பேச்சு:முதலாம் விஜயபாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கையில் நீண்ட காலம் ஆட்சி செய்த அரசராகப் பண்டுகாபயனையே குறிப்பிடுவதுண்டு. பண்டுகாபயன் 70 ஆண்டுகள் (ஆதாரம்) ஆட்சி செய்ததாக இலங்கை வரலாற்றில் கூறப்பட, இக்கட்டுரையோ 55 ஆண்டுகள் ஆட்சி செய்த முதலாம் விசயபாகை நீ்ண்ட காலம் ஆட்சி செய்த அரசராகக் குறிப்பிடுகின்றது. இத்தவறு சீர் செய்யப்பட வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 11:15, 25 திசம்பர் 2012 (UTC)

மதனாகரன், விஜயபாகு வரலாற்றாலர்களால் ஏற்றுக்கொளப்பட்டவன். பண்டுகாபயன் பற்றி மகாவம்சம் என்ற வரலாற்று நூல் கூறினாலும் மகாவம்சத்தின் ஆரம்பக்கட்ட வரலாறுகள் அவ்வளவு நம்பத்தகுந்தன அல்ல. அதனால் "எனினும் மகாவம்சத்தின் படி பன்டுகாபயனே அதிக ஆண்டுகள் ஆண்டான்" என்பன போன்ற வரிகளைச் சேர்க்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:28, 1 சனவரி 2013 (UTC)

தவறான திருத்தம்[தொகு]

பாஹிம், கட்டுரைகளில் திருத்தம் செய்வது நல்லது. ஆனால் திருத்தம் எனும் பேரில் தவறான தகவல்களை உள்ளடக்க வேண்டாம். //முதலாம் விஜயபாகு இலங்கை வரலாற்றில் பண்டுகாபய மன்னனுக்கு அடுத்தபடியாக// எனும் தகவலை எங்கிருந்து பெற்றீர்கள்? தவறான தகவல். --HK Arun (பேச்சு) 16:01, 2 சனவரி 2013 (UTC)

இலங்கை வரலாற்றில் பண்டுகாபயனே நீண்ட காலம் ஆட்சி செய்தவர். ஆனால், முதலாம் விசயபாகுக்கும் பண்டுகாபயனுக்கும் இடையில் மூத்தசிவன் உள்ளார். முதலாம் விசயபாகு 55 ஆண்டுகளே ஆட்சி செய்திருக்க, மூத்தசிவன் 60 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார் (ஆதாரம்). எனவே, மேற்கூறிய வரியை நீக்குதல் நன்று. --மதனாகரன் (பேச்சு) 05:11, 3 சனவரி 2013 (UTC)
//இலங்கை வரலாற்றில் பண்டுகாபயனே நீண்ட காலம் ஆட்சி செய்தவர்.// பண்டுகாபயன் பற்றிய உரையாடலே இங்கு தேவையற்றது. (மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்று பண்டுகாபயனை இக்கட்டுரையில் பாஹிம் நுழைத்துள்ளார். அது அவரது தவறு.) பண்டுகாபயன் இலங்கையில் பௌத்தம் மதம் பரவும் முன்னரே ஆட்சி செய்தவன். மகாவம்சக் கூற்றிக்கிணங்க இலங்கையின் நான்காவது அரசன். கி. மு ஆட்சி செய்தவன்.
//முதலாம் விசயபாகுக்கும் பண்டுகாபயனுக்கும் இடையில் மூத்தசிவன் உள்ளார்// பண்டுகாபயனுக்கும் முதலாம் விசயபாகுவுக்கும் இடையில் 1000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இடைவெளி உள்ளது. பல மன்னர்கள் ஆண்டுள்ளனர்.
இலங்கையில் வரலாறு மகாவம்சம் நூலுக்கு இணங்கவே பார்க்கப்படுகிறது. (தொல்லியலாளர்கள் வரலாற்றாயவாளர்கள் போன்றோரின் ஆய்வு வேறு வடிவில் உள்ளது.) இருப்பினும் மூலாவணமான மகாவசம் நூலை ஆதாரமாக கொண்டே மகாவம்சத்தின் படி என காலங்களை குறிப்பிடல் வேண்டும். அதன் பின்னர் முன்றாம் தரவுகளை சுட்டல் வேண்டும். இந்த இணைப்பில் அறிமுக உரையில் XXXVI பார்க்கவும். அதனை மீள்வடிவில் எழுதப்பட்டுள்ள நூல்கள், இணையத்தளங்கள் போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளன என்பதையும் கருத்தில் கொள்ளவும். வரலாற்று தகவல்களை உள்ளடக்கும் போது மிகுந்த கவனம் கொள்ளல் நல்லது. நன்றி!--HK Arun (பேச்சு) 08:47, 3 சனவரி 2013 (UTC)

அருண் தேவையற்றவாறு குற்றம் காண்கிறார். இலங்கையில் ஆட்சி செய்த ஓர் அரசனின் ஆட்சிக் காலம் இலங்கை வரலாற்றில் மிக நீண்டதாகக் கட்டுரை குறிப்பிடும் போது, அம்மன்னனை விடக் கூடிய காலம் ஆண்ட இரு வேறு மன்னர் பெயரையும் குறிப்பிடுவது தவறல்ல. அது ஓர் ஒப்பு நோக்குதலுக்கு உதவுவதாகும். அதைத்தான் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்று பண்டுகாபயனை இக்கட்டுரையில் பாஹிம் நுழைத்துள்ளார். அது அவரது தவறு. என்று தேவையில்லாதவாறு குற்றம் காண்கிறார். மகாவம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும், தமிழில் அதன் சுருக்க மொழிபெயர்ப்பும் உள்ளபோது எதற்காக வலைத்தளங்களைச் சுட்ட வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 09:15, 3 சனவரி 2013 (UTC)

//அது ஓர் ஒப்பு நோக்குதலுக்கு உதவுவதாகும். அதைத்தான் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்று பண்டுகாபயனை இக்கட்டுரையில் பாஹிம் நுழைத்துள்ளார். அது அவரது தவறு. என்று தேவையில்லாதவாறு குற்றம் காண்கிறார்.//இது இடையில் அதைவிட 60 ஆண்டுகள் ஆட்சி செய்த மூத்தசிவன் இருக்க அதைவிட்டு விட்டு தவறாக ஒப்பு நோக்கியமையே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
//மகாவம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும், தமிழில் அதன் சுருக்க மொழிபெயர்ப்பும் உள்ளபோது எதற்காக வலைத்தளங்களைச் சுட்ட வேண்டும்//நான் சுட்டியது வலைத்தளம் அல்ல; ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட வில்லெம் கெய்கரின் மூலப்பிரதியின் பிடிஎப் வடிவம். --HK Arun (பேச்சு) 09:46, 3 சனவரி 2013 (UTC)

HK Arun, //முதலாம் விசயபாகுக்கும் பண்டுகாபயனுக்கும் இடையில் மூத்தசிவன் உள்ளார்.// இங்கே நான் காலவரிசையில் இறங்குவரிசைப்படுத்தும்போது இடையிலுள்ளார் என்பதனையே குறிப்பிட வந்தேன். தெளிவு குறைவாகக் கூறி விட்டேன். --மதனாகரன் (பேச்சு) 06:36, 4 சனவரி 2013 (UTC)

மதனாகரன்,"தெளிவு குறைவாகக் கூறி விட்டேன்." என ஏற்று பதிலளிப்பதும் நன்பண்பு தான். இலங்கை வரலாறு தொடர்பில் உங்கள் பேச்சுப் பக்கத்தில் ஒரு குறிப்பு இட்டுள்ளேன் பார்க்கவும். --HK Arun (பேச்சு) 09:10, 5 சனவரி 2013 (UTC)