பேச்சு:மாற்றுரு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாற்றுரு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மாற்றுரு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
  • allelle - மாற்றுரு எதிருருவல்ல. வரையறையைப் பார்க்கவும்.alternate form, other form என்பதை மாற்றுரு, மாற்று அலகு, மாற்றுத் தனிமம் அல்லது மறுமம் எனவேண்டுமே தவிர எதிருரு(opposite form) எனக் கூடாது.
  • மரபணுவில் இரு மரபுத் தனிமங்கள் உள்ளன. இவற்றுக்கு ஒவ்வொன்றுக்கும் மாற்றுவடிவங்கள் உண்டு. இவையே மாற்று மரபணுத் தனிமங்களாகும்.இவை இயல்பு வடிவத்தில் இருந்து சற்றே வேறுபடுபவையே தவிர எந்தவகையிலும் எதிரியல்பு உடையன அல்ல.எனவே வரையறையிலேயே பொருள்முரண் நெருடுவதைக் கட்டுரையைப் படிக்கும்போதே உய்த்துணரலாம்.


  • chromosome-நிறத் திரி என நேர்மொழிபெயர்ப்பு செய்தல் பொருள்தெளிவுக்கு உதவாது. மரபுத் திரி என்ற ஒருவழக்கும் இச்சொல்லுக்கு நிலவுகிறது. தமிழில் குறுமம் என்றாலும் வண்னம் ஆதலால் குறுமவகம் எனக் குறிப்பதே சாலச் சிறந்தது.
  • chromosome-குறுமவகம் /பண்பகம்; Chromotin-குறுமன், பண்பன்;
  • இதோடு தொடர்புடைய chromo எனத் தொடங்கும் பிற சொற்களும் உள்ளன; அவற்றையும் இவ்விரண்டுடன் தொடர்புபடுத்தியே இக்கலைச் சொற்களைத் தரப்படுத்திக் கொள்ளவேண்டும்.

வணக்கம் உலோ.செந்தமிழ்க்கோதை

  1. நீங்கள் கூறுவதுபோல allele க்குச் சரியான பதம் 'மாற்றுரு' என்றே தோன்றுகின்றது. எனவே தலைப்பை மாற்றலாம். மாற்றும்போது எதிருரு என்ற சொல்லுக்கு ஒரு வழிகாட்டியை விட்டுச் செல்லுதல் நல்லது. காரணம் 'எதிருரு' கட்டுரை பல்வேறு கட்டுரைகளில் இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. எதிருரு என்ற இந்தத் தலைப்பை தமிழ் விக்சனரியில் இருந்தே நான் எடுத்ததாக நினைவு. தமிழ் விக்சனரிக்கு தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியிலிருந்து இந்தச் சொல் பெறப்பட்டுள்ளதென நினைக்கின்றேன்.
  1. Chromosome என்பதற்கு 'நிறப்புரி' என்றே உள்ளது. பண்பகம்/பண்பிழை/பண்பன் என்பவை பொருள் தெளிவைக் கொண்டு வருவதாகத் தோன்றவில்லை. ஆனாலும் இது தொடர்பில் விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/உயிரியல் பக்கத்தில் உரையாடலாம் என நினைக்கின்றேன். --கலை (பேச்சு) 09:57, 6 சூன் 2015 (UTC)[பதிலளி]
  • பண்பகங்கள் (chromosomes) எப்போதும் இணைகளாக அமையும். இரண்டிலுமே ஒரேவகை மரபன் (மரபணு) அமைந்தால் அவை ஒத்தபண்பும் மாற்று மரபன்கள் ஓன்றில் அமையும்போது பல மாற்றுபண்புகளும் ஏற்படலாம்.இவற்றின் பணியே உயிரியின் தோற்றவகைப் பண்பை மாற்றுவது தான்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாற்றுரு&oldid=2134781" இலிருந்து மீள்விக்கப்பட்டது