பேச்சு:முகம்மது நபியின் இறுதிப் பேருரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடுநிலைமை[தொகு]

ஒவ்வொரு முஸ்லிமும் தன் பணியாட்களுக்கு தான் உண்ணும் உணவையே கொடுக்க வேண்டும் என்ற பண்பு வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஆனால் பெண்கள் விடயத்தில் பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்துவதாகவே கூறப்பட்டுள்ளது. விபசாரம் செய்யும் பெண்களை கல்லால் அடித்து கொல்லவேண்டும் என்று கூறுபவர் அந்த தொழிலுக்கு காரணமான ஆண்களை என்ன செய்யவேண்டும் கூறவில்லை. பெண்கள் ஆண்களுக்கு கட்டுபட்டவர்கள். அவர்கள் தவறு செய்தால் இலேசாக அடி என்று கூறியுள்ளார். ஆண்கள் தவறு செய்தால் அதே மாதிரி அடிக்கவேண்டும் என்று கூறவில்லை. அதேபோன்று ஆண்கள் விரும்பாத எந்த நபரையும் பெண்கள் அனுமதிக்க கூடாது. ஆண்களின் உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கின்றது. பெண்களின் உரிமை வீழ்த்தப்பட்டிருக்கின்றது. இதுவே பலதார மணத்துக்கு அடிகோளுகின்றது. இது பொதுத்தளம் இது ஒரு கருத்துதான். இங்கு இதை பதிவு செய்வது தவறல்ல. க்ட்டுரைகளுக்கு ஆதாரப்பூர்மான மேற்கோள்கள் இட்டால் நன்றாக இருக்கும். எந்த சமயமாக இருந்தாலும் கருத்துக்களை பதிவு செய்யலாம். வாசிப்பவர் ஒரே சமயத்தினர் அல்லர். இருப்பினும் கட்டுரையாளருக்கு நன்றி. பெண்கள் குறித்து குறிப்பிட்டுள்ளவைகளை முரண்பாடுகளாக காட்டலாம். நடுவுநிலைமக்கு கூட பரிந்துரைக்கலாம். ஏற்கனவே நாம் செய்துள்ளோம்.--செல்வம் தமிழ் 13:22, 6 ஜூன் 2009 (UTC)

செல்வம், கட்டுரையில் தரப்பட்டுள்ள நபி அவர்களின் அனைத்துக் கூற்றுக்களுக்கும் மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன தானே. பார்க்க வில்லையா? மேலும் என்ன மேற்கோள்கள் கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. மற்றும், நபிகள் சொன்னதைத்தானே இங்கு தர முடியும். அதுதானே தலைப்பு. அவர் சொல்லாதவற்றை எப்படி தரமுடியும். எனவே நடுநிலை, மற்றும் மேற்கோள் வார்ப்புருக்களை அகற்றும் படி கேட்டுக்கொள்கிறேன்.--Kanags \பேச்சு 11:01, 7 ஜூன் 2009 (UTC)

இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள விபச்சாரத்துக்கான தண்டனைகள்[தொகு]

தண்டனைகளைப் பொறுத்தவரை ஆண்கள் பெண்கள் என்ற பிரிவினைகள் ஏதும் இல்லை. திருமணமாகாதவர்களுக்கான தண்டனையை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: ‘விபச்சாரியும், விபச்சாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள், மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம், இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்’ (அல்குர்ஆன் 24:2) திருமணமான ஆண்,பெண் இரு பாலருக்கும் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தான் விபச்சாரம் செய்ததாக ஒப்புக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். மீண்டும் கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். முடிவில் நான்கு தடவை தனக்கு சாட்சியம் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உமக்கு பைத்தியம் ஏதும் பிடித்துள்ளதா?’ என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். நீர் மணமுடித்தவரா? என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அதன் பின் நபி (ஸல்) அவர்கள் கல்லெறியுமாறு கட்டளையிட முஸல்லா என்ற இடத்தில் கல்லெறியப்பட்டார். கல்லெறி விழுந்ததும் அவர் ஓடலானார். பிடிக்கப்பட்டு மீண்டும் கல்லெறியப்பட்டு மரணித்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் புகழ்ந்துரைத்தார்கள். (நூல்கள்: புகாரி, திர்மிதி 1451) நபி (ஸல்) அவர்கள் அவரது குற்றத்தை செவிமடுக்க மறுக்க காரணம் தண்டனை கொடுப்பதில் அவசரம் காட்டி ஓர் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான். "ஒரு தலைவர் தண்டனை வழங்குவதில் தவறான முடிவுக்கு வருவதை விட மன்னிப்பு வழங்குவதில் தவறான முடிவுக்கு வருவது சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." (நூல்: திர்மிதி 1444)

இத்தண்டனைக்கு உள்ளாவோர்கள். நிர்பந்தமின்றி மரணத்தின் பின்னுள்ள சுவன வாழ்வுக்காக தன் குற்றத்தை தானே ஏற்று கொள்ள வேண்டும், அல்லது விபச்சாரம் நடந்ததை கண்ணுற்ற நான்கு சாட்சிகள் இருக்க வேண்டும். இன்னொரு பார்வையில் கூறுவதாயின் பலர் முன்னிலையில் விபச்சாரத்தை அரங்கேற்றும் சமூக சீரழிவாளர்களை கல்லெறிந்துகொல்ல வேண்டும் என்றும் எடுக்கலாம். திரு செல்வம் தமிழ் பெண்ணிலைவாதம் குறித்து ஏனைய தகவல்களை பெறுவதற்கு இணைப்பு தந்துள்ளேன். http://www.onlinepj.com/books/islam-penkalin-urimayai/

விமரிசனங்கள்[தொகு]

இரு விமர்சனங்கள் . 1. கட்டுறையின் வார்ப்பு முறையை மாற்றவும். உதாரணமாக “மக்களே..... ” என ஆரம்பிக்கும் பத்தி தவறு. விகி கட்டுரை மக்களை ஏவும் இடம் இல்லை. ஆனால் நபியின் பேருறை “மக்களே..... செய்யுங்கள்.........செய்யாதீர்கள் ” என எழுதலாம். நபியின் கட்டுறை என்ற சாக்கில் மக்களை ஏவக் கூடாது. 2. இறுதிப் பேருறை என்றால் , அது ஒரே சமயத்தின் சொல்லப் பட்டது , அதனால் ஒரே நூலில், ஒரே பக்கத்தில் இருந்துதானே எடுக்கப் பட வேண்டும். ஏன் “இறுதிப் பேருறை” ஐந்து அல்லது ஆறு புத்தகங்களில் இருந்து எடுக்கப் பட்டுள்ளது. இந்த சிறிய logical matter தடுமாறுகிரது--92.39.200.17 09:38, 7 ஜூன் 2009 (UTC)

ஆங்கில விகியில் இதே விஷயம் நல்ல முறையில் கையளப்பட்டுள்ளது. ஆங்கில விகி கட்டுரையை மொழி ஆக்கம் செய்து, தற்போதைய முறையற்ற கட்டுரையை குப்பையில் தள்ளவும். மக்கள் ஒருவனாகிய நான், என்னை அப்படி செய், இப்படி செய் எனும் கட்டுரையை வன்மையாக கண்டிக்கிறேன். என்னை விகி கட்டுரை மூலம் யாரும் ஏவல் செய்ய முடியாது--92.39.200.17 11:13, 7 ஜூன் 2009 (UTC)

en:The Farewell Sermon. ஆமாம், இந்த ஆங்கில விக்கிக் கட்டுரை நல்ல முறையில் எழுதப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பீர்களா?--Kanags \பேச்சு 11:21, 7 ஜூன் 2009 (UTC)
சரி, இன்னும் 2/3 நாட்கள் ஆகும். ஒரு நேர்காணலுக்கு தயார் செய்து கொண்டுருக்கிறேன்.--92.39.200.17 11:34, 7 ஜூன் 2009 (UTC)
மொழிபெயர்ப்பை தக்கவாறு ஏற்றவும். முஸ்லீம் பயனர்கள் இவ்வுரையின் தமிழ் ஆக்கத்தை கொடுக்கும் இணைய தளங்களை தயவு செய்து கொடுத்து விடுக.--92.39.200.17 17:49, 9 ஜூன் 2009 (UTC)

மொழிபெயர்ப்பு[தொகு]

இறுதி உரை

விடைபெறும் உபதேசம் (Arabic: خطبة الوداع‎, Khuṭbatu l-Wadā'), நபியின் கடைசி உரை எனவும் அறியப்படும். முகமது நபி, தன் மரணத்திற்க்கு முன்பு , தூ-அல்-ஹஜ்ஜின் 9வது நாள் , ஹெஜிரா பின்பு 10ம் வருடம் (கிபி 632) , தன் பிரயாணத்தின் கடைசியில் கொடுத்த உபதேச உரை ஆகும்.

விடைபெறும் பேச்சு எல்லா ஹடித்துகளிலேயும் சொல்லப் படுகிறது. சகி அல்-புகாரி அந்த பேச்சை குறிப்பிட்டு, அதிலிருந்து பாகங்களை பயன்படுத்துகிறார். இந்த பேச்சின் நீளமான, தோராயமாக மொத்தமான உருவத்தை இமாம் அஹமத் இபின் ஹன்பல், மஸ்நத் எனும் தனது நூலில் கொடுக்கிறார். இப்பேச்சின் ஷியா உருவம் முகமது அல்-பகரால் சொல்லப்பட்டு அகமது அல்-தபார்சியும் சயீத் இபுன் தவுசும் பயனபடுத்துகிரனர்


இஸ்லாமிய ஐதீகம் படி, முகமது யாத்ரீகர்களை மக்காவிலிருந்து மினா பள்ளத்தாக்கு வழியாக அராஃபத் மலைக்கு இட்டுச் சென்று, உரானா பள்ளத்தாக்கில் நின்றார். அமைதியுடன் யாத்திரீகர்கள் நிற்க, அவர் ஒட்டகம் மீது ஏறி, தன் பேச்சை கொடுத்தார். 120000 யாத்ரீகர்கள் இருந்ததால், அவர் குரல் எல்லோருக்கும் கேட்கவில்லை.அதனால் ரபா இபுன் உமய்யா இபுன் கலாஃப் என்ற உரத்த குரல் கொண்டவரை தன் பின் மறுபடியும் பேச்சை சொல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

வேறுபாடுகள்

ஹடித்துகள் அந்த பேச்சின் குறைந்த பட்சம் மூன்று உருவங்களை கொடுக்கிறன. முக்கிய வித்தியாசம் பேச்சின் கடைசியில் வருகிறது. ஒரு உருவம் படி “நான் உங்களுக்கு குரானையும் சுன்னாவையும் விட்டு விடுகிறேன்”. இரண்டாவது உருவம் ”நான் உங்களுக்கு குரானையும் என் குடும்பத்தையும் விட்டு விடுகிறேன்”. மூன்றாவது உருவம் “நான் உங்களுக்கு விட்டு வைக்கும் குரானை, நீங்கள் பின்பற்ற வேண்டும்”.

இந்த வேறுபாடுகள் ஷியா-சுன்னி முசுலீம்களுக்கு மத வேறுபாடுகளை கொடுக்கின்றன. ஷியாக்கள் இரண்டாவது உருவத்தைதான் ஏற்கின்ரனர். ஹடித்துகளை முற்றுமாக நிராகரித்து, குரான் ஒன்றுதான் வழிகாட்டி என்னும் முசுலீம்கள், ஹடித்துகளில் உள்ள இந்த வித்தியாசங்களை காண்பித்து, அவற்றை நிராகரிக்கின்றனர்


சஹி அல்-புகாரி ஹடித் 1623, 1626, 6361

இமாம் முஸ்லிமின் சஹியும் தன் 98 ஹடித்தில் இவ்வுரையை பேசுகிரது

இமாம் அல்-திர்மிதி ஹடித்துகள் 1628, 2046, 2085

இமாம் அகமத் இபுன் ஹன்பல்லின் மசனத் ஹடித் 19774