பேச்சு:மரபணு மாற்றுப் பயிர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரபணு மாற்றுப் பயிர் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மரபணு என்பதை மரபீனி என்றும் சிலர் வழங்குகின்றார்கள். மரபுப் பண்புகள் ஈனும் (தரும்) பகுதி (gene) என்னும்படி அழகாகவே இருப்பதாக நான் கருதுகின்றேன். இச்சொல்லை நான் உருவாக்கவில்லை :) மரபீனி மாற்றிய பயிர் என்றும் கூறலாம் என நினைக்கின்றேன். கூகுளில் தேடியபொழுது இவை கிட்டியன --செல்வா 15:39, 10 பெப்ரவரி 2010 (UTC)

செல்வா! நீங்கள் குறிப்பிட்ட இணைப்புகளைக் கண்டேன்; மரபீனி என்பது transgenic என்ற பொருளில் வந்துள்ளதோ என்று எண்ணுகிறேன். --பரிதிமதி 17:57, 10 பெப்ரவரி 2010 (UTC)

மரபீனி, மரபணு, மரபின் அலகாக அமைவதால் மரபன் ஆகிய மூன்று சொற்களுமே gene என்ற சொல்லின் இணைகளாக வழக்கில் உள்ளன. Transgenic என்பது மரபணு மாற்ற பொருள்படும்.இதுவும் modified genetic என்பதன் மற்றொரு இணையே. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:31, 3 சூலை 2015 (UTC)[பதிலளி]