பேச்சு:மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூடிய மின்சுற்று தொலைக்காட்சி என்பது Closed Circuit TV என்பதன் சொல்லிற்கு சொல் மொழிபெயர்ப்பாகத் தெரிகிறது. இதனை முழுமைச் சுற்றுத் தொலைக்காட்சி என்று குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து.(Closing of a circuit - சுற்று முழுமையாதல்) மேலும் சுற்று என்று குறிப்பது மின்சுற்று மற்றும் பரப்புச் சுற்று இரண்டிற்கும் பொதுவாக இருக்கும். --மணியன் 05:32, 10 ஏப்ரல் 2010 (UTC)

முழுமையடைந்த மின்சுற்றுத் தொலைக் காட்சி (மு.மி தொலைகாட்சி ) அல்லது (மு.மி.தொ.கா) -- இராஜ்குமார் 06:09, 10 ஏப்ரல் 2010 (UTC)
விகச்னரியில் த.இ.ப. பரிந்துரையாக மூடு சுற்று என்றே தந்திருந்தாலும் எனக்கும் அதில் தயக்கம் உள்ளது. மணியனின் பரிந்துரை நன்றாகப் படுகிறது. -- சுந்தர் \பேச்சு 08:40, 10 ஏப்ரல் 2010 (UTC)
முழுமைச் சுற்றுத் தொலைக்காட்சி என்பது closing circuit TV என்பது போல் பொருள் வருகிறதே ? அதனால் தான் முழுமையடைந்த என்று பரிந்துரைத்தேன். மூடின மின்சுற்றுத் தொலைக்காட்சி என்பது சரியாக வருமா? --இராஜ்குமார் 09:19, 10 ஏப்ரல் 2010 (UTC)
இதன் முதன்மையான வேறுபாடு பொதுவாகப் புறவெளியில் அலைபரப்பப்படாமல், மின்வடம் வழியாக ஒரு கட்டத்துக்குள்ளேயோ ஒரு குறிப்பிட்ட சிறுதொலைவுடைய பரப்புக்குள்ளேயோ தொலைக்காட்சியாக செலுத்திக்காணக்கூடியது. ஆகவே இது உள்ளக தொலைக்காட்சி எனலாம். அல்லது அகத்தொலைக்காட்சி எனலாம். --செல்வா 13:44, 10 ஏப்ரல் 2010 (UTC)


பரிந்துரைகளுக்கு அனைவருக்கும் நன்றி. உள்ளகச் சுற்றுத் தொலைக்காட்சி எனக் குறிக்கலாம் எனக் கருதுகிறேன், அனைவரின் கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்.

      --Shanthalan 11:48, 12 ஏப்ரல் 2010 (UTC)

Closed circuit என்பது பொதுவாக மூடிய மின்சுற்று (இயற்பியல்), நிறைவு மின்சுற்று அல்லது நிறைவுற்ற சுற்று (மின்னனுவியல்) என்றே அறியப்படுகிறது. --Maheswari 06:14, 22 ஏப்ரல் 2010 (UTC)