பேச்சு:மின்னிதழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகின் முதல் தமிழ் இணைய இதழ் திசைகள் எனபதே சரியானது. இதன் ஆசிரியர் மாலன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. திண்ணை என்பது சரியானதல்ல.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:25, 10 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

அனைவரும் அறிந்திருந்தாலும் தக்க சான்றுகள் இருந்தாலொழிய குறிப்பிட்ட செய்தி கட்டுரையில் சேர்க்கப்படக்கூடாது. --சூர்யபிரகாசு உரையாடுக... 13:39, 10 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

சூரியப் பிரகாசு தாங்கள் சொல்வது போல் செய்திகளைக் கட்டுரையில் சேர்க்க முடியாததுதான்.

முதல் தமிழ் இணைய இதழ் எது என்பது குறித்த கருத்து வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன.

  • இணையத்தில் தமிழை வெளிநாட்டுத் தமிழர்கள் 1986 முதல் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். முதல் கட்டத்தில் தாங்கள் கண்டுபிடித்த தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பித் தங்களுக்குள் உறவை வளர்த்து வந்தனர். 1992-93 ஆம் ஆண்டுகளில் எஸ். சி. தமிழ் இலக்கியமன்றம் “அ” எனும் ஒரு தமிழ் மின்னிதழை நடத்தியது. இதன் ஆசிரியர் குழுவில் அருள் சுரேஷ், வைத்தியநாதன் ரமேஷ், எம்.சுந்தரமூர்த்தி, சுந்தரபாண்டியன், விக்னேஸ்வரன் ஆகியோர் இருந்தனர் என்று கு. கல்யாணசுந்தரம் தெரிவிக்கிறார். [1]
  • இந்த “அ” இதழுக்குப் பிறகு 1996ல் தமிழ் நாளிதழான “தினபூமி” இணையத்தில் இடம் பிடித்தது. இந்திய மொழிகளைப் பொறுத்தவரை தமிழ்தான் முதன்முதலில் இணையத்தில் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. இந்த இதழுக்கு மயிலை எழுத்துரு பயன்படுத்தப்பட்டது. அப்போது இதன் இணையமுகவரி www.indiadirect.com/thinaboomi [2]
  • 01-05-1996 முதல் சென்னை மென்பொருளாளர் ஆண்டோ பீட்டர் www.geocities.com/tamilkudil எனும் தளத்தில் செய்திகளை வெளியிட்டு வந்தார். அதை அவர் இதழ் என்று நினைக்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு 31-01-1997 ல் தமிழ் சினிமா.காம் (www.tamilcinema.com) எனும் பெயரில் ஒரு இணைய இதழைத் தொடங்கினார். இதற்காக அவர் அமுதம் என்கிற எழுத்துருவை உருவாக்கிப் பயன்படுத்தினார். இணைய இதழ்களில் அதிகமாக விளம்பரம் செய்து தொடங்கப்பட்ட முதல் இதழ் இதுதான். இதன் ஆசிரியராக ஆர். எஸ். அந்தணன் என்பவர் இருந்தார். [3] இணைய இதழ்களில் முதல் தமிழ் இணைய இதழ் “தமிழ் சினிமா” தான் என்கிறார் இதன் ஆசிரியர் ஆண்டோ பீட்டர்.[4]
  • மார்ச் 2003 முதல் தமிழில் ஒருங்குறி எழுத்துரு முறையைப் பயன்படுத்தி வெளிவந்த முதல் மின்னிதழ் திசைகள். இந்த இதழின் ஆசிரியராக அருணா ஸ்ரீனிவாசன். கௌரவ ஆசிரியராக மாலன் இருந்தார். [5], [6]
  • 1995 ஆம் ஆண்டில் கணியன் என்கிற பெயரில் செய்யப் பெற்ற வலையேற்றம்தான் தமிழில் முதலில் செய்யப்பட்ட இணையதளம் என்கின்றனர்.[7]

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:51, 10 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி தேனியார். நீங்கள் இது பற்றிய கட்டுரை ஒன்று தமிழ் இணையச் சிற்றிதழ்கள் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறீர்கள். அக்கட்டுரையில் இந்த ஆதாரங்களைச் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 22:50, 10 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்[தொகு]

  1. சோழநாடன் எழுதிய “இண்டெர்நெட் உலகில் தமிழ் தமிழன் தமிழ்நாடு” நூல் (முதற்பதிப்பு டிசம்பர் 2000) பக்கம்-8
  2. சோழநாடன் எழுதிய “இண்டெர்நெட் உலகில் தமிழ் தமிழன் தமிழ்நாடு” நூல் (முதற்பதிப்பு டிசம்பர் 2000) பக்கம்-8
  3. அண்ணா கண்ணன் எழுதிய “தமிழ் இணைய இதழ்கள்” நூல் (முதல் பதிப்பு- டிசம்பர் 2003) பக்கம் 25 & 26
  4. தேனி எம்.சுப்பிரமணி எழுதிய “தமிழ் இணையச் சிற்றிதழ்கள்” நூல் (முதற்பதிப்பு- நவம்பர் 2010) பக்கம் 11
  5. மதுமிதா எழுதிய ”நான்காவது தூண்” நூலில் அருணா சீனிவாசன் நேர்காணல் (முதல்பதிப்பு 2006), பக்கம் 55
  6. அண்ணா கண்ணன் எழுதிய “தமிழ் இணைய இதழ்கள்” நூல் (முதல் பதிப்பு- டிசம்பர் 2003) பக்கம் 41
  7. தேனி எம்.சுப்பிரமணி எழுதிய “தமிழ் இணையச் சிற்றிதழ்கள்” நூல் (முதற்பதிப்பு- நவம்பர் 2010) பக்கம் 11
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்னிதழ்&oldid=949306" இலிருந்து மீள்விக்கப்பட்டது