பேச்சு:முருகன் இட்லி கடை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

விக்கிப்பீடியாவில் கடைக்களுக்கு விளம்பரமும் செய்யமுடியுமா? இப்படி இட்லி கடை, வடை கடை, தோசை கடை, ரொட்டி கடை, சோறு கடை, புடவை கடை என எழுதுவதானால் கோடிக்கணக்கில் எழுத முடியும். இது எதிர்கால தமிழருக்கு மிகவும் அவசியாமானது. நானும் எனது கடைப்பற்றி எழுதவேண்டும். நன்றி! - மொஹமட்

எக்கடைக்கும் இங்கு விளம்பரம் செய்ய இயலாது. மிகப் புகழ்பெற்ற பிற ஊடகங்களில் விளம்பரமில்லாத செய்திகள் இடம்பெற்ற கடைகளைப் பற்றி மட்டுமே “கட்டுரை” எழுத முடியும். முருகன் இட்லிக்கடை என்பது மதுரையின் புகழ்பெற்ற் கடை மட்டுமல்லாது அரசியல் சர்ச்சைகளிலும் சிக்கியது. இதற்கு புற ஊடகங்களில் பெரும் கவரேஜ் உண்டு. எனவே இது இங்கு இடம்பெற முழுத்தகுதியானது. --சோடாபாட்டில்உரையாடுக 08:15, 1 ஏப்ரல் 2011 (UTC)
ஐயா சோடாபொத்தல் நீங்கள் எழுதியிருக்கும் கடையில் அரசியல் சர்ச்சை எதுவுமே எழுதப்படவில்லையே. //இங்கு இட்லி தவிர சர்க்கரைப் பொங்கல் மற்றும் ஊத்தப்பமும் புகழ்பெற்றது [1]. காலை 7 மணிமுதல் இரவு 1130 வரை எந்நேரமும் இட்லி கிடைப்பது முதன்மையான பண்பாக விளங்குகிறது.//பெரிய எழுத்துக்கள் என்பது 100% வீதமான விளம்பரம் தானே ஐயா. அவரவர் தனது இஸ்டத்திற்கு கொள்கை வகுத்துகொண்டு அதையே விக்கிபீடியா கொள்கை என்பது சரியா ஐயா? -மொஹமட்
கட்டுரையில் தற்போது அரசியல் சர்ச்சை குறித்து எதுவும் இல்லை. ஆனால் இது அரசியல் சர்ச்சையில் சிக்கிய கடை என்பதால் இது குறித்து புற ஊடகங்களில் பல முறை செய்திகள் வெளியாகியுள்ளன. விக்கிப்பீடியாவில் ஒரு விசயம் இடம்பெறுவதற்கான அளவுகோலாக புற ஊடகங்களில் செய்தி வெளியாவதைக் கொண்டுள்ளோம். en:WP:GNG கொள்கைக் கேற்ப இது விக்கிப்பீடியாவில் இடம்பெற தகுதியானதே. மேலும் மதுரையைக் குறித்த பல புத்தகங்களிலும், இதழ்களிலும் இக்கடை குறித்த குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. தி இந்து நாளிதழில் வெளியான செய்தியைக் கொண்டே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இட்லி கிடைப்பது ஒரு வர்த்தக நிறுவனத்தின் பண்பாகத் தான் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது விளம்பரம் போல எனக்குத் தோன்றவில்லை.
>>அவரவர் தனது இஸ்டத்திற்கு கொள்கை வகுத்துகொண்டு அதையே விக்கிபீடியா கொள்கை என்பது சரியா ஐயா
தனிமனிதத் தாக்குதல்களையும் கிண்டலையும் நீக்க வேண்டுகிறேன். நான் காட்டிய சுடடியினை படியுங்கள், பின்பு நான் என் இஷ்டத்துக்கு கொள்கையை வகுக்கிறேனா என்பது புறியும் ( If a topic has received significant coverage in reliable sources that are independent of the subject, it is presumed to satisfy the inclusion criteria for a stand-alone article or stand-alone list.) --சோடாபாட்டில்உரையாடுக 08:31, 1 ஏப்ரல் 2011 (UTC)

எக்கடைக்கும் இங்கு விளம்பரம் செய்ய இயலாது என்றால், இங்கு இட்லி தவிர சர்க்கரைப் பொங்கல் மற்றும் ஊத்தப்பமும் புகழ்பெற்றது என்பதும் காலை 7 மணிமுதல் இரவு 1130 வரை எந்நேரமும் இட்லி கிடைப்பது என்பதும் விளம்பரம் தானே? - மொஹமட்

வணிக நிறுவனத்தைப்பற்றி எழுதும் போது அதன் பண்புகளைத் தானே எழுத முடியும்?. இது உணவகம் என்றால் அதன் உணவைத் தானே எழுதமுடியும்? இதில் என்ன விள்ம்பரம் உள்ளது. மைக்ராசாஃப்ட் நிறுவனம் விண்டோசு மென்பொருளுக்கு புகழ்பெற்றது என எழுதினால், அது மைக்ரோசாஃப்டுக்கான விளம்பரமா?. மேலும் ”நீங்கள் எழுதியிருக்கும் கடையில்” என்று குறிப்பிடிருக்கிறீர்கள். இது நான் எழுதிய கட்டுரை அல்ல. யார் எழுதியுள்ளார்கள் என்பது கட்டுரையின் வரலாற்று பக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்--சோடாபாட்டில்உரையாடுக 08:41, 1 ஏப்ரல் 2011 (UTC)
விளம்பர நோக்கம் கொண்டு இக்கட்டுரையை எழுதியிருக்காவிடினும், மொஹமட் கூறியுள்ள சில பகுதிகளை நீக்கலாம் அல்லது அவற்றை வேறு வகையில் எழுதலாம். இட்லி தவிர சர்க்கரைப் பொங்கல் மற்றும் ஊத்தப்பமும் விற்கப்படுகிறது என்பதே போதுமானது. திறந்திருக்கும் நேரம் போன்றவையைத் தவிர்க்கலாம்.--Kanags \உரையாடுக 08:49, 1 ஏப்ரல் 2011 (UTC)
கனக்ஸ் நீங்கள் இதை மாற்றம் செய்யுங்கள். எனக்கு இதில் மறுப்பில்லை. ”திறந்திருக்கும் நேரம்” இங்கு ஏன் எஸ்ஸார் குறிப்பிட்டுள்ளார் என்றால் (கட்டுரையை எழுதியவர், மதுரைக்காரர்), அனைத்து நேரங்களிலும் இட்லியை விற்றதால் தான் இது முதலில் புகழ்பெற்றது. எந்நேரம் சென்றாலும் இட்லி கிடைக்கும் speciality shop என்று புகழ்பெற்று gourmet magazine / lonely planet என்று பெயர் பரவியது. என் பார்வையில் இத்தகவல் விளம்பரம் போல் படவே இல்லை. மொஹமட், உங்களை கிண்டலடிக்காதீர்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். (எனக்கு கொடுத்திருந்த பதக்கம் நன்றாகத் தான் இருந்தது, தனிப்பட்ட முறையில் சிரித்துவிட்டேன், ஆனால் விக்கியில் சீரியசாக மிகுதியான மதிப்புடன் ஒருவரை ஒருவர் நடத்துவது வழமை). எனவே கிண்டலை நீக்கும்படி மீண்டும் வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:58, 1 ஏப்ரல் 2011 (UTC)
மொஹமட் இரு விமரிசனங்களை முன்வைத்துள்ளார்
1) விக்கிப்பீடியாவில் இது போன்ற கட்டுரைகள் இடம் பெறுவது சரியா?
2) வரும் வாக்கியங்கள் விளம்பரம் போல் உள்ளன
முதல் விமர்சனத்துக்கு தெளிவாக GNG கொள்கைக்கேற்ப இது இடம்பெறத் தகுதியானது என்று விளக்கியுள்ளேன்
இரண்டாவதற்கு நிறுவனத்தின் “முதன்மைப் பண்பு” என்று கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது ஏன் என்பதையும் விளக்கியுள்ளேன். இது விளம்பரமா இல்லையா என்பதை பிற விக்கியர்கள் முடிவு செய்யுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 09:03, 1 ஏப்ரல் 2011 (UTC)

விக்கிப்பீடியா இலாபநோக்கற்ற நிறுவனம். இங்கு பங்களிப்போர் யாரும் யாரிடமிருந்தும் ஆதாயம் பெறும் நோக்கில் எழுதுவதில்லை. தமிழ்த்தொண்டு செய்த மனநிறைவு ஒன்றையே எண்ணி இங்கு இயங்குகின்றனர். முருகன் இட்லிக்கடை, அண்ணாச்சி மெஸ் போன்றவை தமிழகத்தில் பல ஊர்களுக்கும் செல்வோர் பலரால் நன்கறியப்பட்ட இடங்கள். இவற்றைப் பற்றி எழுதுவதில் தவறேதும் இல்லை. த.வி என்பது வெறுமனே ஆங்கிலக் விக்கியின் மொழிபெயர்ப்பாக மட்டும் இல்லாமல் மண்மணம்(மும்) வீசும் இடமாக இருக்க வேண்டும். ஆங்கில விக்கிப்பீடியாவில் ஹோட்டல் சரவணபவன் கட்டுரையைப் பாருங்கள். புகைப்படம் எல்லாம் சேர்த்திருப்பார்கள். தீவிரமாய்க் கண்காணிப்பு நடக்கும் அங்கே கூட அதை யாரும் விளம்பரம் என்று நீக்கவில்லை. இது போன்ற தேவையற்ற சர்ச்சைகளில் ஆற்றலை வீணாக்காமல் நாம் அந்நேரத்தில் நாலு வரிக் கட்டுரையாவது எழுதுவது நல்லது என்று எண்ணுகிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:29, 2 ஏப்ரல் 2011 (UTC)

முருகன் இட்லி கடை என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முருகன்_இட்லி_கடை&oldid=3492629" இலிருந்து மீள்விக்கப்பட்டது