பேச்சு:மீதரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மீமொழி (meta language) மீவியற்பியல் (meta physics) என்பது போல meta data என்பதற்கு மீதரவுகள் என்ற சொல் கூடப் பொருத்தம் என துறைசார் வல்லுனர் மணிவேலு அவர்கள் கருத்துக் கூறி உள்ளார். மேனிலைத் தரவு என்ற சொல் கீழ்நிலைத் தரவு என்ற சொல்லை சுட்டி நிற்பதாகவும், அது பொருள் குளப்பம் தரவுதாகவும் சுட்டினார். இது தொடர்பாக உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். கருத்து வேறுபாடு இல்லை எனில் இவ்வாறு மாற்றப்படும். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:29, 9 மார்ச் 2012 (UTC)

மீ என்பதை meta, super ஆகியவற்றுக்கு ஈடாகப் பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தலாம். மேனிலைத் தரவு என்பது சற்றே நீண்டதாக இருந்தாலும், சரியாகவே எனக்கு படுகின்றாது. மீதரவு என்றும் சொல்லலாம். மறுப்பு இல்லை.--செல்வா (பேச்சு) 03:24, 9 மார்ச் 2012 (UTC)

(ஆவணங்களைப் பற்றிய) விபரங்களைத் தரும் தரவுகள் என்பதால் விபரத் தரவுகள் எனப் பயன்படுத்தலாம். அவ்வாறே நான் பயன்படுத்தி வருகிறேன். பிறர் பயன்படுத்தியது கண்டதாக நினைவுள்ளது. உடனடியாக உசாத்துணை தர முடியவில்லை. நன்றி. கோபி (பேச்சு) 13:27, 9 மார்ச் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மீதரவு&oldid=1519065" இருந்து மீள்விக்கப்பட்டது