பேச்சு:மாயச் சதுரம்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
மாயச் சதுரம் என்று பெயர் மாற்றலாமா? ஜாலம் தேவை இல்லை தானே :) --ரவி 21:29, 17 நவம்பர் 2007 (UTC)
- மாயச் சதுரம், மாயக் கட்டம், விந்தைச் சதுரம், விந்தைக் கட்டம், வியப்புக் கட்டம் என்று பல்வேறு விதமாக எழுதலாம். மாஜிக் கட்டம் என்றும் எழுதலாம். மாஜிக் ஸ்கொயர் என்று உலக வழக்கு அறிந்த பெரிய எழுத்தாளர்கள், மன்னிக்கவும், ஆஜானுபாகுவான, ஜாம்பவான்கள் எழுதலாம். அவர்களைப் பின்பற்றி நாம் எழுதவில்லையென்றால் நாம் தனித்தமிழ் வெறியர்களாக முத்திரை குத்தப்படுவோம். எனவே மாஜிக் ஸ்கொயர் என்றே மாற்றுவோம் :) --செல்வா 02:49, 18 நவம்பர் 2007 (UTC)
- "மாஜிக் ஸ்கொயர்"?? ஆமாம் தமிங்கிலத்துக்கென்று தனி விக்கிபீடியா ஒன்றையே தொடக்கி விடலாம்:)--Kanags 02:55, 18 நவம்பர் 2007 (UTC)
- மாயச் சதுரம் கூடுதலாகப் பொருத்தமாக இருக்கின்றது. Magic ஐ மஜிக், மாஜிக், மெஜிக், மேஜிக் என்றவாறு பலவாறும் பலுக்குவதால் இறுதியில் குழப்பதான் உண்டாகும். கட்டுரையின் தலைப்பை வேண்டுமானால் மாயச் சதுரம் என்றவாறு மாற்றிவிட்டு ஏனையவற்றிற்கு வழிமாற்றுப்பக்கங்கள் அமைக்கலாம். --உமாபதி 05:39, 18 நவம்பர் 2007 (UTC)
செல்வா - :) மாயச் சதுரம் என்று மாற்றி உள்ளேன். ஜாலம் = வித்தை என்று கொள்ளலாமா? விந்தை, வியப்பு = surprise, wonder, strange என்று பொருள் தருவதாகவே எனக்குத் தோன்றுகிறது. magic செய்தால் வியப்பு வரலாம்..ஆனால், magic என்பதைத் தனித்துக் குறிக்கும் சொல் இருக்கிறதா என்று அறிய ஆவல்--ரவி 16:12, 18 நவம்பர் 2007 (UTC)
recreational mathematics
[தொகு]recreational mathematics என்பதை மீளுருவாக்கக் கணிதன் என்று நேரடியாக மொழிபெயர்த்தால் recreation என்பதன் பொருள் வருவதாகத் தோன்றவில்லை. பொழுதுபோக்குக் கணிதம், மனமகிழ்க் கணிதம் போன்ற சொற்கள் நிறைவாய் இல்லை. படைப்பூக்கக் கணிதம்?--ரவி 19:28, 30 ஜூலை 2008 (UTC)