பேச்சு:மறதிநோய்
இந்த நோயின் பெயரை தமிழில் சில இடங்களில் 'ஞாபக மறதி' எனக் கண்டேன். இந்நோய் முதியவர்களில் இயற்கையாக ஏற்படும் நிலையை ஒத்திருக்கிறதேயன்றி, முதியவர்களில் மட்டுமே ஏற்படும் நோயன்று. தவிர 'முதுமை மறதி' என்று குறிப்பிடும்போது, அது முதியவர்களில் இயற்கையாக ஏற்படும் நிலையைக் குறிப்பதாகத் தோன்றுகிறது. எனவே இதனை 'மறதி நோய்' என்றோ அல்லது 'ஞாபக மறதி நோய்' என்றோ குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். அதனை மாற்றுவதற்கு முன்னர் ஏனையோரது கருத்துக்களை வேண்டுகின்றேன். --கலை 10:52, 15 ஆகஸ்ட் 2010 (UTC)
- மாற்றலாம் என்பதே என் கருத்தும் --குறும்பன் 19:24, 16 ஆகஸ்ட் 2010 (UTC)
- இக்கட்டுரையில் இந்நோய் மறதியை அதிகமாகக் குறிப்பிடுகிறது. இந்நோய் வயதானவர்களுக்கு மட்டும்தான் வரும் என்கிற நிலையில்லை. எனவே கட்டுரையை பெயர் மாற்றம் செய்யலாம். மறதி என்பது நன்றாக இருக்கும் பலருக்கும் அவ்வப்போது நிகழ்வதுதான். இந்நோயாளிகள் தங்கள் ஞாபகத்தை இழந்து விடுவதால் மறதி நோய் அல்லது ஞாபக மறதி நோய் என்பதை விட ஞாபக இழப்பு நோய் என்று பெயர் மாற்றம் செய்வதே பொருத்தமானதாக இருக்கும் என்பது என் கருத்து. --தேனி.எம்.சுப்பிரமணி. 01:26, 17 ஆகஸ்ட் 2010 (UTC)
கலை, மறதிநோய் என்று மாற்றலாம் என்பது என் கருத்து. மறதி என்பதே ஞாபகம், இழப்பதுதானே! சுருக்கமான எளிய சொல். தமிழில் மறவி என்றாலும் மறதியே. நற்றிணையில் மறவி என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது (பெருமறவியையோ), நன்னூலில் உடலில் தோன்றும் 32 இயல்புகள் பற்றிக் கூறுவதில் மறவி என்பதையும் குறிப்பிடுகின்றது. பார்க்கவும் 452 ஆவது பாடல்: (32 இயல்புகள்:அறிவு ,அருள் , ஆசை ,அச்சம் ,மானம் ,நிறை ,பொறை ,ஒர்ப்புக், கடைப்பிடி மையல் ,நினைவு ,வெறுப்பு ,உவப்பு ,இரக்கம் ,நாண் ,வெகுளி ,துணிவு ,அழுக்காறு ,அன்பு , எளிமை ,எய்த்தல் ,துன்பம் ,இன்பம் ,இளமை ,மூப்பு ,இகல் ,வென்றி , பொச்சாப்பு ,ஊக்கம் ,மறம் ,மதம் ,மறவி)
அறிவரு ளாசை யச்ச மான
நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்புவப் பிரக்கநாண் வெகுளி
துணிவழுக் காறன் பௌ¤மை யெய்த்தல்
துன்ப மின்ப மிளமை மூப்பிகல்
வென்றி பொச்சாப் பூக்க மறமதம்
மறவி யினைய வுடல்கொ ளுயிர்க்குணம்.
திருக்குறளிலும் நெடுநீர் மறவி (நீட்டித்துச் செய்யும் வழக்கம் பற்றி, procrastinate) என்பதற்குப் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம் (அதாவது உடன் வினையாற்றாது மறந்து பின் செய்வதை நெடுநீர் மறவி என்கிறார்).
ஆகவே கட்டாயம் பயன்படுத்தலாம்.
--செல்வா 13:27, 19 ஆகஸ்ட் 2010 (UTC)
- மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் முதுமை மறதி கட்டுரையின் தலைப்பை இந்த மறதிநோய் தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன்.--கலை 08:34, 20 ஆகஸ்ட் 2010 (UTC)
Dementia என்பது மறதி மட்டுமல்ல. எனவே வேறு பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு.--G.Kiruthikan (பேச்சு) 07:48, 10 சூன் 2019 (UTC)
- dementia என்பது மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியம், அசதிக் கோளாறு, முதுமை மறதி, அறிவாற்றல் இழப்பு, உளத் தளர்ச்சி, மூளைத்தேய்வு என பல பெயர்கள் உள்ளன. மறதிநோய் என்பது இதற்கு பொருத்தமான பெயர் தானா??@கலை, Kanags, and AntanO:-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:39, 10 சூன் 2019 (UTC)
- உலக சுகாதார அமைப்பினால் Dementia விற்கு கொடுக்கப்பட்டுள்ள வரைவிலக்கணமானது பின்வருமாறு இருக்கின்றது. Dementia is a syndrome in which there is deterioration in memory, thinking, behaviour and the ability to perform everyday activities.[1] அத்துடன் அதே பக்கத்தில் இவ்வாறும் கூறப்பட்டுள்ளது. Dementia has a physical, psychological, social, and economic impact, not only on people with dementia, but also on their carers, families and society at large.
- எனது புரிதலின்படி, Dementia என்பது ஞாபகம் அல்லது சிந்தனைத் திறனில் ஏற்படும் இழப்பு, அதாவது மறதி. அந்த மறதி காரணமாக Dementia வந்தவர்களுக்குச் சிந்தனைக் குழப்பங்கள் ஏற்படுவதனால், அவர்களது நடத்தையில் மாற்றங்களும், அவர்கள் தமது நாளாந்த வாழ்வினைச் சரியாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களும் ஏற்படுகின்றன. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் உடல், உள, சமூக, பொருளாதாரப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. எல்லாவற்றிற்கும் அடிப்படை இந்த மறதியே.
- கௌதம் 💓 சம்பத்! Dementia வை மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியம், அசதிக் கோளாறு, அறிவாற்றல் இழப்பு, உளத் தளர்ச்சி, மூளைத்தேய்வு என்று நேரடியாகக் கூற முடியாது என்றே நினைக்கின்றேன். அத்துடன் முதுமையிலும் Dementia ஏற்படும் என்றாலும், அதனை முதுமை மறதி என்று கூற முடியாது. அதே பக்கத்தில், Although dementia mainly affects older people, it is not a normal part of ageing. என்று இருப்பதையும் பார்க்கலாம்.
- மறதி என்பது பொருத்தமான தலைப்பாகவே எனக்குத் தோன்றுகின்றது. எதற்கும் மருத்துவக் கலைச்சொல்லாக்கத்தில் முன்னர் பங்களித்த வேறு இருவரிடம் கேட்டுப் பார்ப்போம்.
- @Drsrisenthil and Nan: --கலை (பேச்சு) 11:09, 10 சூன் 2019 (UTC)
- சிந்தனையில் கோளாறு (thought) மற்றும் ஞாபகப்படுத்தலில் கோளாறு (difficult to remember) இவை இரண்டும் மற்றும் வேறு சில அறிகுறிகளும் Dementia--க்குள் அடங்கும். ஆதலால் Dementiaவை "மறதி" எனும் சொல்லுக்குள் மட்டும் அடக்கிவிட முடியாது. மறதி என்பதற்குப் பொருத்தமானது Amnesia.
dementia - பல அறிகுறிகளைக் கொண்டது. amnesia - ஒரு அறிகுறி மட்டுமே. Dementiaவுக்குள் amnesia அடங்குகின்றது.
- அமெரிக்க Diagnostic and Statistical Manual of Mental Disorders, Fifth Edition (DSM-5) - இல் dementia எனும் சொற்பதம் நீக்கப்பட்டு (DSM -4 இல் dementia இருந்தது), அதற்குப்பதிலாக major or mild neurocognitive disorder (major NCD, or mild NCD) எனப் பயன்படுத்தப்படுகின்றது.
- (Delirium போன்ற இவற்றுடன் தொடர்புடைய அனைத்துச்சொற்களையும் சேகரித்து உகந்த சொல்லாக்கம் செய்தல் வேண்டும்..!) பின்னர் ஒரு சமயத்தில் சொல்லாக்கத்துடன் வருகின்றேன்.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 04:10, 20 சூன் 2019 (UTC)
- @கலை:மறதிக் கோளாறு நோய் என்பதை பயன்படுத்தி உள்ளார்கள். இச்சொல்லாக்கத்தையே பயன்படுத்தலாமே.--நந்தகுமார் (பேச்சு) 10:30, 24 சூன் 2019 (UTC)