பேச்சு:மறவர் (இனக் குழுமம்)

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்பகமற்றச் செய்தி[தொகு]

முக்குலத்தோர் மூவேந்தர்களின் வழிதோன்றல்கள் என்று கோரபடுவதற்கு சான்றுகள் இல்லை. மூவேந்தர் வம்சங்களில் ஒன்றான பாண்டிய வம்சம் பரதவர் இனக்குழுவைச் சேர்ந்ததாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதை அறிஞர்கள் ஊகித்திருகிரார்கள். --Cangaran (பேச்சு) 14:37, 23 ஏப்ரல் 2013 (UTC)Reply[பதில் அளி]

தங்கள் கருத்துக்கு நன்றி! விளக்கமாகக் கூறமுடியுமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:44, 23 ஏப்ரல் 2013 (UTC)Reply[பதில் அளி]

இதைப் போன்ற சாதிய கருத்துகள் விக்கியில் சேர்ப்பது உகந்ததல்ல. மூவேந்தரில் குறிப்பாக பாண்டியரை மறவர், பள்ளர், நாடார், பரதவர் என இன்னும் பல பிரிவுகள் தாங்கள் தான் எனக் கூறிக் கொள்கிறார்கள். எதற்கும் சான்று இல்லை. விக்கிப்பீடியா சாதிக் கட்டுரைகளை நூலாக வெளியிடும் அச்சகம் அல்ல என்பதை நினைவுருத்துகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:54, 23 ஏப்ரல் 2013 (UTC)Reply[பதில் அளி]

எனக்கு இது தொடர்பாக நீண்ட நாளாக மனவுளைச்சல், எங்கே அவர்கள் கண்டதையும் எழுதி விக்கியின் நம்பகத்தைக் குலைத்து விடுவார்களோ என்று! முதலில், சாதிகள் தொடர்பான கட்டுரையில் ஆதாரமற்ற கருத்துக்களை நீக்குங்கள், நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:48, 24 ஏப்ரல் 2013 (UTC)Reply[பதில் அளி]


ஆவணப்படுத்தப்படாத நம் வரலாறு[தொகு]

மேற்கத்தியர்களைப் போன்ற விரிவான ஆவணப்படுத்தும் மரபு நம்மிடம் இல்லாததால் இது போன்ற மயக்கம் ஏற்படுவது இயல்பே. நம்மை புரிந்து கொள்ள நம் கடந்த காலத்தைப் புரிந்துகொள்வது அவசியம். சாதியை குறித்த கருத்துகள் விக்கியில் எழுதுவது தவறல்ல அது அவசியமும் கூட. சாதி பற்றி அடிப்படை புரிதலுக்கும் சாதி பற்றிய விக்கி கட்டுரைகளில் நடுநிலைமை தவறாமல் அமையவும் டி .டி .கோசாம்பி போன்ற வரலாற்றாசிரியர்களின் நூல்கள் உதவும்.

தமிழ் மன்னர்களைப் பற்றிய கட்டுரைகளுக்கும் சாதிகளை பற்றிய கட்டுரைகளுக்கு இக்கட்டுரை வழிகாட்டியாக(guideline) அமையும்.இந்த கட்டுரையாசிரியர் "மூவேந்தர்கள் குறிப்பிட்ட சாதியினர் அல்ல. அவர்கள் எந்தச்சாதியிலும் இருக்கவில்லை. அவர்கள் தனித்தனி குலவரிசையினர்" என்று கூறுகிறார். --Cangaran (பேச்சு) 15:47, 29 ஏப்ரல் 2013 (UTC)Reply[பதில் அளி]

👍 விருப்பம் விக்கிப்பீடியா ஆதரவுக் களமல்ல. எனினும், ஒவ்வொன்றையும் பற்றி மறவாமல் குறிப்பிட்டு ஆவணப்படுத்தல் சரியே. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:56, 29 ஏப்ரல் 2013 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம் விக்கிப்பீடியா சாதிய அமைப்புகளுக்கு ஆதரவு களமல்ல,அப்படி ஒரு குறுகிய சிறு வட்டத்திற்குள் அடைபட முடியாது எனினும், ஒவ்வொன்றையும் பற்றி மறவாமல் குறிப்பிட்டு ஆதரத்துடன் ஆவணப்படுத்தல் சரியே நன்றியுடன்.--யோகி சிவம் 17:39, 29 ஏப்ரல் 2013 (UTC)

நான் சாதிய கருத்துகள் என்று கூறியது தங்கள் சாதி பற்றிய வரலாற்றை மிகையாக காட்டும் நூல்களை பற்றிச் சொன்னேன். ஒரு ஜாதி உருவானதற்கு அந்தந்த ஜாதிக்காரர்கள் ஒரு கதையை நிச்சயமாக வiத்திருப்பர். அவை அனைத்து விக்கிக் கட்டுரைகளிலுமுள்ளன. அவை ஏற்கத்தக்கது தான்.

ஆனால் பாண்டியர் மறவர் வம்சத்தவர், இதே போல பரதவர்/மள்ளர்/நாடார் போன்றவற்கள் தாம் பாண்டிய வம்சத்தை தோற்றுவித்தவர்கள் போன்ற ஆதாரமற்ர செய்திகளை எல்லாம் நீக்கித்தான் ஆக வேண்டும். இன்னொருவர் சிவன் மள்ளர், பார்வதி மள்ளர், முருகன மள்ளர் என்றெல்லாம் விக்கிப்பீடியாவில் எழுதுகிறார். இது போன்றவற்றை எல்லாம் நிச்சயம் ஏற்க முடியாது.

மேலும் ஒரு ஜாதி பற்றிய தொன்மத்தை எந்த மூலத்தில் இருந்து எடுத்தனர் என்று தெளிவாக சுட்ட வேண்டும். அது செவி வ்ழிச்செய்தியா? கரணபரம்பரைக் கதையா? செப்பேடுகளில் குறிக்கப்பட்டவையா என்று தெளிவுற குறிக்க வேண்டும். இவை எல்லாம் இல்லாமல் எழுதியதை நான் நீக்கியிருந்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:04, 29 ஏப்ரல் 2013 (UTC)Reply[பதில் அளி]

விக்கிப்பீடியாவில் ஆவணப்படுத்துகிறேன் என்ற பெயரில் கண்டதையும் எழுதுவதை அனுமதிக்கக் கூடாது. கூடுமானவரை இதை ஒரு கல்விக்கான உதவித் தளமாக அமைத்தால் நோக்கம் நிறைவேறும். சில வேளைகளில், ஒரு சிலர் நாம் இல்லாத சமயத்தில் பிரபலமான நடிகர், அரசியல்வாதி பற்றி அசிங்கமாக எழுதிவிடுவர். ஒருவேளை அவை நம் கண்களில் படாமல் இருந்தால், நாம் தான் எழுதினோம் என்று யாராவது சண்டைக்கு வந்துவிடுவார்கள். முடிந்தவரை, ஆதாரங்கள் இல்லாத சர்ச்சைக்குரிய கட்டுரைகளைப் பட்டியலிட்டி நமது கவனிப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். பாதுகாப்பு அவசியம். :) (ஏற்கனவே, முன்பு ஒரு முறை எவனோ ஒருவன், நாம் அறியாத மொழியில் பாவாணரைத் திட்டி எழுதிவிட்டு அதன் இணைப்பாக தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையை இணைத்து விட்டான். தமிழ் அறிஞர்கள் தமிழ் விக்கிப்பீடியாவினரைத் தவறாகப் புரிந்து கொண்டனர். கண்டனம் தெரிவித்தனர். பின்னரே, அவனுக்கும் விக்கிப்பீடியாவிற்கும் சம்பந்தம் இல்லை என்றும், பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்ததால், அதை விக்கிப்பீடியா என நம்பி ஏமாந்து விட்டனர் என்பதையும் புரிய வைத்தோம். பின்னரே, நம் நல்ல உள்ளத்தைப் புரிந்து கொண்டார்கள் அறிஞர்கள். இது போல் இனியும் நடக்காமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய கருத்துக்களில் கவனம் தேவை. )-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:37, 30 ஏப்ரல் 2013 (UTC)Reply[பதில் அளி]

பாண்டியர் - மறவர் ஆராய்ச்சி கருத்துகள் தொடர் இற்றை- காப்புப் போடலாமா?[தொகு]

அடையாளம் தெரியாத பய்னர்கள் மறவர் மன்னர் குடும்பங்களில் பாண்டியரையும் சேர்த்து வருகின்றனர். 4 முறை இதைப் போல் நடந்துவிட்டது. புகுபதிகை செய்தவர் மட்டும் இதை தொகுக்குமாறு மாற்றிடலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:56, 3 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]

அம்பலக்காரர்[தொகு]

@Gowtham Sampath:,@AntanO:,@Nan: சூரியனூரில்(திருச்சி மாவட்டம்) இருக்கும் அம்பலக்காரர்கள் முத்துராஜா சமூகத்தை சார்ந்தவர்கள்.அது மட்டுமின்றி தமிழகத்தில் அம்பலகாரர் என சான்றிதல் வாங்குவோர் முத்துராஜா மட்டுமே ஆதலால் அதை நீக்கிவிடுங்கள்.ஜெ.கலையரசன் (பேச்சு) 12:50, 5 பெப்ரவரி 2019 (UTC)Reply[பதில் அளி]

ஜமீன்[தொகு]

நெல்லை "சிங்கம்பட்டி ஜமீன்" மன்னர் இந்தியாவில் அரசாங்கத்தால் ஏற்று கொள்ள பட்ட இன்னும் வாழுகின்ற மன்னர் வம்சாவழிகள். மறவர் இன சமூகத்தவர். இவருடைய நிலம் 84000 ஏக்கர் என்று அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு கையகப்படுத்தப்பட்டது. மேலும், தென்பொதிகை மலையில் இவருக்கென்ற நிலத்தினை அரசாங்கம் இவரிடமே கொடுத்திருக்கின்றது. RajaMaga (பேச்சு) 04:42, 23 அக்டோபர் 2019 (UTC)Reply[பதில் அளி]