பேச்சு:மைகிரண்டு வாட்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

migrant watch - மைகிரன்ட் வாட்சு, indian birds - இண்டியன் பேர்ட்சு என்று குறிப்பிடலாம். national centre for biological sciences - உயிரியில் அறிவி்யல்களுக்கான தேசிய நடுவம் என்று குறிப்பிடலாமா? - −முன்நிற்கும் கருத்து Ravidreams (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

migrant watch - மைகிரன்ட் வாட்ச் என்பது ஆங்கில ஒலிப்புக்கு இன்னும் நெருக்கமாக இருக்கும் அல்லவா?--சிவக்குமார் \பேச்சு 05:07, 6 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]
வல்லின மெய்யெழுத்தில் சொற்கள் (புணர்ச்சி தவிர்த்து) முடிவதில்லை என்பது மரபு. அதனால் மைகிரன்ட்டு வாட்சு எனலாம். தொடர்ந்து மெய்கள் இடையே வருவது இடர் தந்தால் மைகிரன்டு வாட்சு எனலாம். NCBSக்கு உயிர் அறிவியல்களுக்கான தேசிய மையம் என்று தரலாம். அதே போல migrant watch என்பதையும் வலசைக் காவல் நிறுவனம்/அமைப்பு என்பது தகுமா? -- சுந்தர் \பேச்சு 08:18, 6 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

Wood Sandpiper[தொகு]

இதன் தமிழ்ப்பெயர் பொரி உள்ளான் என்று ’தமிழில் பறவைப் பெயர்கள்’ (டாக்டர் க. ரத்னம்) நூலிலும் வயல் உள்ளான் என்று ’Vernacular Birdnames' (BNHS வெளியீடு - பக். 73) -இலும் கொடுக்கப்பட்டுள்ளது. பொரி உள்ளான் சரியெனத் தெரிகிறது. ஆனால், Spotted Sandpiper என்றொரு உள்ளானும் உள்ளதால் குழப்பம் வருகிறது. எது சரி?

Spotted Sandpiper (Actitis macularius syn. Actitis macularia) இந்தியாவிற்கு வருவதில்லை. குழப்பம் இல்லை. அதாவது, பொரி உள்ளான் = Wood Sandpiper--பரிதிமதி (பேச்சு) 03:01, 3 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மைகிரண்டு_வாட்சு&oldid=1337338" இலிருந்து மீள்விக்கப்பட்டது