பேச்சு:மொத்த உள்நாட்டு உற்பத்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூரநாதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றி தவறாக கட்டுரை வடித்துள்ளதாக எனக்குப்படுகின்றது.இங்கு கூறப்பட்ட சமன்பாடு மொத்த தேசிய செலவு பற்றியே குறிப்பிடுகின்றது,அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைக்(national income) கணிப்பதற்காக 3 வழிகள் பயன்படுத்தப்படுகின்றது.அவையாவன் 1.உற்பத்திவழி 2. வருமான வழி 3.செலவு வழி இவற்றை பற்றி குழப்பமாக கட்டுரை வரையப்பட்டுள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது கைத்தொழில்+ விவசாயம் + சேவைகள் என்பவற்றின் மொத்த பணப்பெறுமதியை மட்டுமே குறிக்கும்,என நினைக்கிறேன்.எனினும் மயூரநாதன் கட்டுரையை சரியான புரிதலுடந்தான் எழுதப்பட்டதா என verify செய்யவும்.சில term களில் குழப்பம்வருவது உண்டுதான் சரியான ஆங்கில் சொல்லையும் மற்றும் கட்டுரை தருக எனக்கும் சில புரிதலின்மை உண்டு. --kalanithe

கலாநிதி, இக்கட்டுரை ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள en:Gross Domestic Product கட்டுரையின் பகுதி மொழிபெயர்ப்பு. இங்கே தரப்பட்டுள்ள சமன்பாடு மொத்த உள்நாட்டுச் செலவைக் குறிக்கிறது (நீங்கள் குறிப்பிட்டது போல் மொத்தத் தேசிய செலவை அல்ல). தரப்பட்ட சமன்பாடு செலவு வழியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணிப்பதற்கான முறையாகும். உள்நாட்டில் செய்யப்பட்ட மொத்தச்செலவு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், சேவைகளின் மீதான செலவையும் உள்ளடக்கியுள்ளது. அதேவேளை, உள்நாட்டில் செய்யப்பட்ட மொத்தச்செலவு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் பெறுமதியை உள்ளடக்காது. எனவே,

மொத்த உள்நாட்டு உற்பத்தி = மொத்த உள்நாட்டுச் செலவு + ஏற்றுமதி - இறக்குமதி ஆகும்.
மொத்த உள்நாட்டுச் செலவு = நுகர்வு (Consumption) + முதலீடு (Investment) + பொதுத்துறைச் செலவினம் (Public expenditure)

இரண்டு சமன்பாடுகளையும் சேர்க்கும்போது,

மொ.உ.உ = நுகர்வு + முதலீடு + பொதுத்துறைச் செலவினம் + ஏற்றுமதி - இறக்குமதி என்னும் சமன்பாடு கிடைக்கிறது.

கட்டுரை இன்னும் முழுமையாகவில்லை, ஆனால் பிழை எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இங்கேயும் பார்க்கவும். Mayooranathan 20:35, 3 ஆகஸ்ட் 2006 (UTC)

மயூரநாதன் தவறை விளங்கிக் கொண்டேன், குழப்பதின் காரணங்கள்

  1. தலைப்பு பற்றியது.

மொத்த தேசிய உ/தி (gross national product ) மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி(Gross domestic product) இவை இரண்டும் ஒன்றல்ல எனினும் பொதுவாக ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.கட்டுரை இரண்டில் எதைப்பற்றியது என்ற ஐயம்

  1. சமன்பாடு பற்றியது.

இலங்கையில் உற்பத்திவழியிலேதான் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிக்கப்படுகின்றது.அது தொடர்பான சமன்பாட்டினை மாத்திரமே அறிந்திருந்ததால் இச்சமன்பாடு பிழை என நினைத்தேன்.மேலும் ஆராய்ந்தபோது,மொத்த உள்நாட்டு உற்பத்தி செலவீனமுறையிலும் கணிக்கலாம் என தற்போதே அறிந்தேன்.

ஆகவே பிழை உணர்ந்தேன் வார்ப்புருவையும் நீக்கிவிட்டேன்.பேரினப்பொருளியலின் முக்கிய விடயமான இவ்விடயத்தை பற்றி பிழையாக கட்டுரை தொகுக்கப்படகூடாது என்ற உந்துதலின் அடிப்படையிலே அவ்விதம் நடந்துகொண்டேன்.--கலாநிதி 16:51, 6 நவம்பர் 2006 (UTC)

கலாநிதி, இங்கே எழுதப்படுகின்ற விடயங்களை ஆர்வமுள்ள மற்றப் பயனர்கள் கவனித்துக் கேள்வி எழுப்புவதுதான் தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு நல்லது. பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளில் உங்களுடைய ஈடுபாடு வரவேற்கத் தக்கது. நன்றி. Mayooranathan 17:15, 6 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

GNP மற்றும் GDP ஒன்றல்ல. மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஏற்றுமதி - இறக்குமதி) சேர்ந்தால்தான் மொத்த தேசிய உற்பத்தி. மொத்த தேசிய உற்பத்திக்கு தனிப் பக்கம் உருவாக்க நினைக்கிறேன். --நீச்சல்காரன் 02:02, 21 சனவரி 2012 (UTC)[பதிலளி]