பேச்சு:மிளகு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிளகு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மிளகுக்கான ஆங்கில விக்கிக் கட்டுரையைப் பயன்படுத்தி விரிவான கட்டுரையை உருவாக்கலாம். கோபி 18:54, 10 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

சிறு மாற்றங்கள்[தொகு]

நல்ல முறையில் விருத்தி பெற்று வருகிறது. சிறு மாற்றங்கள் செய்துள்ளேன், ஆட்சோபனை என்றால் கூறவும். --Natkeeran 15:47, 1 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]


நற்கீரன், சுவை பொருள் என்பது சரியா? அல்லது தாளிப்புப் பொருள் என்பது சரியாக இருக்குமா? --Daniel pandian 15:51, 1 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]


en:Spice என்பதற்கு மிகச் சரியான சொல் எதுவென்று எனக்கு தெரியவில்லை. பலசரக்குப் பொருள், நறுமணப் பொருள், சுவைப் பொருள், தாளிப்புப் பொருள் என்று எல்லாம் பயன்பாட்டில் உண்டு. தமிழர் சமையில் spices தாளிக்க பெரிதும் பயன்படுவதால் அந்தப் பெயர் வந்து இருக்கலாம். இதைப் பற்றி மற்ற பயனர்களும் கருத்து சொன்னால் நன்று. --Natkeeran 15:55, 1 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

Spice - மளிகை? --குறும்பன் 19:35, 2 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

கட்டுரையில் மிளகு தாளிதப் பொருள் என்று குறிப்பிடப் பட்டிருந்த போதே யோசனை வந்தது. தாளித்தல் என்றால் கொதிக்கும் எண்ணெயில் பெருஞ்சீரகம், செத்தல், கடுகு, கறிவேப்பிலை... போன்றவற்றைப் போட்டுப் பொரித்தெடுப்பதைத்தானே குறிக்கும். அந்தத் தாளித்தலில் நாம் மிளகை ஒரு போதும் சேர்ப்பதில்லை.

spicesக்குத் தாளிப்பு என்ற கருத்து இருந்தாலும் எமது தமிழ்கட்டுரையில் மிளகு தாளிதப் பொருள் என்று வரும் போது அது குழப்பமான கருத்தையே தருவது போலத் தோன்றுகிறது. --Chandravathanaa 20:16, 2 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

குழப்பம்[தொகு]

இக்கட்டுரையில் மிளகின் தாயகம் இந்தியா என்றுள்ளது. ஆனால், மிளகின் தாயகம் தென்கிழக்காசியா என்று ஆங்கிலக் கட்டுரையில் உள்ளது. எது சரி?--பாஹிம் (பேச்சு) 17:47, 18 மே 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மிளகு&oldid=1111598" இலிருந்து மீள்விக்கப்பட்டது