பேச்சு:மரபியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png மரபியல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மரபுப் பொருளியல் Genomicsக்கு சரியான மொழிபெயர்ப்பாக இருக்காது. இது குறித்து TVU உட்பட பல தளங்களில் தேடியும் சரியான மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை. நான் எழுதிய இன்னொரு கட்டுரையில் Genomeஐ மரபு ரேகை எனக் குறிப்பிட்டிருந்தேன். கை ரேகை ஒருவனை அடையாளம் காட்டவல்லது போல Genomeம் ஒரு உயிரினத்தை அடையாளம் காட்டவல்லது என்பதால் மரபு ரேகை என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அனைவரின் கருத்தையும் அறிய ஆவல்.

Interesting translation. If noone has translated that before, you can start using it with the English translation in brackets. -- Sundar 11:31, 21 ஜூன் 2005 (UTC)

Nature Genetics போன்ற இதழ்களின் பெயர்களை ஒலிபெயர்த்து எழுதி அதன் தமிழாக்கத்தை அடைப்புக்குறிக்குள் மட்டும் தரலாம் என நினைக்கிறேன். ஏனெனில், Ney york Times இதழை நியூ யார்க் நேரங்கள் என்று மொழி பெயர்த்தால் வேடிக்கையாக இருக்கும். இதைப் பற்றிய கலந்துரையாடலுக்குப் பின் , வழிகாட்டல்களை நடைக்கையேட்டில் சேர்க்கலாம்.

I realised only late. You can change that to a transliterated version or even the English version is fine. -- Sundar 11:31, 21 ஜூன் 2005 (UTC)

Thank you very much for the translation--ரவி (பேச்சு) 10:07, 21 ஜூன் 2005 (UTC)

:-) -- Sundar 11:31, 21 ஜூன் 2005 (UTC)
மரபன் (ஜீன்)

இது குறிப்பிட்ட பண்பை அல்லது பண்புக்கூறை மரபுப்பேறு வழியாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் உயிரியல் அலகு.மொழியியலில் ஒலியின் அலகு ஒலியன் எனவும் சொல்லுறுப்பின் அலகு உருபன் எனவும் அழைக்கப்படுவதைப்போல குறிப்பிட்ட பண்புக்கூறை மரபுவழிக் கடத்தும் அலகு மரபன் ஆகும். இது முன்பு மரபணு என மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மரபன்தொகை (ஜீனோம்)
இது குறிப்பிட்ட உயிரியின்  மொத்த மரபன்களின் துகுப்பு ஆகும். மாந்த மரபன்தொகையில் 23000 மரபன்கள் 23 பண்பக இணைகளில் (குரொமொசோம்களில்) அடங்கியுள்ளன. எனவே ஜீனோம் என்ற சொல்லுக்கு மரபன்தொகை என்பதே பொருத்தமான சொல்லாகும். முன்பு இது மரபணுத் தொகுதி என மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.


பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 02:00, 14 மே 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மரபியல்&oldid=1837298" இருந்து மீள்விக்கப்பட்டது