பேச்சு:மேனகா (1935 திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் மேனகா (1935 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

திரைப்பட வரலாற்றில் ஆர்வம் உள்ள யாரேனும் ஒருவர் இந்து ஆங்கில நாளிதழில் வெளியான இந்த குறிப்பைக் கொண்டு, ஒரு சிறு குறுங்கட்டுரையாவது எழுதலாமே? இதனைச் சுட்டி டொராண்ட்டோ பல்கலைக்கழக பேரா. பசுபதி அகத்தியர் குழுமத்தில் ஒரு குறிப்பு விட்டிருந்தார். --செல்வா 03:44, 5 ஜனவரி 2008 (UTC)

திரைப்படங்களும், திரைப்படத்துறையும் இன்றைய தமிழ்நாட்டுச் சமூகத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளவையாகும். இங்கே சினிமா இல்லாத இடமோ துறையோ கிடையாது என்னுமளவுக்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இது பற்றிய முறையான பார்வை நமது மக்களிடம் வளர்க்கப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இதன் வரலாறு, தொழில்நுட்பம், சமூகத் தாக்கம், பொருளியல், அழகியல் போன்ற பல அம்சங்கள் குறித்தும் நிறைய ஆய்வுகள் தேவை. இத்துறை சம்பந்தப்பட்ட தனிப்பட்டவர்கள் பற்றியும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் மக்கள் கொண்டிருக்கும் ஆர்வத்தின் ஒரு பகுதியாவது இத் துறையின் ஏனைய அம்சங்களிலும் செலுத்தப்பட வேண்டும். இத்துறையின் பல்வேறு அம்சங்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதவேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் உண்டு. பொருத்தமான உசாத்துணைகள் கிடைத்தால் முயற்சிக்கலாம். மயூரநாதன் 06:02, 5 ஜனவரி 2008 (UTC)

கனகு, நன்றிகள் பல. ஆம் மயூரநாதன் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. திரைப்படம் மட்டுமல்லாமல், நாளிதழ், மாதிகை (திங்களிதழ்), வானொலி, தொலைக்காட்சி போன்ற பொது ஊடகங்களில் தமிழர்கள் நெடுங்காலமாக சிறப்பான வளர்ச்சிகள் (இந்தியத் துணைக்கண்ட சூழலில், ஒருசிலவற்றில் உலக சூழலிலும்) அடைந்து வந்துள்ளனர். வரலாற்றுக் கண்ணோட்டத்திலும், பிற மொழி, மக்கள் இனங்களோடு நேர்மையாகத் திறன்தேர்வுடன் ஒப்பிட்டு எழுதுதல் வேண்டும். முதலில் வரலாற்று நிகழ்வுகள் உறுதி பயக்குமாறு, சான்றுகோள்களுடன் பதிவாக வேண்டும். திரைப்படத்தொழிலைப்பற்றியும், பின்னணியில், பொதுமக்கள் பெயர்-முகம் அறியாமல் தொழிலுள் புகழ்பெற்றவர்களைப்பற்றியும் எழுதுதல் வேண்டும் (இசையமைப்பாளர்களப் பற்றி, பாடகர்களைப் பற்றி ஓரளவிற்கு அறிவர், ஆனால், ஒளிப்பட இயக்குநர்கள், தொகுப்பாளர்கள் போன்ற தொழில்நுட்பத் திறனாளர்களைப் பற்றியும் எழுதுதல் வேண்டும்.--செல்வா 14:09, 5 ஜனவரி 2008 (UTC)