பேச்சு:மொழிமுதல் எழுத்துக்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொழிமுதல் எழுத்துக்கள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மரபு[தொகு]

  • எழுத்துக்கள் - என்பது மரபு
  • எழுத்துகள் - என்பது புதுவரவு --Sengai Podhuvan (பேச்சு) 18:01, 13 ஏப்ரல் 2017 (UTC)
இணையத்தில் படித்தது:

//கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளில் முடியும் சொற்கள் குற்றியலுகரங்கள். இவற்றில் க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று என்று முடியும் சொற்களில் அவை வன்தொடர்க் குற்றியலுகரங்கள். ங்கு, ஞ்சு, ந்து, ம்பு என்று முடியும் சொற்களில் அவை மென் தொடர்க் குற்றியலுகரங்கள். பொதுவாக, வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் (படித்துச் சொல்). மென் தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது (பணிந்து செல்). இந்த விதியைப் பின்பற்றுபவர்கள் வாழ்த்துக்கள் என்று எழுதுவதற்கு நியாயம் சொல்வார்கள். பரிமேலழகர் தம் உரையில் ‘எழுத்துக்கள்’ என்றே எழுதியிருக்கிறார் என்பர். இந்த இடையூறான போக்கால்தான் வாழ்த்துக்கள் என்றெழுதுவது வழக்கானது. கள் என்பது பன்மை கருதி வந்த, தனிப்பொருளற்ற விகுதி (இடைநிலை என்பாரும் உளர்) என்பதால், அதற்குச் சொற்களுக்குக் கற்பிக்கின்ற வலிமிகும் விதி பொருந்தித் தோன்றாது என்பதே ஏற்புடையதாகும். ஆகவே, வாழ்த்துகள் (எழுத்துகள்) என்றெழுதுவதே சரி.//--Kanags \உரையாடுக 00:58, 14 ஏப்ரல் 2017 (UTC)

  • இலக்கியத்துக்கு இலக்கணம் - வேறொன்றும் கூற விரும்பவில்லை --Sengai Podhuvan (பேச்சு) 13:21, 17 ஏப்ரல் 2017 (UTC)