பேச்சு:மலையாளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலையாளம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மலையாளம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மொழிபெயர்ப்பு[தொகு]

இந்தக்கட்டுரை மலையாள விக்கிபீடியாவிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு :-) மொழிபெயர்க்கப்ப்ட்டது. எனக்கு தெரிந்த தமிழைக்கொண்டும்,செந்தமிழ் அகராதி, மலையாள அகராதி, சமஸ்கிருத அகராதி முதலியவற்றின் உதவிக்கொண்டே மொழிப்பெயர்த்தேன். எனவே மொழிப்பெயர்ப்பில் பெரும்(!) தவறுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு தவறுகள் நேர்ந்திருப்பின் பொறுத்தருளவும் வினோத் 17:21, 11 டிசம்பர் 2007 (UTC)

வினோத், என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். குறுகிய காலத்தில் எவ்வளவு செய்ய இயலும் என்பதை உங்கள் ஆக்கங்கள் ஐயம் திரிபற தெரிவிக்கின்றன. சிறு சிறு எழுத்துப் பிழைகள் உள்ளன, நான் இரண்டொரு நாட்களில் வந்து திருத்துகிறேன். பிறரும் செய்து உதவமுடியும். மீண்டும் என் பாராட்டுகள்!--செல்வா 17:44, 11 டிசம்பர் 2007 (UTC)
வினோத், செல்வாவின் பாராட்டுக்களை நானும் பகிர்ந்து கொள்கின்றேன். பேச்சுத் தமிழுக்கு கிப்ட்டியதான மலையாளம் பெருங்கட்டுரையாக ஆக்கியதற்கு வாழ்த்துக்கள். எழுத்துப் பிழைகளைச் சரிசெய்த்துகொள்ளலாம். --உமாபதி 17:50, 11 டிசம்பர் 2007 (UTC)
ஒரு Flowவில் மலையாளத்தை அப்படியே என்னால் எவ்வளவு தமிழ்ப்படுத்தமுடியுமோ தமிழாக்கிவிட்டேன். எனவே Flow பாதிக்காமல் இருக்க வடமொழிச்சொற்களை அப்படியே நிறைய கையாண்டுள்ளேன். அதை நீக்கிவிடுமாறு வேண்டுகிறேன் வினோத் 17:53, 11 டிசம்பர் 2007 (UTC)

please translate this sentence A public information board in Malayalam to Tamil. That will be good for TAMIL Wikipedia.. Regards :)... And Congrats to Pretty URL....--Sugeesh 18:10, 20 ஏப்ரல் 2010 (UTC)

மலயாளம் அல்லது மலையாளமா?[தொகு]

மலையாளம் என்று தமிழ் விக்கியில் உள்ளது ஆனால் மற்ற மொழிகளில் மலயாளம் என்றே உள்ளது (மலயாளம் உட்பட). தலைப்பை மாற்றலாமா?--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:15, 27 சூன் 2015 (UTC)[பதிலளி]

தமிழில் மலையாளம் என்று தானே தொன்று தொட்டு எழுதப்பட்டு வருகிறது?--Kanags \உரையாடுக 05:19, 27 சூன் 2015 (UTC)[பதிலளி]
தொன்று தொட்டு தவறாகவே எழுதப்பட்டு வருகிறது என்பதால் அப்படியே விட்டுவிட இயாலாதல்லவே. தவறு என்று இன்று ஒரு மலயாள விக்கி நண்பர் சுட்டிக்காட்டினார், அதனாலேயே இந்த கேள்வி எழுந்தது!--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:20, 27 சூன் 2015 (UTC)[பதிலளி]

 எதிர்ப்பு - பெரும்பாலான மலையாள மொழிச் சொற்களை நாம் அப்படியே அவர்களின் உச்சரிப்பின்படி தானா எழுதுகிறோம்? தெலுகை நாம் ஏன் தெலுங்கு என்று எழுதுகிறோம்? எதையும் நாம் எமது முறைப்படி தான் எழுத வேண்டும். மூலச் சொற்களின் ஒலிப்பு நமது பயன்பாட்டில் இருந்து வேறுபட்டால் அச்சொல்லையும் கட்டுரை ஆரம்பத்தில் தருவது தான் விக்கி நடைமுறை. அவ்வாறே கட்டுரையில் திருத்தம் செய்துள்ளேன். அதற்காக கட்டுரைத் தலைப்பையே மாற்றக் கோர முடியாது.--Kanags \உரையாடுக 22:00, 27 சூன் 2015 (UTC)[பதிலளி]

இது எல்லா மொழிகளிலும் இயல்பாக நடைபெறுவது தான். பார்க்க: பகுப்பு:கிரந்தம் பற்றிய உரையாடல்கள் --மதனாகரன் (பேச்சு) 03:14, 28 சூன் 2015 (UTC
மலையாளமே சரி மலையாளத்தில் ஐகாரத்தை அகரமாக ஒலிப்பர் எ.கா மலை=மல(മല) பனை=பன(പന) தென்னை=தென்ன(തെന്ന), இதை போலவே மலையாளம்=மலயாளம் சதீஸ் (பேச்சு) 16:02, 13 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலையாளம்&oldid=3781481" இலிருந்து மீள்விக்கப்பட்டது