பேச்சு:மூங்கிலிரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@AntanO: இக்கட்டுரை போன்ற குறுங்கட்டுரைகளை எழுதலாமா? en:Category:Articles with 'species' microformats என்ற பகுப்பில் இருந்து, இதுபோல உருவாக்க எண்ணுகிறேன். அப்பொழுது துப்புரவு பணிகள், அதில் வராமல் இருக்க கவனிக்க வேண்டியன கூறுங்கள். இக்கட்டுரையை மாதிரியாகக்கொள்ள விரும்புகிறேன்.பகுப்பு பேச்சு:Articles with 'species' microformats என்பதனையும் காணவும்--உழவன் (உரை) 04:21, 26 பெப்ரவரி 2017 (UTC)

விரைவில் பதிலளிக்கிறேன். --AntanO 04:43, 26 பெப்ரவரி 2017 (UTC)
3 வரிகளுக்குக் குறைவான கட்டுரைகளை நீக்குகிறோம். எனவே தாவரவியல் கட்டுரைகளுக்கு விலக்கு அளிக்கலாமா என ஆலமரத்தடி கொள்கைப் பக்கத்தில் உரையாடலாமா? மேலும் அக்கட்டுரைகளுக்கு தமிழில் எவ்வாறு பெயரிடுவது? --AntanO 06:13, 26 பெப்ரவரி 2017 (UTC)
தற்போது மூன்று வரிகளுக்கும் மேல் விரிவாக்கியுள்ளேன். ஒரு தாவரவியல் கட்டுரையில், வகைப்பாட்டியல் அடிப்படையில் விளக்கம் எழுதினாலே 5வாக்கியங்களாவது வரும். எனினும், அதனை இங்கே செய்யவில்லை. ஒரு தொடக்க நிலை பங்களிப்பாளராகவே விரிவாக்கி உள்ளேன். மேலும், இக்கட்டுரையின் 80% குறிப்புகள் சில இணைப்பு மாற்றங்களோடு பிற கட்டுரைகளுக்குப் பயன்படுத்த இயலும். நாம் ஒருமித்த முடிவை எடுத்தப் பிறகு, பிற நண்பர்களையும் வினவலாமென்று எண்ணுகிறேன். எனவே, இப்பொழுது உங்களின் பார்வையை அறிய விரும்புகிறேன்.--உழவன் (உரை) 09:58, 26 பெப்ரவரி 2017 (UTC)

தலைப்பு[தொகு]

@Muthuppandy pandian: இதன் பெயரை எங்கிருந்து பெற்றீர்கள்? மூங்கிலரிசி கட்டுரை உள்ளதையும் கவனியுங்கள். --AntanO 06:15, 26 பெப்ரவரி 2017 (UTC)

முள்மூங்கில்
எனக்கும் அதே எண்ணம் தான் தோன்றியது.பாண்டியன்! உரிய இணைப்புகளை தந்துள்ளேன். உங்கள் முயற்சியும் உடன் இருந்தால், இதுபோல பலநூறு கட்டுரைகளை நாம் உருவாக்க இயலும். ஆங்கிலப் பெயர்களைப் பார்க்கும் போதும், புற அமைப்பினை காணும் போதும், முள்மூங்கில் என்ற பெயரையும் வைக்கலாம் என்றே எண்ணுகிறேன். காண்க:படம். மலையாளத்தில் ஏதேனும் பெயர் இருக்கிறதா என வினவ வேண்டும். ஏதேனும் தாவரவியல் பெயர்களுடன், இந்திய மொழிகளின் பெயர்களும் உள்ள நூல்கள் கிடைக்கின்றனவா என தேடி வருகிறேன். ஏனெனில், பலருக்கும் ஐயப்பாடு தோன்றாது அல்லவா? உங்களது எண்ணம் அறிய ஆவல்.--உழவன் (உரை) 09:58, 26 பெப்ரவரி 2017 (UTC)

இதன் மூங்கிலிரிசி பெயர் [1] இந்த பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும். தாவரவியல் பெயரான (Bambusa bambos) என்பதற்கு குழாய்மூங்கில் [2] என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் மூங்கிலிரிசி என்ற தலைப்பை குழாய்மூங்கில் என மாற்றலாம் எனக் கருதினேன், ஆனால் இதற்கு பெருமூங்கில் என்ற பெயரும் கொடுக்கப்பட்டு தாவரவியல் பெயராக (Dendrocalamus giganteus) என்று இணைக்கப்பட்டுள்ளது. அதனால் முள்மூங்கில் என்று பெயர் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் மூங்கிலரிசி என்பது மூங்கில் தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு விதையைக் குறிப்பதாக அறிகிறேன். இதற்கு தனிப்பட்ட ஆங்கிலக் கட்டுரை இருப்பதாகத் தெரியவில்லை. --Muthuppandy pandian (பேச்சு) 11:50, 27 பெப்ரவரி 2017 (UTC)

விரிவான விளக்கத்திற்கு நன்றி. தற்போதுள்ள பெயர் அரிசியை ஒத்து இருப்பதால் தேவையற்ற பெயர் குழப்பத்தினைத் தவிர்க்க இப்பெயரை மாற்றலாம். இன்னும் பிற மூங்கில் இனங்களை பற்றி படித்த பிறகு பெயர் மாற்றுதல் பற்றி எனது இறுதியான கருத்தைத் தெரிவிக்கிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--உழவன் (உரை) 16:17, 27 பெப்ரவரி 2017 (UTC)
பெரு முள் மூங்கில் Giant Thorny Bamboo அல்லது இந்திய முள் மூங்கில் Indian Thorny Bamboo என்ற பெயர் ஏற்புடையது. --AntanO 03:01, 28 பெப்ரவரி 2017 (UTC)
பெரு என்றால் பெரிய என்ற பொருள்தானே? ஏனெனில் பெரு என்ற நாடு உள்ளதல்லவா? இது பல நாடுகளில் பரவலாக இருப்பதால், இந்தியா என்ற முன்னொட்டும் வேண்டாமென்றே எண்ணுகிறேன். முள் மாமூங்கில் எனலாமா? 'மா' என்றால் பெரியது. மாமுள் மூங்கில் என்றால் பெரிய முள்ளுடைய மூங்கில் என்ற பொருள் வருவதால் அதனைத்தவிர்த்தேன்.--உழவன் (உரை) 03:29, 28 பெப்ரவரி 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மூங்கிலிரிசி&oldid=2195575" இருந்து மீள்விக்கப்பட்டது