடு உள்ளே zero-width non-joiner -- மாஹிர் 08:24, 29 திசம்பர் 2010 (UTC)

ஆய்ந்தறிந்து சொன்னதற்கு மிக்க நன்றி, மாகிர். இந்த உருவமற்ற விலக்கக் குறி க்ஷ என்ற எழுத்தைப் பிரித்து க் ஷ என்ற எழுதுவதற்காகப் பயன்படுத்தப்படுவது என நினைக்கிறேன். இது தேவையற்ற இடங்களில் வருமானால் நீக்கும்படி கேட்டு வழு பதியலாம். -- சுந்தர் \பேச்சு 09:35, 29 திசம்பர் 2010 (UTC)