பேச்சு:மூக்குக் கொம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png மூக்குக் கொம்பன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

காண்டாமிருகம் தான் இந்த மிருகத்துக்குப் பொதுப் பெயர் என்று நினைக்கிறேன். மூக்குக் கொம்பன் பொருந்தி வந்தாலும், பொதுப் பயன்பாட்டில் இல்லை என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டு வழக்கமாக இருக்கலாம். --Natkeeran 21:50, 28 பெப்ரவரி 2009 (UTC)


ha ha. enna kodumai saravanan idhu

ippadi ellaam tamil patru mikkavargal iruppaargalnu ninachchi kooda nenachchi kooda paakkala. kadavule !! kadavule !!!

ivangallaam thamizha kaappattattha thamizh enna paavam pannichcho .... paavam :(

phenoyl, acid, thodappakkattai sahitam tamizha suththappaduththum tamil suththigarippu thozhilalargalaana ungala paththi solla vaarththaigal varamatteenguthu :)

kadaisi varaikkum tamil suththigarippu thozhilargalaagiya neenga ezhutharuathu oru rendu moonu naal kazhichchu ungale puriyumaangurathey sandeham thaan...

yaarukku purinjaa enna puriyaatti enna, naanga thamizha phenoyl pottu kazhuvi suththappaduththiyae theeruvomla !!!

vaazhga unga suddhigarippu pani !

phenoyl, acid, thudappaggttai ethaavathu venumnaa sollungo vaangithaaren lol

wikpedia'voda ottu moththa general polciykkum ethiraa pora orey wikipedia tamil wikipediavaaththaan irukkanum.

"group capture" ku oru excellent example tamil wikipedia thaan. −முன்நிற்கும் கருத்து 216.97.231.15 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.


பெரும் தமிழ்ப் புலவரே நீங்கள் முழு ஆங்கில எழுத்தக்களைப் பயன்படுத்தி எழுதியதேனோ. அப்படி இங்கும் எழுதவேண்டும் என்று கேரிக்கை விடுவீர்களோ? --Natkeeran 18:12, 1 மார்ச் 2009 (UTC)


செல்வா, அந்த விமர்சனம் தகுந்ததே, தயந்து பெயரை மாற்ற பரிந்துரைக்கிறேன். நன்றி. --Natkeeran 18:29, 1 மார்ச் 2009 (UTC)

தமிழை ஆங்கிலத்தில் எழுதியவருக்கு.... குறைகளை சுட்டிக்காட்ட உங்களுக்கு (எல்லோருக்கும்) உரிமை உள்ளது. ஆனால் கண்ணியமாக உங்கள் எழுத்து இருக்க வேண்டும். --குறும்பன் 00:47, 2 மார்ச் 2009 (UTC)

தங்கள் கொள்கைகள் மீது நம்பிக்கை உள்ளவர்கள், தாங்கள் சொல்வது நியாயமானது என்று நம்புகிறவர்கள், மற்றவர்களை விமர்சனம் செய்கிறபோது முதலில் துணிந்து உங்கள் முகத்தைக் காட்டவேண்டும். ஒழிந்திருந்து சேறு பூச முயல்பவர்கள் நிச்சயமாக நியாயத்துக்காகப் போராடுபவர்கள் அல்ல. மயூரநாதன் 01:16, 2 மார்ச் 2009 (UTC)


பெயர் காட்ட வேண்டும் என்பது அவசியமல்ல. ஆனால் பண்பாக விமர்சித்தால் ஆரோக்கியமாக இருக்கும். --Natkeeran 01:21, 2 மார்ச் 2009 (UTC)

யார் என்ன சொன்னாலும், முதலில் தலைப்புப் பிரச்சினைக்கு வருவோம். மூக்குக் கொம்பன் என்ற பெயரைப் பார்த்தது நான் இது யாரோ தமிழ்க் கடவுளின் பெயர் என்று எண்ணி விட்டேன்:-) காண்டாமிருகம் என்ற பெயரை முதன்மைப்படுத்தும்படி வேண்டிக் கொள்கிறேன்.--Kanags \பேச்சு 01:29, 2 மார்ச் 2009 (UTC)

மறுமொழி[தொகு]

சற்று பொறுமையாக நான் கீழே கூறவிருப்பதைக் கருத வேண்டுகிறேன். தலைப்பை வேண்டுமென்றால் கட்டாயம் மாற்றலாம். காண்டாமிருகம், காண்டாவிருகம் என்னும் பெயர்களும் அதற்ககன வழிமாற்றுகளும் தந்திருப்பது மட்டுமன்றி, கட்டுரையின் உள்ளே தெளிவாக அச்சு எழுத்துகளில் பிற பெயர்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழில் இவ்விலங்குக்கு உச்சிக்கொம்பன் என்று ஒரு பெயர் உண்டு இங்கே பார்க்கவும் (பக்கம் 389). பொதுவாக உச்சி என்பது தலை உச்சியைக்குறிக்கும், இங்கே மூக்கின் நுனியைக் குறித்து எழுந்த பெயர். எனவே சிறு மாற்றத்துடன் அறிவியற் பெயராக மூக்குக்கொம்பன் என்று தலைப்பிட்டு எழுதினேன். இக்கட்டுரை ஆங்கில விக்கியைத் தழுவி பெரும்பாலும் மொழிபெயர்ப்பாக எழுதியது. இவ்விலங்கின் குடும்பத்தின் அறிவியற்பெயர் Rhinocerotidae என்பது. இவ்விலங்கின் ஆங்கிலப் பெயராகிய "rhinoceros" என்னும் சொல் ῥινός rhinos (= மூக்கு) + κέρας keras (= கொம்பு) என்றே ஆக்கப்பட்டது. மூக்குக்கொம்பன் என்னும் சொல் ஆங்கிலத்தில் கூறும் சொல்லுக்கு நேரான மொழிபெயர்ப்பாக இருந்தாலும் (இதனை calque என்னும் வகையான பெயர்ப்பு என்பர்), தமிழில் அறிவியற்பெயராக மிகப் பொருத்தமானது என்பது என் கருத்து. தமிழில் ஏற்கனவே உள்ள உச்சிக்கொம்பன் என்னும் சொல்லின் ஒரு சிறு மாற்றம்தான் இச்சொல். பெயர் அறிவிக்காத பயனர் கூறுவதுபோல ஏதும் "சுத்தகரிப்பு"ச் செயல் அல்ல. தகுந்த அறிவியற்பெயரால் தலைப்பிட்ட கட்டுரை. மூக்கில் கொம்புள்ள பிற விலங்குகள் இல்லாததால், தனிச்சிறப்பு நோக்கி இப்பெயர் (உச்சிக்கொம்பன் என்னும் தமிழ்ச்சொல்லின் சிறு மாற்றமாக). தக்க இடங்களில தக்க காரணங்களுக்காக புதிய சொற்களை ஏற்கும் பழக்கம் நம்மிடையே அதிகம் இல்லாததால் இப்படிப்பட்ட தயக்கங்கள், எதிர்ப்புணர்வுகள் எழுகின்றன. தலைப்பை மாற்ற வேண்டும் என்றால் கட்டாயம் மாற்றலாம், ஆனால் தேவை இல்லை என்பது என் கருத்து. காண்டாமிருகம் அல்லது காண்டாவிருகம் என்று ஒருவர் தேடினால் கட்டாயம் தேடுபொறிகளில் சிக்கும் இக்கட்டுரை. --செல்வா 04:28, 2 மார்ச் 2009 (UTC) சிறு குழந்தைக்கும் படத்தைக் காட்டி மூக்குக்கொம்பன் என்று கூறினால் எளிதாக புரிந்து கொள்ளும். நினைவில் கொள்ளும்.--செல்வா 04:42, 2 மார்ச் 2009 (UTC)

தமிழக பகுதிகளில் (தற்போதைய சென்னை அருகில்) இவை முன்னர் இருந்துள்ளதற்கான சான்றுகள் கிடைத்ததாகக் கார்த்திக்பாலா ஒருமுறை சொன்னார். அப்படியெனில் இவற்றிற்குத் தமிழில் இயற்பெயர் இருந்திருக்க வேண்டுமேயென்று எண்ணிக்கொண்டிருந்தேன். சுட்டியமைக்கு நன்றி. அறிவியல் பெயராக மூக்குக்கொம்பன் ஏற்கத்தகுந்ததே. இருந்தாலும் பொதுப்பெயரை முதன்மைப்படுத்த விரும்பினால் உச்சிக்கொம்பனையோ, காண்டாமிருகத்தையோ முதன்மைப்படுத்தலாம். எப்படியாயினும் மாற்றுச் சொற்களுக்கான சான்றுகளைக் கட்டுரையில் சேர்த்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 05:03, 2 மார்ச் 2009 (UTC)

// தக்க இடங்களில தக்க காரணங்களுக்காக புதிய சொற்களை ஏற்கும் பழக்கம் நம்மிடையே அதிகம் இல்லாததால் இப்படிப்பட்ட தயக்கங்கள், எதிர்ப்புணர்வுகள் எழுகின்றன. //

புதிய சொற்கள் தமிழாக இருந்தால்தான் நாம் தயங்குவோம். வேறு மொழிகளில் இருந்து வந்தால் தயங்க மாட்டோம். ;) -- சுந்தர் \பேச்சு 05:42, 2 மார்ச் 2009 (UTC)
பொது வழக்குச் சொல் தமிழாக இருக்கும் பொழுது, அதைப் பயன்படுத்துவதே சிறப்பு. தமிழ்நாடு அரசு அறிவியல் பெயர்களை (வேதியியலில்) ஆங்கிலத்தில் இருந்து அப்படியே எழுத்துப்பெயர்ப்பு செய்து பயன்படுத்துவது என்று அறிவித்தல் செய்திருக்கிறது. உயிரினங்கள் அறிவியல் சொற்கள் பற்றி அறியே. ஆனால் பொது வழக்கு சொற்களை இயன்றவரைப் பயன்படுத்துவது நலம். homo sapines என தமிழ் வழக்கு என்ன? எல்லாவற்றையும் நடைமுறையில் தமிழ்ப் படுத்த முடியுமா? --Natkeeran 13:14, 2 மார்ச் 2009 (UTC)
ஒரு 5-6 அகவை (வயது) நிறம்பிய குழந்தைக்கும், படத்தைக் காட்டி "மூக்கின் மேலே கொம்பு இருக்கு பாரு. இதற்கு மூக்குக்கொம்பன் என்று பெயர்" என்றால் தெற்றென விளங்கும். அறிவியல் பெயரும் இதுவே. சிறுகுழந்தையும் புதிய சூழல்களில் பெயர் சூட்ட முனையும் (அறிவு "இயங்கு" நிலையில் வளரும்). ஏன் இப்பெயர் சூட்டி இக்கட்டுரையைத் துவங்கினேன் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். ஒருவர் ஓரிடத்திலே காண்டாமிருகம் என்று சுட்டி எழுதினால் கட்டாயம் இக்கட்டுரைக்கு தொடுப்பு இட்டுச்செல்லும். இந்திய ஒற்றை மூக்குக்கொம்பன், ஆப்பிரிக்க இரட்டை மூக்குக்கொம்பன், சுமத்ரா மூக்குக்கொம்பன் ஆகியவற்றுக்கும் தனிக்கட்டுரைகள் எழுத வேண்டும். காண்டாமிருகம், காண்டாவிருகம் என்னும் சொற்களும், உச்சிக்கொம்பன், கொந்தளம் என்னும் பெயர்களும் எடுத்து ஆளுங்கள். நீங்கள் கேட்டதற்கு: Homo sapiens sapiens என்பதை நாம் தமிழில் ஓமோ உசாப்பியன்சு உசாப்பியன்சு என்று எழுதலாம். ஓமோ உசாப்பியன் என்னும் சொல்லின் பொருள் அறிவு மாந்தன் அல்லது அறியும் மாந்தன் என்பதுதான். "எல்லாவற்றையும் தமிழ்ப் படுத்த முடியுமா" என நீங்கள் கேட்கிறீர்கள். கட்டாயம் முடியும். குறைந்தது அடிப்படையான 50-100 துறைகளில் இளநிலை, முதுநிலை அளவிலாவது தமிழில் கட்டாயம் செய்ய முடியும். கலைச்சொற்கள் ஒரு பொருட்டே இல்லை. 10 மில்லியல்,100 மில்லியன் கலைச்சொற்கள் என்றாலும், அவற்றுள் பலவும் தொடர்புடையன. சில ஆண்டுகளில் பலர் முயன்றால் எளிதாக ஆக்கலாம் (வளர்முகத்துடன், குறிக்கோளுடன் கருத்தாடி முயன்றால்). எடுத்துக்காட்டாக 1000 பேர் 1000 சொற்களை 3 ஆண்டில் ஆக்கினாலும் ஒரு மில்லியன் சொற்கள் ஆக்க முடியும். 70 மில்லியனுக்கும் மேலான எண்ணிக்கையில் வாழும் தமிழர்கள் உள்ளார்கள். கருத்து என்னெவென்றால், வறட்டுத்தனமாக சொற்களை ஆக்காமல்,ஒன்றை அது என்ன, எப்படி இயங்குகின்றது, அதன் பின்னணி என்ன, என்று சூழலுடன், தெளிவாக விளக்குமுகமாக எழுதும் பொழுது இயல்பாக நற்சொற்கள் ஆக்கிப் பயன்படுத்தலாம். இயலாதவிடத்தில் வேற்றுமொழிச்சொல்லை இட்டே எழுதலாம். மேலும் ஆங்கிலேயனும், டாய்ட்சு மொழியாளனும் பிற மொழியாளர்களும் நாளும் புதுச்சொற்கள் ஆக்கிக்கொண்டும், கற்றுக்கொண்டும், பரப்பிக்கொண்டும்தான் இருக்கின்றார்கள். இருக்கவேண்டும். நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும். புதுப்புதுச் சொற்கள் ஏற்படுத்தி வழக்கூன்றுவது எல்லா மொழிகளிலும் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒன்றே. முதலில் "எல்லாம் முடியுமா" என்று கேட்பதை விட, நம்மால் முடிந்த ஒரு சிலவற்றை நமக்குத் தெரிந்தவாறு தேர்ந்து செய்யலாம்தானே. 17,000 கட்டுரைகளுக்கும் மேலே எழுதிய தமிழ் விக்கியில் இப்பொழுதுதான் உச்சிக்கொம்பன்/மூக்குக்கொம்பன் அல்லது காண்டாமிருகம் பற்றி ஒரு கட்டுரை துவக்கம். குறை கூறுபவர்கள் தொடங்கி எழுதியிருக்கலாம்தானே? நான் சற்றேறக்குறைய இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தமிழ் விக்கியில் பங்களிக்கத் தொடங்கிய பொழுது, அடே, நாய், கரடி பற்றியெல்லாம் கூட கட்டுரைகள் இல்லையே என்றுதான் எழுதத்தொடங்கினேன். இன்னும் பல்லியைப் பற்றி ஒரு கட்டுரை இல்லை. எலியைப்பற்றி ஒருவரிக்கட்டுரைதான் உள்ளது. மார்ச் 2007 இல் தவளை பற்றி ஒரு சிறு தொடக்கக் கட்டுரைதான் எழுதினேன். செய்ய ஆயிரம் ஆயிரமாய் உள்ளன, அவற்றில் சற்று கருத்தை செலுத்துவோமே. பெயர் அறிவிக்காத ஒரு பயனர் புனைப்பெயரில் ஒரு பயனர் கணக்கு இட்டுத் தொடங்கினாலும், அவருடன் நேரடியாக நேர்மையான முறையில் கருத்தாடி பார்க்கலாம். போகிற போக்கில், தானும் புரிந்துகொள்ளாமல், பங்களிக்காமல், பண்பற்ற முறையில் எறிந்து செல்லும் கூற்றுகளைக் கொண்டு நாம் ஏன் இங்கு இவ்வளவு நேரத்தை செலவிட வேண்டும்?!--செல்வா 14:41, 2 மார்ச் 2009 (UTC) ˘சாப்பியன்சு என்பதை உசாப்பியன்சு என்று மாற்றியுள்ளேன். உசா என்னும் சொல் தமிழ் வழியும் ஒருவாறு இனமான பொருள் சுட்டும். இது தற்செயலாய் நிகழ்வது. காற்றொலி சகரம் வர இகரம், உகரம் முன்னொட்டாக சேர்க்கலாம். --செல்வா 14:45, 2 மார்ச் 2009 (UTC)
சுருக்கமாக..எனது தற்போதைய பதிலுரை. கலைச்சொல் ஆக்கத்தைப் பற்றி உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். குறிப்பாக ஆங்கில கலைச்சொற்கள் jargaon ஆக அமைவதுண்டு. குறிப்பாக மருத்துவத் துறையில். விளக்கிக் கூறுவது நன்றே. மூக்கும் கொம்பான் என்று இந்த மிருகங்களின் குடும்பத்துக்கு பெயர் இடுவது மிக்க பொருத்தம். ஆனால் புலி என்பதை வரிப்பூனை என்றோ, அல்லது Hippopotamus/நீர்யானையை குதிரை ஆறு என்றோ பெயரிடுவது பொருந்தாது. மொழியில் பல சொற்கள் காரணப் பெயர் இல்லை என்பதையும், எல்லா ஆங்கில சொற்களுக்கும் இணையான காரணப் பெயர்களை தமிழில் தரமுடியாது என்பதும் எல்லோரும் அறிந்ததே. --Natkeeran 15:30, 2 மார்ச் 2009 (UTC)
"எல்லா" ஆங்கிலச்சொற்களுக்கும் கட்டாயம் தமிழில் இணையான சொற்கள் (காரணப்பெயராக) தர இயலும் (குறிப்பாக அறிவியற்பெயர்கள்). முடியாது என்று எதனைக் கொண்டு சொல்கின்றீர்கள்? முதலில் எல்லா என்னும் சொல்லை ஏன் எடுத்தாள்கின்றீர்கள்? பொதுவாக பண்பாட்டுச் சொற்கள், மேலும் பலவகையான சிறப்பான சொற்களுக்கு சரியான ஈடுசொற்கள் கூறுதல் கடினம் (இது தமிழில் இருந்து ஆங்கிலமாயினும் ஆங்கிலத்தில் இருந்து தமிழாயினும் பொருந்தும். பொதுவாக மொழிகளுக்கிடையே முழுவதும் பொருந்துமாறு ஈடுசொற்கள் இருப்பதோ, ஆக்குவதோ கடினம், ஆனால் அறிவியல் சொற்கள் அப்படிப்பட்டதல்ல). சரி உங்கள் கருத்துப்படியே "எல்லா"ச் சொற்களுக்கும் இயலாது என்று கொண்டாலும் (இதனை நான் ஏற்கவில்லை), இயன்றவற்றுக்கு தமிழில் சொல்லலாமே? உச்சிக்கொம்பன் என்னும் சொல் தமிழில் உள்ளதென்பதை ஒப்புக்கொள்வீர்களா? அதன் சிறுமாற்றம்தானே மூக்குக்கொம்பன் (அதே வடிவிலும்தானே உள்ளது). ரைனோசெரசு என்னும் சொல் இதே பொருளைத்தானே தருகின்றது?! மேலும் புலி என்பது தமிழில் வரிப்புலி என்றும் வழங்கும் என்பதை நீங்கள் அறிவீர்களோ மாட்டீர்களோ. புலி என்னும் சொல்லோ, கருத்தோ ஒரு மொழியில் இல்லை என்றால், பூனை என்பதை வைத்து பெரும்/கொடும் வரிப்பூனை என்று சொல் ஆக்கினால் தவறேதும் இல்லை. அப்படித்தான் பல மொழிகளும் பெயராக்கி வழங்குகின்றனர். சொல்வரலாறுகளை (ஆங்கிலத்திலோ, பிற மொழிகளிலோ) பார்த்தால் விளங்கும். ஏதோ 50, 30 என்று சில பல ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ ஆக்கி வழக்கூன்றுவதுதான். சிறு தொகையான சொற்களே பெரும்பாலான மொழிகளில் பல நூறு ஆண்டுகளாக வழக்கில் உள்ளன (தமிழில் நெடுங்காலமாக பல்லாயிரக்கணக்கான சொற்கள் உண்டு). நீர்யானையை ஆற்றுபன்றி என்று கூறினால் ஓரளவிற்காவது பொருந்தும். குதிரைக்கும் இதற்கும் தொடர்பில்லை (ἵππος, hippos = குதிரை). குதிரை ஒற்றைப்படை கால்விரல் கொண்டவகையைச் சேர்ந்த விலங்கு, நீர்யானை இரட்டைப் படை கால்விரல் கொண்ட வ்கையைச் சேர்ந்த விலங்கு. யானை என்பது மிகப்பெரியது என்னும் பொருள் கொண்டதே. யானைமீன் என்பது திமிங்கிலத்துக்குத் தமிழில் ஒரு பெயர். நீரில் அதிக நேரம் கழிக்கும் பெரிய விலங்கு என்னும் பொருளில் நாம் நீர்யானை என்கிறோம். ஆங்கிலத்தில் இருப்பதுபோல் தவறான கருத்தில் பெயரிடப்பட்டதல்ல. அருள்கூர்ந்து வீணே இது பற்றிப் பேசி நேரத்தைச் செலவிட வேண்டாம். உச்சிக்கொம்பன் என்பது போல மூக்குக்கொம்பன் என்பது சரியான சொல் (அறிவியற்சொல். ரைனோசெரசு என்னும் சொல்லுக்கு மிக நேரான, எளிய சொல்). இது என் கருத்து. காண்டாமிருகம், காண்டாவிருகம் ஆகிய சொற்களுக்கும் வழிமாற்றுகள் உள்ளன. உள்ளேயும் தெளிவாக விளக்கி உள்ளேன். இது பற்றி இன்னும் சொல்ல என்ன உள்ளது? ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். தலைப்பு வேண்டாம் என்று பலரும் விரும்பினால், நற்கீரன் நீங்களோ வேறு யாரேனுமோ காண்டாமிருகம் என்றோ அல்லது உங்களுக்குப் பிடித்த வேறு சொல்லுடனோ மாற்றிக்கொள்ளுங்கள். --செல்வா 16:13, 2 மார்ச் 2009 (UTC)
ஒரு சிறு குறிப்பு. நற்கீரன் அனைத்து அறிவியற் பெயர்களையும் தமிழ்ப்படுத்த முடியுமா என்று கேட்டது ஒரு கிளைக்கேள்விதான். அதைப்பொருத்தமட்டில் என்னுடைய எண்ணமும் உங்களுடையதை ஒத்ததே. ஆனால், அதற்கு முன்னர் அவர் எழுப்பியது காண்டாமிருகம் தமிழில் வழங்கி வரும் சொல்தானே என்பதுதான். அக்கேள்வியைப் பொருத்தவரை அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியாது. அறிவியற்பெயர் என்ற அடிப்படையிலும், கார்த்தி கீழே தெரிவித்துள்ளதன் படியும், மாற்றுத் தலைப்புகளில் இருந்து மாற்றுவழி தந்துள்ளபடியாலும் மட்டுமே ஏற்க முடிகிறது. கொந்தளம், காண்டாவிருகம், உட்பட எல்லா பெயர்களையும் ஈடாகப் பயன்படுத்தலாம். (என் தனிப்பட்ட விருப்பத்தின்படி தற்போதைய சூழலில் குறைவான வழக்கில் இருந்தாலும், வழக்கிலேயே இல்லாமல் புதிதாக ஆக்கினாலும் ஒரு நல்ல தமிழ்ச்சொல்லை முதன்மைப்படுத்தலாம். ஆனால் அதை நான் வலியுறுத்தவில்லை.) -- சுந்தர் \பேச்சு 17:05, 2 மார்ச் 2009 (UTC)
ஆனால், வளர்முகப் பங்களிப்புகள் இல்லாமல் வெறுமனே வீண்வாதம் செய்பவர்களிடம் நாம் குறைந்த அளவு பொறுமை மட்டுமே காட்டினால் போதும் என்பதில் உங்கள் கருத்துடன் முழுவதும் இசைகிறேன். -- சுந்தர் \பேச்சு 17:08, 2 மார்ச் 2009 (UTC)
செல்வா..மல்லுக் கட்டுதல் எனது நோக்கம் அல்ல. மொழிபெயர்க்கும் பொழுது காரணப் பெயர் உருவாக்கிக் கொள்ளாம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் எல்லா மொழியெயப்புச் சொற்களும் காரணப் பெயர்கள் தானா எனபது சிக்கலானது. எ.கா பீரங்கி என்ற சொல்லின் பொருள் என்ன? ஒரு மொழியில் எல்லா சொற்களும் காரணச் சொற்கள் அல்ல. பல குறி சொற்களே. காண்டாமிருகம் என்று யார் பெயரிட்டது என்று நான் அறியேன். அது காரணச் சொல்லா அல்லது குறிசொல்லா என்பதும் நான் அறியேன். ஆனால் அது தமிழ்ச்சொல் என்றே நினைக்கிறேன். நெடுங்காலமாக வழக்கில் இருப்பது. வேதியியற் பெயர்களை அப்படியே எடுத்தாள்வது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அறிவியற் உயிரின பெயர்களை மொழி பொயர்த்தல் சாத்தியமான ஒன்று. ஆனால் பிரியாகந்தைடீ என்ற கட்டுரையை நோக்குக. அதை ஒத்த கட்டுரைகள் எல்லாம் இவ்வாறு மொழி பெயர்ப்பது சாத்தியமா? இதற்கு இன்றைய சூழலில் ஒரு நடைமுறைத் தீர்வு வேண்டும் அல்லவா. 1000 பேர், 1000 சொற்கள், 3 ஆண்டுகள் என்பது இன்றைய அரசியல் சமூகச் சூழலில் சாத்தியமா? இவ்வாறு முடிந்தால் மகிழ்ச்சியே. அதனால் அறிவியற் பெயர்கள் தொடர்பாக ஒரு தெளிவான நடைமுறைக்கு ஏற்ற நிலைப்பாடு வேண்டும். --Natkeeran 17:30, 2 மார்ச் 2009 (UTC)
தமிழில் மிகமிகப் பெரும்பாலான சொற்கள் காரணப்பெயர்களே. தமிழில் இடுகுறிப்பெயர்கள் என்பனவும் ஒருகாலத்தில் காரணப்பெயராக இருந்து இன்று அவை காலப்போக்கில் விளங்காமல் இடுகுறியாகின என்பது தமிழர் கொள்கை. எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் ஒரு மரபும் தமிழில் உண்டு. காண்டாமிருகம் என்பது தமிழ்ச்சொல் இல்லை (இதனால் ஆள வேண்டாம் என்னும் கருத்தில் சொல்லவில்லை). காண்டா என்றால் பெரிய என்று பொருள். மிருகம் என்றால் விலங்கு. யானைக்கு அடுத்ததாக உள்ள பெரிய விலங்குகளில் இது அடங்கும். இதனை கட்டுரையிலும் கூறியுள்ளேன். //ஆனால் பிரியாகந்தைடீ என்ற கட்டுரையை நோக்குக. அதை ஒத்த கட்டுரைகள் எல்லாம் இவ்வாறு மொழி பெயர்ப்பது சாத்தியமா? // ஏன் சாத்தியம் இல்லை நற்கீரன். அவன் எந்தப் பொருளில் ஒரு பெயர் இட்டான் என பார்த்து, அது பொருந்துமா பொருந்தாதா, இன்னும் துல்லியமாய் கூறுதல் இயலுமா என்று அறிந்து நாம் ஏன் சொற்கள் ஆக்கி வழங்க்குதல் கூடாது? கட்டாயம் சாத்தியம். தேவையா, பொது வழக்கு என்று ஏதும் கடைபிடிப்பது நல்லதா, பிற நிறைகுறைகள் யாவை என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும். அலகுகளை மொழி பெயர்ப்பதில்லை (பெரும்பாலானவை அறிவியலரைப் பெருமைப்படுத்துமுகமாக இட்டவை), வேதிப்பொருள்கள் மிகமிகப்பெரும்பாலானவை மொழி பெயர்க்கப்படுவதில்லை (பொதுமை கருதி). உயிரினங்களின் "அறிவியற்பெயரில்" தற்காலத்தில் வேறுபட்ட கருத்தோட்டங்கள் உள்ளன. எல்லாம் இலத்தீன் அடிப்படையாக இருக்கத்தேவை இல்லை என்பது டாய்ட்சு போன்ற மொழிகளில் பரவலாகக் காணலாம். எடுத்துக்காட்டாக, அக்காந்துரைடீ (Acanthuridae) (முள்ளுடம்பிகள்) என்னும் மீன் குடும்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதனை டாய்ட்சு மொழியர் Doktorfische என்கிறான் இங்கே பார்க்கவும் நாமும் முள்ளுடம்பிகள் என்றால் தவறில்லை. இணையம் பரவிவிட்ட இந்நாளில் நொடிப்பொழுதில் ஈடுசொற்களைக் கண்டு பயன்கொள்ளலாம். நாம் தமிழில் எழுதிப் படிப்பதே புரிய்யவேண்டும் என்பதற்காகத்தானே. //எ.கா பீரங்கி என்ற சொல்லின் பொருள் என்ன? // இங்கே பார்க்கவும். ஆங்கிலேயனோ, பிற மொழியாளரோ ஏதோ ஒரு காரணம் பற்றி ஒன்றுக்குப் பெயர் வைத்தால், நாம் ஏன் ஐயா அதுபோல ஈடான பெயர் வைக்கலாகாது? ஏன் நம் மொழியில் சொல் வளம் குறைவா, சொற்பொருள் கொள்ளும் மரபு (பொருள்கோண்மை) குறைவா, என்ன குறைவு ஐயா?! இயலாது போயின் வேற்றுமொழிச்சொல்லை எடுத்தாளலாம். முடியாது என்று ஏன் முன்னமே முடிவு கட்டுகிறீர்கள்! தமிழில் எதைப் பற்றியும், எத்தனை ஆழமாகவும், எத்தனை விரிவாகவும், எத்தனை நுணுக்கமாகவும், எத்தனைத் தெளிவாக்வும், படிக்கப் படிக்க அறிவு ஊறும் விதமாக எழுத இயலும். ஏனெனில் தமிழ் நன்கு செழித்து வளர்ந்த, வாழும் செம்மொழி. மெய்யான நெடு மரபுகள் கொண்டது. கடந்த 100-150 ஆண்டுகளில் வெகுவாக தமிழின் செல்வாக்கைக் குலைக்க முயன்று வந்தாலும், வாய்ப்புகள் 1% ஆகக் குறைந்து விட்டாலும், இன்னும் செறிவான உயிர்ப்புடன் இருக்கும் மொழி. --செல்வா 18:38, 2 மார்ச் 2009 (UTC)
இப்போப்போட்டமசு எடுத்துக்காட்டு சிந்திக்கச் செய்கிறது. மற்றபடி, பொருள் குறித்த சொற்களையும், உணர்வொலிக்கிளவிகளையும் விடுத்தால் தமிழில் எஞ்சியிருப்பவை மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவையாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 15:36, 3 மார்ச் 2009 (UTC)
விளக்கத்து நன்றி செல்வா. தமிழ் மொழி நீங்கள் கூறுமாறு வளர நாம் எல்லோரு சேர்து பங்களிப்போம். --Natkeeran 22:52, 3 மார்ச் 2009 (UTC)

அருமையான பெயர்[தொகு]

செல்வா சூட்டியுள்ள பெயர் மிகவும் பொருத்தமான பெயராக எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் காண்டாமிருகத்தில் இருவகை உண்டு ஒன்று இந்திய இனம் மற்றொன்று ஆப்பிரிக்க இனம் (யானைகளைப் போல)! நம்மில் காண்டாமிருகம் என்பது ஏற்கனவே இந்திய காண்டாமிருகத்தை குறிக்கும், ஆதலால் ஆப்பிரிக்க இனத்திற்கு வேறொரு பெயர் மிகவும் தேவையான ஒன்று.

பல விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இன்னும் தமிழ் பெயர் இல்லை மற்றும் புழக்கத்தில் இருந்த பெயர்கள் அழியும் தருவாயில் உள்ளது. தென் இந்தியாவில் காணப்படாத விலங்குகளுக்கு அல்லது அறியபடாத அல்லது நுண்ணுயிரிகளுக்கு தமிழ் பெயரை எதிர்பார்க்க முடியாது, ஆதலால் தக்க பெயரை நாமே சூட்டலாம் (எ. க :கேழல்மூக்கன், இருகலப்பாசி). தக்க பெயர் என்பது அவ்விலங்கு அல்லது தாவரத்தின் புற அமைப்பையோ அல்லது அதன் சூழியல் இயல்பை குறிப்பவையாக இருக்கலாம். மேலும் இத்தகைய குழப்பங்கள் தீர தமிழ் விக்கி சிற்றினங்கள் உதவலாம்! ஒருவர் சூட்டிய பெயரில் முரண்பாடு இருந்தால் பல்வேறு கலந்துரையாடல்களுக்கு பிறகு ஏற்றுக்கொள்ளலாம்.

நக்கீறன் கூறியது போல பண்பாக விமர்சித்தால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். --கார்த்திக் 11:06, 2 மார்ச் 2009 (UTC)

நன்றி கார்த்திக்.--செல்வா 18:46, 2 மார்ச் 2009 (UTC)

ஒப்பீடு[தொகு]

விகடனின் பிரிட்டானிக்கா தகவல் களஞ்சித்தில் 28,000 குறுங்கட்டுரைகளே உள்ளன. அதிலுள்ள காண்டாமிருகம் கட்டுரையைக் காட்டிலும் நம்மிடம் கூடுதலான தகவல்களும் படங்களும் உள்ளது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். அதிலும் அவர்களிடத்தில் தகவல் பிழைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, வெள்ளை நிற காண்டாமிருகங்கள் என்றே கூறுகின்றனர், மருஉ எனக் குறிப்பிடவில்லை. இக்கட்டுரை அளவு தரத்தில் 30,000 கட்டுரைகளை ஆக்கினோமானால், அச்சுப்பதிப்பாகவோ, குறுவட்டாகவோ வெளியிடலாம். -- சுந்தர் \பேச்சு 16:47, 3 மார்ச் 2009 (UTC)

தகவலுக்கு நன்றி சுந்தர். ஒன்றை நேர்மையுடன் கூறிக்கொள்வேன். நாம் முயன்றால் ஆங்கிலம் உட்பட எந்த மொழிக்கும் இளைக்காமல் சிறப்பாக கட்டுரைகளை ஆக்க இயலும். நம்மில் இன்னும் ஒரு 10-20 பேர் ஆர்வமுடன் முன் வந்து நாளொன்றுக்கு ஒரு கட்டுரை என்னும் வீதம் பங்களித்து உதவினாலும், இந்நிலையை ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் எட்ட இயலும். பொறுப்புடன் செப்பம் சேர்த்துக்கொண்டே செல்லுதலும், குறைகளை (எழுத்துப்பிழை, சொற்றொடர் பிழை) களைந்துகொண்டே வருதலும் செய்து வந்தால் ஒப்பற்ற கலைக்களஞ்சியமாக உருவெடுத்து வளரும். மிக அருமையான கட்டுரைகள் மேற்கு ஐரோப்பிய மொழிகளில் உள்ளன, மறுக்கவில்லை, ஆனால் அவற்றைப் போலவோ, அல்லது அவற்றை விஞ்சும் விதமாகவோ நாமும் எழுத இயலும் (5 கிலோ 'பைட் அளவாயினும், 100 கிலோ 'பைட் அளவாயினும்). எழுத வேண்டும்! விடாது உழைக்க வேண்டும்! என் விருப்பம் என்னவென்றால் ஆங்கில விக்கியில் சிறப்புக் கட்டுரை என்னும் தரம் எய்திய 2400 உக்கும் அதிகமான கட்டுரைகளில், பெரும்பாலானவற்றையேனும் தமிழில் அதே நேர்த்தியுடன் ஆக்குதல் வேண்டும். அவற்றுள் சில துறைகளில் உள்ள சில கட்டுரைகள் தமிழில் இப்போதைக்கு அத்தனை விரிவாக இருக்கத்தேவை இல்லை (ஏனெனில் நமக்கு அவ்வளவு முக்கியம் இல்லை). ஆனால் உயிரியல், அறிவியல், தொழில்நுட்பம், புவியியல், மருத்துவம் போன்ற துறைகளில் உள்ள கட்டுரைகளை எழுதுதல் வேண்டும்.--செல்வா 17:52, 3 மார்ச் 2009 (UTC)

ஒற்றைக் கொம்பன்[தொகு]

தமிழில் காட்டுயிர்களைப் பற்றி எழுதி வரும்[1] வெகுசிலரில் ஒருவரான சு. தியடோர் பாசுக்கரன்[2] இந்திய மூக்குக்கொம்பனை ஒற்றைக் கொம்பன்[3] என்று குறித்துள்ளது கவனிக்கத்தக்கது. -- சுந்தர் \பேச்சு 17:46, 11 மார்ச் 2009 (UTC)

மேலும் இந்நூலில் எழுபதுகளில் நெல்லை மாவட்டம் சாத்தான்குளத்தில் கிணறு வெட்டுகையில் இந்திய ஒற்றைக்கொம்பனின் எலும்பின் புதைபடிவம் ஒன்றை சு.கி.செயகரன் என்ற புவியலாளர் கண்டெடுத்தார் என்ற குறிப்பும் உள்ளது. இதன்மூலம் இவ்விலங்கு தமிழகத்தில் வாழ்ந்திருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. -- சுந்தர் \பேச்சு 17:52, 11 மார்ச் 2009 (UTC)
மிக்க நன்றி, சுந்தர்! --செல்வா 19:00, 11 மார்ச் 2009 (UTC)
தகவலுக்கு நன்றி, சுந்தர். சிந்துவெளி பண்பாட்டு முத்திரைகளிலும் ஒருவகையான ஒற்றைக்கொம்பு விலங்கு காட்டப்படுகின்றது. இது மூக்குக்கொம்பன் போல ஓரளவுக்கு இருந்தாலும், இது என்ன விலங்கு என்று விளங்கவில்லை. நெற்றிப் பகுதியில் ஒற்றைக் கொம்புள்ள unicorn என்று அழைக்கப்படும் (கற்பனை??) விலங்கும் உள்ளது. மூக்கின் நுனியில் கொம்புள்ள உச்சிக்கொம்பனை (இந்திய ஒற்றை மூக்குக்கொம்பனை) ஒற்றைக்கொம்பன் என்பது பொருத்தமான சொல்! பொதுவாகவே கொம்பு என்றால் தலை உச்சியில் இருப்பது என்று நினைப்பது வழக்கம், ஆனால் சிறப்பாக மூக்கில் கொம்பு இருப்பது என்று சுட்டுவது கூடுதலான பொருத்தம் உடையது என நினைக்கிறேன். ஆனால், மூக்குக்கொம்பன் அல்லாத மூக்கில் கொம்புள்ள பிற உயிரினங்கள் முன்னர் இருந்திருக்கின்றன ஆனால் அவை அற்றுவிட்டன. அற்றுவிட்ட உயிரினமான Babirusa என்னும் விலங்குக்கு மூக்கிலும் கொம்பு, கீழ்த்தாடையிலும் மேல் நோக்கிய கொம்பு உள்ளன!! இரட்டைக் கிளை உடைய மூக்குக்கொம்புள்ள இறந்து பட்ட இனங்களும் முன்னர் இருந்தன!!--செல்வா 18:06, 11 மார்ச் 2009 (UTC)
வியத்தகு தகவல்கள், செல்வா. "இந்திய மூக்குக்கொம்பன்" மற்றும் "இந்திய ஒற்றைக்கொம்பன்" என்ற இரு பயன்பாடுகளையும் தரலாம். -- சுந்தர் \பேச்சு 18:12, 11 மார்ச் 2009 (UTC)
இந்தப் படத்தைப் பாருங்கள் Babyrousa என்னும் இனம் அற்றுவிடவில்லை!!--செல்வா 18:28, 11 மார்ச் 2009 (UTC)
இவை கொம்புகள் அல்ல கோடுகள் என்றே நினைக்கிறேன். கீழ்தாடையிலிருந்து மேல்நோக்கி வளரும் கொம்புகள் எப்படி இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன், இப்படம் தெளிவுபடுத்தியுள்ளது. நன்றி, செல்வா. -- சுந்தர் \பேச்சு 18:31, 11 மார்ச் 2009 (UTC)
ஆம் யானைக் கோடு ("கொம்பு") போல் இதுவும். கொம்பு என்னும் சொல்லின் பொருள் வளைந்தது என்பதுதான். குறிப்பாக யானை, பன்றி இவற்றின் எயிறு (=பல்) நீட்டிக்கொண்டிருப்பதைக் கொம்பு என்று கூறுவது வழக்கம். சென்னை அகரமுதலியைப் பாருங்கள் (இப்பக்கத்தில், கொம்பு என்னும் சொல்லின் 6 ஆவது பொருளைப் பாருங்கள். கோடு என்பது வளைந்தது என்னும் பொருள் கொண்டதே. இதனாலேயே நேர்க்கோடு (நேர்கோடு) என்று கூறுகிறோம். கொடு (வளைந்தது)> கோடு. இப்பொழுது சுருக்கமாக சுலவேசி நாற்கொம்புப் பன்றிக்கு ஒரு கட்டுரை உருவாக்கியாயிற்று. --செல்வா 18:58, 11 மார்ச் 2009 (UTC)
விளக்கத்துக்கும் குறுங்கட்டுரை உருவாக்கியதற்கும் நன்றி, செல்வா. கொம்பு என்பது மயிர்ப்பொருளால் ஆன உறுப்பை மட்டும் குறிக்கும், எயிற்றினை அல்ல என்று தவறாக எண்ணியிருந்தேன். -- சுந்தர் \பேச்சு 04:40, 12 மார்ச் 2009 (UTC)
ஆம் இது பொதுவான குழப்பம்தான். தலையில் இருக்கும் கொம்புகள் நகமியம் என்னும் பொருளால் ஆனது. எயிறு அப்படியல்ல. மான்களின் கொம்புகளுக்கும், மாடுகளின் கொம்புகளுக்கும், ஆங்கிலத்தில் வெவ்வேறு பெயர்கள் உள்ளன (antler, horn), ஆனால் தமிழில் கொம்பு என்பது பொதுவான சொல். எயிறு, கோடு என்பது பொதுவாக யானை பன்றி இவற்றுக்குக் கூறும் சொற்கள். மான்களின் கொம்புக்கு கலை என்று கூறுகின்றோம். கலைக்கொம்பு என்னும் சொல்லும் உண்டு. மான்களின் கலைக்கொம்பு வளரும்பொழுது அதன் மேல் தோல் போன்ற மெத்தென்றிருக்கும் ஒரு படலம், கொம்பின் வளர்ச்சிக்கு ஊட்டம் தருகின்றது. முழுவதும் வளர்ந்தபின் அத் தோல் போன்ற மேற்படலம் விலகிவிடும். இதனால், கொம்பும் "செத்துவிடும்", பின்னர் கழன்று விழுந்துவிடும். மீண்டும் அடுத்த பருவத்தில் முளைக்கும். மாடுகளின் கொம்புகள் அப்படி இல்லை, நிலைத்து இருப்பது - ஆண்டுதோறும் விழுந்து முளைப்பதில்லை. கொம்புக்கு மருப்பு, உலவை என்னும் பிற சொற்களும் உள்ளன.--செல்வா 14:20, 12 மார்ச் 2009 (UTC)

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "அக்கறையும் ஆதங்கமும் இணைந்த குரல்". திண்ணை. பார்த்த நாள் 2009-03-11.
  2. "நேர்காணல்: தியடோர் பாஸ்கரன்". காலச்சுவடு. பார்த்த நாள் 2009-03-11.
  3. சு, தியடோர் பாசுக்கரன் (2006). "ஒற்றைக் கொம்பனுக்கு மறுவாழ்வு". இன்னும் பிறக்காத தலைமுறைக்காக. சென்னை: உயிர்மை பதிப்பகம். பக். 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-89912-01-1.