பேச்சு:மேடான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பொழுதுதான் மேடானிலிருந்து ஜகார்த்தாவுக்கு வந்து சேர்ந்தேன். மேடானில் தமிழர் பலர் வாழ்கின்றனர். ஏராளமான இலங்கையர்கள் தொழில் புரிவதாகவும் கேள்விப் பட்டேன். மேடானில் உள்ள தடுப்பு முகாமில் இலங்கையர் பலர் குடிபெயர்வு தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கு ஸ்ரீ மாரியம்மன் கோவில் என்று தமிழெழுத்துக்களில் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு கோவில் இருக்கிறது. அதன் அருகில் தமிழர்களும் வேறு இந்திய மரபினரும் பெரும்பாலும் உணவுப் பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு சாவடி உள்ளது. அதனை மேடானிலுள்ள ஏனைய இனத்தவர்கள் "கம்புங் கெலிங் (கருங்கிராமம்)" என்று அழைக்கின்றனர். காரணம் கேட்ட போது கறுத்த, கறுத்த ஆட்கள் அங்கு வணிகம் புரிவதால் அவர்கள் அவ்வாறு அழைக்கின்றனராம்.--பாஹிம் (பேச்சு) 11:46, 22 மே 2013 (UTC)[பதிலளி]

தகவல் பதிவுக்கு நன்றி பாகிம்.--Kanags \உரையாடுக 12:13, 22 மே 2013 (UTC)[பதிலளி]

மேடான் நகரிலேயே டெலி சுல்தானின் அரண்மனை இருக்கிறது. இது ஏராளமான உண்ணாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடம். தற்போதைய சுல்தான் கிட்டத்தட்ட பதினைந்து வயதேயான ஒரு சிறுவர். ஆயினும் அவருக்கு ஆட்சியதிகாரம் இல்லை. இவ்வாறான சுல்தான்கள் பலர் இன்னும் இந்தோனேசியாவில் இருக்கின்றனர். அவர்களுக்குத் தமது பாரம்பரிய பட்டங்களைப் பேணுவதற்கும் தமது பாரம்பரியச் சொத்துக்களை வைத்திருப்பதற்கும் உரிமை இருக்கிறது. இத்தகைய சுல்தான்கள் இன்னும் நன்கு செல்வாக்குடனேயே இருக்கின்றனர்.--பாஹிம் (பேச்சு) 04:01, 23 மே 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மேடான்&oldid=1426490" இலிருந்து மீள்விக்கப்பட்டது