பேச்சு:முப்படிக் கோட்டுரு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"முவ்வலுவுள்ள" என்பதை மூவலுவுள்ள எனலாம். --செல்வா (பேச்சு) 22:13, 2 சூன் 2020 (UTC) @செல்வா: நன்றி. மாற்றி விடுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 03:46, 4 சூன் 2020 (UTC)[பதிலளி]

@Booradleyp1: கடினமான வேற்றுமொழிப்பெயர்களைத் தமிழில் இயல்பாக வழங்குமாறு எழுதி,பிறைக்குறிக்குள் உரோமன் எழுத்தில் அவர்களின் பெயரை வழங்ககலாம். "டபிள்யூ" என்றெழுதுவதினும் வில்லியம் என்றே எழுதிவிடலாம். "டைக்" என்றெழுதினாலும் ஏதும் விளங்கப்போவதில்லை. எனவே "தைக்கு" என்றெழுதி பிறைக்குறிக்குள் (Dyck) என்றெழுதுவது நல்லது. இதனை நான் மாற்றத்தொடங்கினேன் என்றால், முதலில் நீங்கள் எழுதிய பெயர்களில் பீட்டர்சன் கோலத்தைப் பற்றி முனனரே அறிவேன், ஆனால் மற்ற பெயர்கள் யாரைக் குறிக்கின்றன என்று அறிய முடியவில்லை. குறிப்பாக "பிரச்ட்" என்றெழுதியது யார் என்று ஆங்கில விக்கிக்குப்போய் கண்டுபிடித்தேன். Frucht என்னும் பெயரை "ஃப்ரூஷ்ட்[டு]" என்பது போல அல்லது "ஃப்ரூஃக்ட்[டு]" (froohqt) என்பது போல ஒலிக்கவேண்டும். நாம் புரூட்டு என்று எழுதி புழங்கினால் சரியாக இருக்கும். இப்பெயர்களும் அவற்றின் ஒலிப்புகளும் சிக்கலானவை. நம் நாவில் எளிதாக மூச்சு விட்டு சொல்லுமஆறு இருக்க வேண்டும். எல்லா மொழியினரும் அவ்வாறுதான் செய்கின்றார்கள் (நம் மொழிப்பெயர்களை ஆங்கிலேயர் ஒலிக்க முடியாது எல்லா எழுத்துகளும் இருந்தாலுங்க்கூட. கொரிய-சப்பானியர்கள் தங்களின் மொழிக்கு உகப்ப உயிரெழுத்துகளி இடையே சேர்த்து தங்கள் மொழியினுள் சற்றேலும் இயல்பாக ஒலிக்குமாறே ஒலிக்கின்றனர். சப்பானியர்கள் McDonald என்பதைய்டையே உயிரொலி இல்லாமல் ஒலிக்க இயலுவதில்லை. நாமும்கூட மெக்குடொனால்டு என்றுதான் ஒலிக்க இயலுகின்றது மீச்சிறுபான்மையரால் இஐயே வரும் உயிரொலியை மிகக்குறுக்கி ஒலிக்க இயலும், ஆனால் எல்லோராலும் அல்ல. Tutte என்பாரின் பெயரை TAT என்பது போலத்தான் ஒலிக்கின்றார்கள். இவர் எங்கள் வாட்டர்லூ பல்க்லைக்கழகத்தில் இருந்தவரே. நாம் தட்டு அல்லது தாட்டு என்றெழுதுவது முறையாகும். Coxeter என்னும் பெயரை எப்படி ஒலிக்கவேண்டும் என்று இங்கே சொல்கின்றார்கள் https://www.howtopronounce.com/coxeter கோஃக்.சிட்டர் என்பத் போல சொல்கின்றார்கள். நான் கோசிட்டர் என்று எழுதியும் சொல்லியும் வரலாம். தவறில்லை. Raman என்பதைக்கூட இங்கே ரேமன் என்றோ ரமான் என்றோதான் ஒலிக்கின்றார்கள். கேஅண்டி (Gandhi), பூ'டா (Boodaa) என்றுதான் ஒலிக்கின்றார்கள். இதனால் தவறில்லை. எளிமையாக ஒலிக்குபடி பெயர்கள் இருந்தால் நல்லது. திரிபு இல்லாமல் எழுதவோ ஒலிக்கவோ முடியவே முடியாது. --செல்வா (பேச்சு) 20:40, 8 சூன் 2020 (UTC)[பதிலளி]

@செல்வா: பிற மொழிப்பெயர்களை தமிழ் ஒலிப்புக்கு மாற்றுவது எனக்கு சிக்கலாகத்தான் உள்ளது. இனிவரும் கட்டுரைகளில் உங்கள் பரிந்துரையைக் கவனத்தில் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:20, 9 சூன் 2020 (UTC)[பதிலளி]