பேச்சு:மின்தடை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம்.ஒரு கேள்வி, தமிழில் மின்தடை என்பதும் மின்சார தடை என்பதும் ஒன்றா இல்லை வேறு வேறா??--சிவம் 12:29, 26 செப்டெம்பர் 2012 (UTC)

மின் தடை என்பது மின்சாரவியலில் உள்ள (Electrical) Resistance என்பதைக் குறிக்கிறது. மின் வெட்டு குறித்த தகவலுக்கு மின்சார நிறுத்தம் கட்டுரையைப் பார்க்கலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 12:47, 26 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் சுப்பிரமணி. அறிந்து கொண்டேன் நன்றி--சிவம் 12:51, 26 செப்டெம்பர் 2012 (UTC)

வணக்கம். மின்தடை என்பது இலத்தினியல் பொருளின் தமிழ் பெயர் இல்லை! இலத்தினரியல் தமிழ்பெயர் மின் அளவுத் தடுக்கி.--சிவம் 20:56, 6 அக்டோபர் 2012 (UTC)

ஆமாம். ஆனால், இங்கே குறிப்பிடப்பட்டது Resistanceஐப் பற்றியே... --மதனாகரன் (பேச்சு) 04:08, 7 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

http://en.wikipedia.org/wiki/File:Register.jpg மின் அளவுத் தடுக்கி(Resistance) --சிவம் 05:08, 7 அக்டோபர் 2012 (UTC)

மேற்கூறியதைத் தடையி என்றே சொல்லலாம். இக்கட்டுரைக்கு மின்தடை என்ற தலைப்பு பொருத்தமானதே. --மதனாகரன் (பேச்சு) 06:08, 7 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

சரி--சிவம் 06:50, 7 அக்டோபர் 2012 (UTC)

(De) Elektrischer Widerstand = (Ta) மின் எதிர்ப்பு = (En) electrical resistance தடை என்பது வேறு எதிர்ப்பு என்பது வேறு. --சிவம் 20:16, 12 அக்டோபர் 2012 (UTC)

செல்வா கூறுவதைக் கவனிக்கவும். தரப்படுத்தப்பட்ட மின்தடை போன்ற சொற்களை மீண்டும் மாற்றிக்கொண்டிருந்தால் தமிழில் அறிவியலை உருவாக்குவதில் மீண்டும் அ,ஆ,இ,ஈ எனத் த்டங்குவதுபோல உள்ளது. இதுபோன்ற விவாதங்கள் வீணானவை.அறிவியல் கட்டுரை எழுதவிரும்புபவர்கள் ஏற்கெனவே நிலவும் நடைமுறைகளை அறிந்துகொண்டு தொடங்குதல் நல்லது. உலோ.செந்தமிழ்க்கோதை 18:12, 9,ஏப்பிரல், 2015

தடுக்கி விழுந்தான், எந்தத் தடங்கலும் இல்லாமல் நடைபெறுகின்றது போன்ற பயன்பாடுகளில் தடு என்பது ஆங்கிலத்தில் resistance என்று கூறும் கருத்திலேயே பயன்படுகின்றது. மின்தடை, மின் தடைமை, மின்தடையம், மின்தடைமம் என்பன நன்றாக வழக்கூன்றிய சொற்கள். மறிமம் என்பது impedance என்னும் சொல்லுக்கு ஈடாகப் பயன்படுத்தப்பட்டது. மறித்தல் என்றாலும் தடை ஏற்படுத்துதல் (நிறுத்துதல் என்று பொருள் அன்று; தடுத்தார் என்றால் நிறுத்தினார் என்று பொருள் கொள்ளலாம், தடை ஏற்படுத்தினார் என்றால் சீரான ஓட்டத்துக்கு, நடைக்கு ஊறுகள், இடையூறுகள் ஏற்படுத்தினார் என்று பொருள் கொள்ளலாம்.). சீர்மை எய்திய, நல்ல தமிழ்ச்சொற்களை மீண்டும் அலச வேண்டாம் என்பது என் கருத்து.--செல்வா (பேச்சு) 23:00, 12 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் செல்வா. நீங்கள் சொல்வதில் எனக்கு உடன் பாடு இல்லை. காரணம் தமிழ், ஆங்கிலம், மற்றும் யேர்மன் அகராதியில் இதை பற்றி தீர ஆராய்ந்தேன், ஆனால் அங்கெ Widerstand, resistance, எதிர்ப்பு என்றும், அதற்கான காரணத்தையும் விளக்கி இருக்கிறார்கள். கூகிள் மொழிபெயர்ப்பிலும் அப்படியே உள்ளன. ஆனால் தடை என்று தேடும் போது வேறுபட்ட காரணங்கள் சொல்ல படுகின்றன, அதேவேளை மின் எதிர்ப்பு என்பதற்கு இப்படி தரப்பட்டுள்ளன. (De) Elektrischer Widerstand = (Ta) மின் எதிர்ப்பு = (En) electrical resistance அத்தோடு இது மின்சாரதொடு தொடர்புடையதும் ஓம் Ω விதிமுறைக்கு உட்பட்டதாகும், அங்கே பாக்கும் பொது எதிர்ப்பு ஆற்றல் என்று சொல்ல படுகிறது. தடை ஆற்றல் என்று சொல்லப்படவில்லை. நம்பவில்லை என்றால் அகராதியில் நீங்களே பாருங்கள். அத்தோடு கட்டுரையையும் பாருங்கள். கட்டுரையில் அழகாக எதிர்ப்பு என்பதை விளக்கமாக தரப்பட்டுள்ளது, ஆனால் தலைப்பு நான் மேலே குறப்பட்ட காரணிகளுக்கு எதிராக உள்ளது --சிவம் 01:25, 13 அக்டோபர் 2012 (UTC)

சிவம், இக்கட்டுரைத் தலைப்புக்கு உங்கள் பரிந்துரை என்ன என்பதைத் தெரிவியுங்கள். என்னைப் பொருத்தவரையில், தடை என்பது பொதுவான சொல். இங்கு மின்தடை நன்றாகவே பொருந்துகிறது. மின் தடைமை, மின்தடையம், மின்தடைமம் போன்றவற்றையும் கட்டுரையில் குறிப்பிட்டு வழிமாற்றுத் தரலாம். கூகுள் மொழிபெயர்ப்பை இங்கு நாம் கவனத்தில் கொள்ளக்கூடாது. அது resistance என்பதை எதிர்ப்பு எனக் கொண்டு electrical resistance ஐ இரு வெவ்வேறு சொற்களாகக் கருதி மின் எதிர்ப்பு என நேரடியாக மொழிபெயர்க்கிறது.--Kanags \உரையாடுக 02:30, 13 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் கனக்ஸ். சரியான விளக்கம் தருகிறேன். இந்த கட்டுரை ஓம் (Ω) விதிக்கு உட்பட்டது, அதனால் ஓம் விதியில் மின் அழுத்த ஆற்றலுக்கு, எதிரான மின் எதிர்ப்பு ஆற்றல் என்று கூறபடுகிறது. மின் எதிர்ப்பு ஆற்றல் என்றால் 12 (V) மின் அழுத்தம் வரும் பொது அதில் எமக்கு தேவை 6 (V) என்றால் அதற்காக 6 (V) மின் அழுத்தத்துக்கு எதிராக மின் எதிப்பு ஆற்றலை செயல்படுத்தும் போது எமக்கு தேவையான 6 (V) மின் அழுத்தம் கிடைக்கும் என்று ஓம் (Ω) விதி சொல்கிறது. தடை என்ற சொல் பொதுவானதுதான் ஆனால் அறிவியல் சார் அனைத்து இடங்களுக்கும் அது பொருத்தம் அற்றது. ஓம் (Ω) விதியில் தடை என்ற சொல்லும் உள்ளன ஆனால் அது வேறுபட்ட காரணத்துக்காக பயன்படுத்தப் படுகின்றன. பிழையான செயல்பாட்டின் மூலமோ, அல்லது எதிர்பாராத வேறு பிற காரணிகளால் மின் அழுத்தம் குறையும் போதோ அல்லது நிறுத்தப்படும் பொழுதோ அதை மின் தடை என்று கூறப்படுகிறது. நன்றி.--சிவம் 03:07, 13 அக்டோபர் 2012 (UTC)

மின் எதிர்ப்பு என்பதே சரியாக இருக்கும். காரணம் மின் தடை என்ற பகுப்பு வரும் போது அதில் சில சிக்கல் வரும். கூல்கிளில் மட்டும் இல்லை ஜேர்மன் ஆங்கில அகராதியிலும் அப்படித்தான் இருக்கின்றன.--சிவம் 03:11, 13 அக்டோபர் 2012 (UTC)

இதையும் பார்க்க http://www.eudict.com/?lang=tameng&word=மின்%20எதிர்ப்பு --சிவம் 04:35, 13 அக்டோபர் 2012 (UTC)

சரி நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன், கட்டுரை தலைப்பு இப்படியே இருக்கட்டும், ஆனால் கட்டுரை தொகுப்பு மாறவேண்டும். எனக்கு நேரம் இருக்கும் போது தொகுக்கிறேன். கட்டுரை தலைப்புக்கும் தொகுப்புக்கும் இருக்கும் வேறு பாட்டினால் முரணாக உள்ளது.--சிவம் 05:49, 13 அக்டோபர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்தடை&oldid=1836510" இலிருந்து மீள்விக்கப்பட்டது