பேச்சு:மாக்கின்டாசு கிளாசிக்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பு மாக்கின்டாசு கிளாசிக்கு என்று இருந்தால் நல்லது. குறிப்பாக மகின்- என்னும் எழுத்துக்கூட்டல் தமிழில் magin- என்று ஒலிக்கும் அல்லது mah*in என்று ஒலிக்கும். மக்கின் என்றோ மாக்கின் என்று ஒலிக்காது. McIntosh என்பது மேஅக்கின்டாஷ் என்பது போல ஒலிக்கும். கிளாசிக்கு என்று வல்லின ஒற்றுக்குப்பின் உயிர் சேர்த்துத்தான் தமிழில் எழுதுதல் வேண்டும். தமிழில் -ன்டா- போன்ற மெய்யொலிக்கூட்டமும் வராது. ஆகவே மாக்கிண்டாசு கிளாசிக்கு என்பது கூடிய அளவு சரியான எழுத்துக்கூட்டல். தமிழின் ஒலிப்பைக் கெடுக்காமல் எழுத வேண்டுவது தேவை (மற்றமொழிகள் போல் அன்றி தமிழில் ஒலிப்பு இடம்சார்ந்தது ஒழுக்கமானது. பத்து, பதுக்கு என்பதில் வரும் து இடம்சார்ந்து மாறி, ஆனால் ஒழுக்கமாக ஒலிப்பத. இதனைக் காத்தல் கடமை.--செல்வா (பேச்சு) 19:03, 11 ஏப்ரல் 2014 (UTC)