உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மாக் இயக்குதளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"graphical user interface-based operating systems" என்பதற்கு எளிமையாக வரைமுக இயக்குதளம் எனலாமா? அல்லது வரைதிறமிய பயனர் இடைமுகம் கொண்ட இயக்கு தளம் என்று ஆங்கிலத்தில் உள்ளவாறே நீட்டி வழங்க வேண்டுமா?--செல்வா 19:58, 16 டிசம்பர் 2008 (UTC)


வரைகலை பயனர் இடைமுகம் - Graphical User Interface (http://www.tcwords.com/). வரைகலை பயனர் இடைமுகம் உடைய இயங்குதளம் எனலாம். --Natkeeran 22:25, 16 டிசம்பர் 2008 (UTC)
வரைகலை+இடைமுக = வரைமுக என்றேன். இயங்குதளம் என்பதை இயக்குதளம் என கூறுதல் வேண்டும். வரைகலை பயனர் இடைமுகம் உடைய இயக்குதளம் எனக் கூறலாம், சற்றே நீளமாக இருப்பினும்.--செல்வா 22:47, 16 டிசம்பர் 2008 (UTC)
graphical என்பதற்கு "வரைகலை" எனப் பயன்படுத்துவது இங்கே பொருத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை. "வரைகலை பயனர் இடைமுகம் உடைய இயங்குதளம்" என்பது ஒரு நீளமான தொடராக இருக்கிறது. "வரைமுக இயக்குதளம்" விளக்கமாகவும், சுருக்கமாகவும் இருப்பதாக எனக்குப்படுகிறது. மயூரநாதன் 02:49, 17 டிசம்பர் 2008 (UTC)
ஆம், வரைகலை என்பது சற்று நெருடலான (பொருந்தாத) சொல். இதனாலேயே நான் வரைதிறமிய என்று முதலில் இட்டேன். வரைமுகம் என்பது சுருக்கமாகவும் உள்ளது. அதாவது அப்படியே ஆங்கிலத்தைத் தழுவி இருக்க வேண்டியதில்லை. --செல்வா 15:57, 17 டிசம்பர் 2008 (UTC)

Start a discussion about மாக் இயக்குதளம்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாக்_இயக்குதளம்&oldid=1015661" இலிருந்து மீள்விக்கப்பட்டது