உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:முகம்மதியர் ஆட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by 2401:4900:8827:63:3DAF:C208:2B74:EBA0 in topic Muhammadan rule

பாண்டிய நாட்டில் கி.பி. 1142ஆம் ஆண்டு துவங்கியது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சேர மன்னனான சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா  காலத்தில் இசுலாம் மேற்கு மலபார் கடற்கரை பகுதிகளில் அறிமுகமாகியது.பின்னர் இது கன்னட மற்றும் தமிழக பகுதிகளிலும் பரவியது. வணிக நோக்கோடு சில அராபிய, எகிப்து மற்றும் துருக்கிய குழுக்கள் தமிழகத்தின் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் வந்து தங்கினர், இவர்கள் மூமாக இசுலாமிய மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள். வர்த்தக மற்றும் அயல்நாட்டு ஏற்றுமதியின் காரணமாக அந்தந்த பகுதியை ஆண்ட மன்னர்களுக்கு நெருக்கமானார்கள். அவர்களில் பலர் ஆட்சிப் பொறுப்புகளில் பங்கேற்றனர். இதே நேரத்தில் சில வட இந்திய இசுலாமிய அரசுகளில் எல்லை விரிவாக்க நடவடிக்கைகளின் மூலமாகவும் சில இஸ்லாமிய அரசுகள் தமிழகத்தில் ஏற்பட்டன.

பாண்டிய சுல்தான்கள் : 

பாண்டியர்களது ஆட்சிக் காலத்தில் அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து பின்னர் அவர்களின் கீழ் சிறிய நிலப்பரப்பை ஆளும் உரிமை பெற்றவர்கள் பாண்டிய சுல்தான்கள் ஆவர். இவர்களுள் சையத் இப்ராகிம் மற்றும் சுல்தான் சுமாலுதீன் இராவுத்தர் ஆகிய இருவர் முக்கியமானவர்கள் ஆவர்.  


மதுரை சுல்தான்கள் (கி.பி.1335 -1378) : 

கி.பி. 1323ல் பராக்கிரம தேவ பாண்டியன் காலத்தில் உலூகான் பாடயெடுத்து பாண்டிய நாட்டைக் கைப்பற்றினார். முகம்மது-பின்-துக்ளக் ஆட்சியில் மாபார் என்றழைக்கப்பட்ட தமிழகம் தில்லி கல்தானியத்தின் 23 மாநிலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. சுல்தான் ஜலாலுத்தீன் ஹஸன்ஷா என்பவர் மதுரையில் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்பு இவர் டில்லியிருந்து பிரிந்து மதுரையை சுதந்திரபிரதேசமாக அறிவித்தார். இவர் வழி வந்தவர்களே எதுரை சுல்தான்கள் ஆவர்.


ஆற்காடு நவாப்புகள் (கி.பி.1690- 1801) :

ஆற்காடு நவாப்புகள் எனப்படுவோர் 1690 1801 தென்னிந்திய கன்னட பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் வைநகரம் இன்றைய சென்னை அருகில் உள்ள ஆற்காடு ஆகும். தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இவர்கள் பொதுவாக கன்னட நவாப்புகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆட்சியின் பொழுதுதான் ஆங்கிலேயர்கள் முகலாய ஆட்சியாளர்கள் உதவியுடன் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தனர்.


நவாப்களின் வீழ்ச்சி:

பதின்மூன்றாவது நவாயான முகம்மது கவுஸ்காண் (சி.பி.1825- 1855) வாரிசு இல்லாமல் இறந்தார். இதனால் அவரது ஆட்சி ஆங்கில அரசின் கீழ் சென்றது. 1867ல் குலாம் முகம்மது கவுஸ்கானின் சிறிய தந்தை பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிடம் ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டார். அதன்படி அவர்களது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர்.


மதுரையை ஆண்ட சுல்தான்கள் பெயர் வரிசை

  • ஜலாலுத்தின் அஷன்ஸா கி.பி. 1333 -1340 வரை
  • அலாவுதீன் உத்தொஜி கி.பி. 1340 1341 வரை
  • குத்புதீன் கி.பி. 1341 (40 நாட்கள்)
  • கியாஜுத்தின் தம்கானி கி.பி. 1341 - 1344 வரை
  • நஸிருத்தீன் கி.பி. 1344 - 1355
  • அடில்ஷா கி.பி. 1356 - 1358 வரை
  • பக்ருத்தீன் முபாரக்ஷா கி.பி. 1359 - 1371 வரை
  • அலாவுதீன் சிக்கந்தர்ஷா கி.பி. 1372 1378 வரை

Muhammadan rule

[தொகு]

hi 2401:4900:8827:63:3DAF:C208:2B74:EBA0 08:53, 13 அக்டோபர் 2024 (UTC)Reply