பேச்சு:மலைப்பொழிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டெரன்ஸ் "பிரசங்கம்" என்பது சொற்பொழிவு தானே? "கொடுக்கப்பட்ட பிரசங்கம்" என்பதைக்காட்டிலும் "அளிக்கப்பட்ட சொற்பொழிவு" நன்றாக இருக்கும் என தோன்றுகின்றது. பிரசங்கம் என்பது அறிவுரை என்னும் கருத்தில் உள்ளதா எனவும் விளங்கவில்லை. 'காந்திக்கு அடுத்து நீங்கள் குறிப்பிட்டது உருசிய எழுத்தாளர் டால்ஸ்டாய் (Tolstoy, or Tolstoi) ஆ? --செல்வா 12:29, 22 மார்ச் 2007 (UTC)

சொற்பொழிவு என்பது பேச்சுப் போல கருத்தை தருகிறதா? ஏனெனில் மலைப் பிரசங்கம் என்பது பல நாட்களாக இயேசு அப்பிரதேசத்தில் வழங்கிய அறிவுரைகள், பேச்சுகள் கலந்துரையாடல்கள் என்பற்றின் தொகுத்த வடிவமாகும். அடுத்த கேள்வி ஆம் அவர் இரசிய எழுத்தாளர்தான்.--டெரன்ஸ் \பேச்சு 12:40, 22 மார்ச் 2007 (UTC)
அப்பொழுது அறிவுரை என்றே எழுதலாமே? பிரசங்கம் என்றால் சொற்பொழிவு (முன் நின்று உரை நிகழ்த்துவது).சொற்பொழிவு என்பது வெறும் பேச்சு இல்லை, கருத்தாழம் மிக்கவற்றை விரிவாக எடுத்துரைத்தல். பலநாட்களாக நிகழ்ந்ததெனில், சொற்பொழிவுகள் என்றும் கூறலாம் (பன்மை தேவை இல்லை - ஏனெனில் கூட்டாக அதனைக் கருத்டுவதால் - ஒரு தொடர் சொற்பொழிவுதான்). அடுத்து உருசிய (இரசிய) எழுத்தாலர் பெயரை டால்ஸ்ட்டாய் (அல்லது டோல்ஸ்ட்டாய்) என்பது போல் மாற்றவேண்டும்.--செல்வா 12:56, 22 மார்ச் 2007 (UTC)
மலைச் சொற்பொழிவு என்பது போல மாற்றலாமா? மலைப் பிரசங்கம் எண்ரும் சிலர் தேடலாம் ஆகவே அது பக்க வழிமாற்றாக இருக்கட்டும்.--டெரன்ஸ் \பேச்சு 14:19, 22 மார்ச் 2007 (UTC)
மலைச் சொற்பொழிவு என மாற்றலாம் என்பதுதான் என் கருத்தும். மலை பிரசங்கம் என்பதற்கு வழிமாற்று தருவதும் நல்லது. --செல்வா 14:24, 22 மார்ச் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலைப்பொழிவு&oldid=710826" இருந்து மீள்விக்கப்பட்டது