பேச்சு:மீயொலி நோட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Translation suggestions for Medical imaging?? மருத்துவப் படிமவியல்??--ரவி (பேச்சு) 10:21, 27 ஜூலை 2005 (UTC)

That sounds good. -- Sundar \பேச்சு 10:31, 27 ஜூலை 2005 (UTC)
மீயொலி வாருதல், மீயொலி வருடுதல் (வருடல்) என்பன வரிக் கண்ணோட்டம் என்பதைக் காட்டிலும் பொருந்தும் என நினைக்கிறேன். வாருதல் என்பது sweep and collect என்று பொருள்படும். திருநெல்வேலியில் வாரியல் என்றால் பெருக்குமாறு, துடைப்பம், விளக்குமாறு என்று பொருள் படும். தலை வாருதல் என்பதும் comb (வினை). எனவே வாருதல் அல்லது வருடுதல்(வருடல்) என்பது பொருந்தும் என நினைக்கிறேன். பொருந்துமா என எண்ணிப்பாருங்கள். --C.R.Selvakumar 14:31, 20 ஜூலை 2006 (UTC)செல்வா
வார்தல் என்பதில் இருந்து வார்ச்சி (தேர்தல் > தேர்ச்சி, வளர்தல் > வளர்ச்சி, தளர்தல் > தளர்ச்சி , கிளர்தல் > கிளர்ச்சி, பெயர்தல் >பெயர்ச்சி, உணர்தல் > உணர்ச்சி)--C.R.Selvakumar 15:24, 20 ஜூலை 2006 (UTC)செல்வா
வாரியல் என்ற பயன்பாட்டை நானும் திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலில் கேட்டுள்ளேன். மீயொலி வார்ச்சி என்று கொள்ளலாமா? எப்படியெனினும் இந்தத் தலைப்பை ஒரு மாற்று பலுக்குதலாகவாவது தர வேண்டும். ஏனெனில் இது தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் பதினோறாம் வகுப்பிற்கான "அறிவியல் தமிழ்" எனும் துணைப்பாடநூலிலிருந்து எடுக்கப்பட்டது. -- Sundar \பேச்சு 07:56, 21 ஜூலை 2006 (UTC)
மீயொலி வார்ர்ச்சி நன்றாக இருக்கும். பயன் படுத்தலாம். அடைப்புக் குறிகளுக்கிடையே மாற்று தலைப்பை கொடுக்கலாம். தமிழ்நாடு பாடநூல் எழுதுவோர் மிகப்பமிழையாக சில செய்துள்ளனர். Directly proprotional என்பதற்கு நேர்மாறாக என்றும் inversely proportional என்பதற்கு எதிர்மாறாக என்றும் பெயர்த்திருக்கிறார்கள் என்ன கொடுமை!! தாறுமாறாக என்பதை randomly proportional என்று கூறுவார்களா?! நேர்மாறாக என்பதும் எதிர்மாறாக என்பதும் பொருளில் ஒன்றே என்பதை ஏன் உணரவில்லை என்று விளங்க வில்லை. மாறாக எனபதை மாறும் தன்மையதாக என்று கொண்டிருக்கலாம் (தவறு என்றாலும்), ஆனால் பெருவழக்காக உள்ள சொல்லை இப்படிப் பொருட் பிழையோடு செய்திருப்பது கண்டு வருந்துகிறேன். இத்தலைப்பில் கண்ணோட்டம் என்னும் சொல் பொருந்தாது. நோட்டம் என்றிந்தாலாவது பொருந்தும். உங்களுக்கு எது சரியென்று படுகின்றதோ அப்படியே செய்யுங்கள். மீயொலி வார்ச்சி மிக நன்றாக இருப்பதாக நான் எண்ணினாலும், மீயொலி வாருதல் என்று இருந்தால் பலரும் சற்று எளிதாக புரிந்துகொள்ளுவார்களோ என்று எண்ணுகிறேன். --C.R.Selvakumar 12:19, 21 ஜூலை 2006 (UTC)செல்வா

மீ எனும் முன்னொட்டு super என்பதற்குத் தான் பொருந்தும். ultrasound என்பது கேளா ஒலி ஆகும். இது கேள்வி எல்லைக்கு அப்பாலைய ஒலி. ultraviolet ray என்பதை புற ஊதாக் கதிர் என்கிறோம். infrared ray என்பதை அகச் சிவப்புக் கதிர் என்கிறோம். எனவே, ultra என்பதன் இணை முன்னொட்டு புற என்பதும் infra என்பதன் முன்னொட்டு அக என்பதும் வழக்கில் உள்ளன. எனவே புறஒலி என்றே இங்கு வழங்கலாம். இல்லாவிடில், கேளா ஒலி என்பதைப் பயன்படுத்தலாம். மீயொலி என்பது supersonic என்ற கலைசொல்லுக்குத் தான் பொருந்தும். எ.கா.:supersonic speed-மீயொலி வேகம்; scan என்பதற்கு அலகீடு எனும் சொல் 1960 களில் இருந்தே பொறியியல் மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான விரிவான விவாதம் விக்சனரியில் scan எனும் சொல்லின் பேச்சுப் பக்கத்தில் பார்க்கவும். எனவே தலைப்பைக் கேளா ஒலி அலகீடு என அல்லது புறவொலி அலகீடு என மாற்ற வேன்டும். வழிமாற்றின்றித் தலைப்பை மாற்றித் தருக!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 09:42, 25 மே 2018 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மீயொலி_நோட்டம்&oldid=2531973" இலிருந்து மீள்விக்கப்பட்டது