பேச்சு:மேப்பிள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேப்பிள் என்று வரவேண்டுமோ?--Terrance \பேச்சு 00:48, 30 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

பாணி[தொகு]

பாணி எனப்படுவது சாறு? மேப்பிள் பாணி என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.--சிவக்குமார் \பேச்சு 16:14, 10 டிசம்பர் 2008 (UTC)

பானம் என்னும் சொல்லின் அடிப்படையாக ஆக்கியிருப்பாரோ என்று நினைக்கிறேன். மேப்பிள் மரச்சாறு என்பது நல்ல சொல். தமிழில் கோ என்றாலும் மரச்சாறு என்று பெயர். மரப்பட்டைக்கடியில் ஊறும் நீர்மம். இன்னொரு மிக நல்ல சொல் சேறு (மரபட்டையின் அடியில் சேர்ந்து ஊறும் சேறு (< சேர்)). கழக அகராதி தரும் பொருள் சேறு = (1) அளவு, (2) இனிமை (3), கள், (4) குறிப்பு, (5) செள்ளல், (6) தித்திப்பு, (7) தேன், (8), சீழ் (9) பாகு, (10) திருவிழா.
இவை அனைத்துமே சேர் என்னும் அடிக்கருத்தில் இருந்து எழுந்த பொருட்கள். பல்வேறு இடங்களில் பல்வேறு பொருள் வளர்ச்சி அடைந்து ஆளப்பட்டுள்ளன. பொருள்கள் 2,3, 5, 6, 7 இங்கு மேப்பிள் சேறுக்கு மிகப் பொருந்துவது. அடிப்பொருளில் 8 ஆவது பொருளும் பொருந்துவது (ஊறும் நீர்மம்). மேப்பிள் மரச்சாறு அல்லது சேறு என்பது ஒரு வியப்பூட்டும் விளைவு. எப்பொழுது ஊறத்தொடங்கும் என்று அறிதல் கடினம். தேன் போல் இனிப்புச் சுவை மிகுந்தது. தேறல் என்றால் தேன் என்று பொருள் அதே போல சேறல் என்றும் இதனைச் சொல்லலாம் என்பது என் கருத்து (சேறு --> சேறல்). சேறல் என்றால் தமிழில் நடத்தல், செவ்வல் என்றும் ஏற்கனவே பொருள்கள் உண்டு! இவையும் மேப்பிள் சேறு என்னும் மரச்சாற்றுக்குப் பொருந்தும். ஏனெனில், இதனை ஊறுதல், ஏறுதல், (இறக்குவது, வடிப்பது) என்றும் கூறுவர். தேறல் போல சேறல் என்னும் சொல்லை ஆளலாம். மேலே சுட்டியுள்ள 5 ஆவது பொருளாகிய செள்ளல் என்பது செழித்தல், திரளுதல் என்னும் பொருள் கொண்டது. எனவே அதுவும் பொருந்தும். நல்ல சொற்களை தமிழர்கள் எடுத்தாள வேண்டும். ஆங்கிலத்தில் அறியாத சொற்களை அறிய நேரும்பொழுது எப்படி ஏற்று எடுத்தாள்கிறோமோ அதே போல தமிழிலும் செய்தல் வேண்டும். சேர்->சேறு, சேறல் எளிமையான சொல். மரச்சாறு என்பதனையும் ஆளலாம்.--செல்வா 16:57, 10 டிசம்பர் 2008 (UTC)
பனம் பாணி என்று சொல்வார்கள். இது இலங்கை வழக்கமாக இருக்குமோ? syrup என்பதற்கு இணையாக பயன்படுத்தினே. --Natkeeran 17:09, 10 டிசம்பர் 2008 (UTC)
பாணி என்றாலும் நீர்மம், பழச்சாறு என்னும் பொருள்கள் உண்டு. இன்பம் தரும், இசைவு தரும் உட்கொள்ளும்நீர்மம். பாணி என்பதும் கட்டாயம் இருக்கலாம்.ஏதோ நினைப்பில், இதனைச் சொல்ல மறந்து விட்டேன்! மன்னிக்கவும்.--செல்வா 17:25, 10 டிசம்பர் 2008 (UTC)
கேள்வி மேல் கேள்வி கேட்டு உங்களைப் படுத்துறேனா ;)--சிவக்குமார் \பேச்சு 17:33, 10 டிசம்பர் 2008 (UTC)
தமிழகத்தில் பாணி என்னும் வழக்கு புதிதாகையால் மரச்சாறு என அடைப்புக்குறிக்குள் தருகிறேன். --சிவக்குமார் \பேச்சு 17:28, 10 டிசம்பர் 2008 (UTC)
இல்லை சிவக்குமார் :) நாங்கள் வாழும் வாட்டர்லூவுக்கு அண்டை ஊராகிய எல்மைரா (Elmira) என்னும் ஊரில்தான் உலகிலேயே மிகப்பெரிய மேப்பிள் சேறல் திருவிழா கொண்டாடுவதாகக் கூறுவார்கள். இந்த மேப்பிள் சேறல் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன், இக்கேள்விகளும், உரையாடல்களும், சிந்தனையைக் கிளறிவிட்டன. நன்றி உங்களுக்குத்தான். தமிழில் பாருங்கள், பாணி, தேறல், சேறு (சேறல்), செள்ளல், சாறு ஆகிய பல சொற்கள் உள்ளன. சென்னையில் இரண்டொரு முறை "ஏங்க, ஆரஞ்சு பழச்சாறு இருக்குங்களா" எனக் கேட்க அங்கே "ஆரஞ்சு 'சூசுதானே, ˘சார்?" என்று கேட்கிறார். மீண்டும் மீண்டும் இன்னும் இருமுறை, "அதாங்க, அந்தப் பழச்சாறு, தருவீங்களா" என்றால் மீண்டும் "'சூசுதானே, சார்?" என்று நம்மைப் பார்த்து நம்ப முடியாமல் கேட்டு உறுதிப்படுத்த முயல்கிறார்! என்ன சொல்வது1 பழச்சாறு என்னும் சொல் கடைகளில் பெரிதாக எழுதி வைத்தும், பேச்சு வழக்கிலும் பெரு வழக்காக இருந்தது, நானறிய, ஆனால் அண்மைய 10-15 ஆண்டுகளில் அருகி, அழிந்தே வருகின்றது இச்சொல்லாட்சிகள். மேப்பிள் சிரப் என்று ஏன் எழுதவில்லை, நாட்˘சிகளே, என்று சாடுவோரும் இருப்பர் இன்னாளில். --செல்வா 17:51, 10 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மேப்பிள்&oldid=316987" இலிருந்து மீள்விக்கப்பட்டது