பேச்சு:மெதெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் சரியான உச்சரிப்பு மெதெயின் ஆகும். ஏன் வழிமாற்று இன்றி நகர்த்தப்பட்டது எனப் புரியவில்லை. பார்க்க:வங்காள, மராட்டி பக்கத் தலைப்புக்கள். இலக்கணப் பிழைகளுக்கெல்லாம் உரையாடும்போது ஏன் இது உரையாடல் இன்றி நகர்த்தப்பட்டது என்பதும் விளங்கவில்லை. --மணியன் (பேச்சு) 17:11, 7 சூலை 2013 (UTC)

மன்னிக்க வேண்டும். நீங்கள் தவறுதலாக எழுதி விட்டீர்களோ என்று நினைத்துத் தான் மாற்றியிருந்தேன். வங்காள, மராத்தி மொழிகள் எனக்குத் தெரியாது. ஐரோப்பிய மொழிகளில் Medellin என்று எழுதியுள்ளார்கள். மூல எசுப்பானிய மொழியில் Medeljino என்றவாறு எழுதியுள்ளார்கள். இது நீங்கள் கூறுவது போல மெதெயீன் (அல்லது மெதெயின்) என்றவாறே பலுக்கப்படுகிறது.--Kanags \உரையாடுக 21:15, 7 சூலை 2013 (UTC)
கனகு, மன்னிப்பெல்லாம் நமக்குள் எதற்கு ? உங்களைப் போன்ற நீண்டநாள் பயனரின் செய்கை ஒரு காரணத்துடன் இருக்கும் என விளக்கம் பெறவே விரும்பினேன். எனது உரையை இப்போது படித்தால் அவசரத்தில் சற்று வலிதாக எழுதிவிட்டேன் என உணர்கிறேன். ஆங்கிலத்தில் மட்டுமே பழக்கமுள்ள நமது தமிழ் பயனாளர்களுக்காக மெதலின் எனத் தலைப்பிட்டு உள்ளே உச்சரிப்பு:மெதயின்/மெதயீன் எனத் தரலாமா ? --மணியன் (பேச்சு) 02:58, 8 சூலை 2013 (UTC)
மெதலின், மெதயின் ஆகிய இரு பெயர்களையும் "நமது ஆங்கிம் பழகிய தமிழர்களால்" இலகுவாகவே ஒலிக்க இயலும் என்பதால் ஊரின் மூல மொழிப் பெயரையே முன்னிலைப்படுத்தலாம் :) குறிப்பாக, அவ்வளவாக பரவலாக அறிப்பெறாத இது போன்ற பெயர்களுக்கு மூல மொழிப் பெயர்களைத் தருவதே தகும்.--இரவி (பேச்சு) 06:28, 8 சூலை 2013 (UTC)
ஆம், அப்படியே இருக்கலாம்.--Kanags \உரையாடுக 08:19, 8 சூலை 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெதெயின்&oldid=1452908" இருந்து மீள்விக்கப்பட்டது