பேச்சு:மூத்தவிலங்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூத்தவிலங்கு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
  • ஓரணுஉயிரி
  • முதலுயிரி

--Natkeeran 18:48, 7 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

proto=முதல், zoa=விலங்கி இவ்வாறு மூலகிரேக்கச்சொல்லை மொழிபெயர்க்கலாமென்று எண்ணுகிறேன். திருக்குறளில் உள்ள வடமொழிச்சொற்களை பாவாணர் கூறியுள்ளார். அதில் இந்த ஆதி என்பதும் ஒன்று. ஆதிவிலங்கி என்பதனை முன்னுயிரி அல்லது முதலுயிரி எனலாமா?--தகவலுழவன் 05:52, 28 பெப்ரவரி 2011 (UTC)

ஓரணுஉயிரி என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. ஓரணுவுயிரி என்பது Unicellular என்பதையே குறிக்கும் என நினைக்கின்றேன். ஆனால் முதலுயிரி என்பது பொருத்தமாக இருக்கின்றது. மூத்தவிலங்கி என்ற பெயரில் ஒரு கட்டுரை தொடங்கப்பட்டு, Protozoa ஆங்கிலக் கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளதையும் பாருங்கள். எனவே இந்தக் கட்டுரையை அந்த மூத்தவிலங்கி கட்டுரையுடன் இணைத்து விடலாம். அத்துடன் மூத்தவிலங்கி என்பதைவிட முதலுயிரி என்ற பெயர் பொருத்தமாக இருக்குமெனத் தோன்றுகின்றது.--கலை 11:08, 3 மார்ச் 2011 (UTC)

முதலுயிரி என்பது பொருத்தமாக வராது. இதற்குப்போட்டியாக ஆர்கியா என்னும் ஒரு வகை நுண்ணுயிக்குழுவேயுள்ளது. இதற்கான தமிழ் வார்த்தைத் தெறிந்தவுடன் கட்டுரையை ஏற்றிவிடுவேன். அது மட்டுமில்லை. எல்லோருக்கும் உயிர் என்ற வார்த்தையே ஏன் கண்ணிற்கு தெறிகிறது. நம் தமிழில் அவ்வளவு வார்த்தைகளுக்குப் பஞ்சமா.

  • பெயர்க்காரணம்: ப்ரோ - என்றால் முன்தோன்றிகள் என்பது பொருள். அதற்கு முதல், என்ற பொருள் உள்ளது. இதைப்போல் நாளை ஒரு உயிரைக்கண்டு இவைதான் முந்தோன்றி இருக்க வேண்டும் என்று உருவானால் அன்று கலைச்சொல்லிற்கு எங்கே செல்வீர்கள். அனைத்தையும் மனதில் வைத்தே முதலில் ஆதிவிலங்கி என உருவாக்கினேன். ஆனால் திரு. தமிலுழவன், ஆதி என்பது வடமொழி அதற்கு மாற்று முதலுயிரி - முன்னுயிரி பயன்படுத்தலாமே எனக் கோரியிருந்தார். ஆதிக்கு பதில் நம் வீட்டில் முன் தோன்றிகளை நாம் மூத்த என்றே அழைப்போம். ஆகையால் அதற்கு மூத்த என்ற சொல்லைப் பெற்றேன்.

zoa - என்னும் வார்த்தை விலங்கைக் குறிக்கும். பரினாம வளர்ச்சியில் இவை முன் விலங்கிகளாக இருந்திருக்கக்கூடும் என்பதால் இவை protozoa, அதாவது முன்விலங்கி. அவை உயிர்களுக்கு முன் அல்ல, விலங்கினங்களுக்கு முன். நான் பெயர்களை ஆழ அலசாமல் இடுவதில்லை. ஆங்கிலத்தில் பொருள்காரணத்தையும் தமிழில் கலையாக்கம் முழுமையாக இருத்தல் வேண்டியும் உருவாக்கினேன். நான் கலைச்சொல்லாக்கத்தை துலாவிய போது ஆங்கிலத்தை இவ்வளவு அழகாக பொருள் படும்படி ஒன்றோடொன்று உரசாதபடியும் பெயரிடுகிறார்கள். நம் தமிழில் பஞ்சத்தில் வாழ்வது போல் உயிர் என்ற வார்த்தையே எல்லாவற்றிர்க்கும் வருகிறது. நான் உறுதியாக சொல்கிறேன் தமிழில் உள்ள இயற்பெயர்களைத் தவிர எல்லா கலையாக்க சொற்களும் உயிர் என்பதைத் தழுவியே வந்துள்ளது. ஏதோ கடமைக்கு தமிழாக்கமா. ஒன்று உருவாக்கினால் அது பலத்தலைமுறைக்கு நிலைக்க வேண்டும். யாரும் குறை கூறக்கூடாதென்ற நோக்கில் உருவாக்கப்பட்டது. தவறிருப்பின் மன்னிக்க.

உங்களுக்கு இது சரி என்று தோன்றினால் இக்கட்டுரையை ஒன்றினையுங்கள். மேலும், நான் ஏற்கனவே உதவி கோரி இருந்தேன். உயிர் என்பதற்கு வேறு சொற்கள் தேவை. எக்காரணம் கொண்டும் எனது கட்டுரைகளில் உயிர் என்ற வார்த்தை பொருந்தாத வரை கலைச்சொல்லாக்க கட்டுரைகள் அமையாது.

இப்போது இன்னொரு உதவி தமிழ் நண்பர்களுக்கு, முதல் என்ற வார்த்தைக்கும் வேறு சொற்கள் தேவை. கலைச்சொல்லாக்கம் விரைவாக நடைபெறவேண்டும். உதவுங்கள்.

ஆர்க்கியா - என்பது தோற்றம்/தொடக்கம்/முதல்/பழைய என்ற பொருளைக்குறிக்கும். இவை நுண்ணுழையாட்களிலிருந்து (பாக்டீரியா) மாறுபட்ட நுண்ணுயிரி. இவை மெய்க்கருவிலிகள் மற்றும் நிலைக்கருவிலிகளிலிருந்து மாறுபட்டதால் இவை ஆர்க்கியா என்னும் புதுக்கிளைகளில் கார்ல் ஊச் என்பவர் இதை உயிர்களில் தனிக்கிளையாகவே பிரித்துள்ளார். இவைகள் நுண்ணுழையாட்களைப் போன்று கலக்கரு அற்றவைகளாக இருந்தாலும் இவை தனி நுண்ணுயிரி இனத்தைச் சாறும். ஏனென்றால் அப்பண்பைத்தவிர வேறு எந்தப்பண்பும் ஒத்துவராது. இவை பெரும்பாலும் உச்சவிரும்பிகளாக (Extremophiles) இருக்கின்றன. ஆகையால் இவைகளுக்குப் பெயர் பரிந்துரை செய்யுங்கள். என்னுடைய பரிந்துரைகள்.

  • வாழ்தோன்றி
  • பழயுயிரி
  • நுண்ணுச்சவாழி
  • தோன்றின்நுண்ணுழையாட்கள்
  • விசித்திரநுண்ணுழையாட்கள்

மேலும் இருந்தால் தெறியப்படுத்துகிறேன். கட்டுரைத்தயார் நிலையில் உள்ளது. விரைந்து செயலாற்றுங்கள். பெயர்பரிந்துரை செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். ’கௌ’ முதல் ‘னௌ’ வரை ஞு, ஞூ, ஙு, ஙூ ஆகிய பயனற்றுக்கிடக்கும் தமிழெழுத்துக்கள் கலைச்சொல்லாக்கத்தில் இணைத்தால் அவை காலத்தால் சிதைவுறாமல் காக்க முடியும். தமிழன்னை எழுச்சியுறுவாள். உதவுங்கள். நீங்கள் இல்லையேல் வெறுயாறுண்டு நம் அன்னையைக் காக்க. இது என் சிறம் தாழ்ந்த வேண்டுகோள். இவைகள் கலந்த வார்த்தைகளை யார் வேண்டுமானாலும் எனது மின்னஞ்சல் முகவரியில் (augustusleo13@gmail.com) தொடர்புக்கொண்டுத் தெறிவிக்கலாம்.

இணைந்து வாருங்கள். அழிக்க சிதைக்க ஷிங்கலவன் இல்லை உலகமே வந்தாலும் “நாம் நிற்போம் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு நிலைக்கும் குடி என் மறக்குடி என்று”.

உதவுங்கள். எனக்குப் பொது வேண்டுகோள் எவ்வாறு வைப்பதென்று தெறியவில்லை. ஆகையால் இதை வாசிப்போர்.எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் படி செய்யுங்கள்.

வாழ்வே தமிழாக, நன்றிகளுடன் --சிங்கமுகன் 12:28, 3 மார்ச் 2011 (UTC)

வழுஉச்சொல்[தொகு]

விலங்கி என்பது பொருள் தராவண்ணம் அமைந்துள்ளது. இதற்கு மூத்தவிலங்கு என்றே மாற்றம் கொடுக்கலாம் என நினைக்கிறேன். யாரேனும் மறுப்பு தெரிவிக்க விரும்பினால் அதற்கான காரணங்களை கீழேக் கொடுக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். --சிங்கமுகன் 14:20, 6 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுதல் தமிழில் பிழை[தொகு]

இது வழிமாற்றாகவே இருந்தாலும், இப்படி மெய்யெழுத்தில் தொடங்கி சொல்லெழுதுதல் தவறு. இன்றைய முதற்பக்கத்திலேயே இப்படி அடிப்படைப் பிழையுடன் கட்டுரை இருந்தது. திருத்தியுள்ளேன். புரோட்டோசோவா என ஏற்கனவே ஒரு வழிமாற்று இருக்கின்றது. அது போதும். ப்ரோட்டோசோவா வழிமாற்றை நீக்குவதே நல்லது.--70.48.41.93 00:13, 17 ஏப்ரல் 2015 (UTC)

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 08:47, 17 ஏப்ரல் 2015 (UTC)
👍 விருப்பம்--கலை (பேச்சு) 10:05, 17 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மூத்தவிலங்கு&oldid=3414093" இலிருந்து மீள்விக்கப்பட்டது