பேச்சு:முத்துத் தாண்டவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்கீத மும்மூர்த்திகள் என்று வரவேண்டும் என நினைகிறேன். கர்நாடக சங்கீத மூலவர்கள் என்று பகுத்தால் இன்னும் சிறப்பானது. --மு.மயூரன் 19:48, 25 ஜூலை 2006 (UTC)

கருநாடக இசையின் மும்மூர்த்திகள் தியாகராச சுவாமிகள், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரி என்றே இக்கட்டுரை கூறுகிறது. ஆதி மும்மூர்த்திகள் என்பட்டடும் இவர்களையும் சங்கீத மும்மூர்த்திகள் என்று பகுத்தால் குழப்பம் வராதா? --கோபி 19:55, 25 ஜூலை 2006 (UTC)

ஆதிமும்மூர்திகள் என்று கூறுவதால் குழப்பம் வராது. குழப்பம் வரும் என்றால் தியாகராஜர் போன்றவர்களை இரண்டாவது மும்மூர்த்திகள் என்று கூறலாம். இதுவே சரியானதென்றாலும், இதற்கு எதிர்ப்பு இருக்கும் என்பதனாலும், ஆதிமும்மூர்த்திகள் என்று பிற இடங்களிலே முத்துத்தாண்டவர் போன்றோர் குறிப்பிடப்பட்டிருப்பதாலுமே அவ்வாறு எழுதியுள்ளேன். சங்கீதம் என்பதற்கு பதிலாக இசை என்று சொல்வதே சரியானது. சமஸ்கிருதத்திற்கு ஒரு விக்கி உள்ளது அங்கு அவர்கள் ஸங்கீதம் என்றோ வேறு எப்படி எழுதுவது சிறந்ததோ அப்படி அவர்கள் அங்கு எழுதட்டும். இங்கு (தமிழ் விக்கியில்) இசை மும்மூர்திகள் அல்லது இசை மூவர் (மூலவர் அல்ல!!) என்று எழுதுவதே பொருந்துவது. --C.R.Selvakumar 21:29, 25 ஜூலை 2006 (UTC)செல்வா