பேச்சு:முத்தொள்ளாயிரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிற்றிலக்கியம் அன்று[தொகு]

எந்த அடிப்படையில் முத்தொள்ளாயிரத்தைச் சிற்றிலக்கிய வகையில் சேர்த்திருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. சிற்றிலக்கியம் என்றால் குறிப்பாக ஒரு புலவர் பாடியிருக்க வேண்டும். ஒரு மன்னன் மீது இயற்றப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு அளவுகோல்களுக்கும் முத்தொள்ளாயிரம் பொருந்தாது. மேலும், சிற்றிலக்கியம் என்பது இடைக்காலத்தில் ஏற்பட்ட வகை. இவற்றுக்கு வச்சணந்தி போன்றோர் இலக்கணம் செய்திருக்கின்றனர். முத்தொள்ளாயிரமோ, வச்சணந்திக்கெல்லாம் காலத்தால் மிகமிக முற்பட்டது. ஆகவே, இதனைச் சிற்றிலக்கிய வகையில் சேர்ப்பது பொருந்தாது. தொகைநூல் என்ற வகையில் சேர்ப்பதே பொருந்தும். --ஹரி கிருஷ்ணன் 03:24, 5 ஜூன் 2007 (UTC)

ஹரி கிருஷ்ணன், இக்கட்டுரைத் தகவல்களை மீண்டும் சரிபார்க்கிறேன். கருத்துக்கு நன்றி.--Kanags 12:58, 5 ஜூன் 2007 (UTC)

திருத்தி எழுதியுள்ளேன். நன்றி.--Kanags 05:35, 1 ஜூலை 2007 (UTC)

ஒற்றுப் பிழைகள்[தொகு]

விக்கிபீடியாவில் பல இடங்களில் ஒற்றுப் பிழையைக் காண்கிறேன். எடுத்துக் காட்டாக 'பக்கத்தை சேமிக்கவும்', 'மாற்றங்களை காட்டு' என்று உள்ள பொத்தான்களில் முறையே ச், க் ஆகியவை சேர்ந்து, 'பக்கத்தைச் சேமிக்கவும்' என்றும் 'மாற்றங்களைக் காட்டு' என்றும் இருக்க வேண்டும். திருத்தங்களை எந்த இடத்தில் தெரிவிப்பது என்பதைச் சொல்லவும். ஒற்றுப் பிழையைத் தவிர்ப்பதற்கான கையேடு ஒன்று விக்கியில் உள்ளதா அல்லது உருவாக்கப்பட வேண்டுமா? உருவாக்க வேண்டும் என்றால் நான் உதவுகிறேன். ஆனால் பக்கத்தை உருவாக்குவதில் எனக்கு உதவி தேவைப்படும், --ஹரி கிருஷ்ணன் 03:24, 5 ஜூன் 2007 (UTC)

ஹரி கிருஷ்ணன், இந்த ஒற்றுப் பிழைகள் தமிழ் விக்கிபீடியாக் கட்டுரைகளில் நிறைய உள்ளன. ஆங்காங்கே இப்பிழைகளைக் காணும்போது நீங்களே திருத்தி உதவலாம். மற்றும்படி மேலே நீங்கள் குறிப்பிட்ட சில இடங்களில் அதிகாரி மட்டத்தில் உள்ளவர்களால் மட்டுமே திருத்த இயலும் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்தை Wikipedia:ஆலமரத்தடியில் இடுகிறேன். நன்றி.--Kanags 12:58, 5 ஜூன் 2007 (UTC)

நீங்கள் குறிப்பிட்ட இரண்டு பிழைகளையும் திருத்தி உள்ளேன். கட்டுரைகள் அல்லாத தள அறிவிப்புகள் போன்ற இடங்களில் வரும் சொல் மற்றும் எழுத்துப் பிழைகளை Wikipedia:மீடியாவிக்கி பக்கப் பிழைகள் என்ற பக்கத்தில் சுட்டிக் காட்டினால், தமிழ் விக்கிபீடியா நிர்வாகிப் பயனர்களால் திருத்த இயலும். நன்றி--ரவி 19:45, 5 ஜூன் 2007 (UTC)